Kuruvi

157 Articles written
Tamil news

பாரிஸ்: தமிழர் வேலை செய்யும் உணவக அசம்பாவிதம்! ஒருவர் பலி!

Paris restaurant incident news பாரீஸ் நகரில் உணவம் ஒன்றில் கார் ஒன்று வேகமாக மோதிய சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மூவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். தீவிர தேடுதல் நடவடிக்கை குறித்த சம்பவத்தை அடுத்து, அந்த...

பாரிஸ் தமிழ் குடும்பஸ்தர் இழந்த மூன்று கோடி!

France paris tamil news - பாரிஸில் தமிழ் குடும்பஸ்தர் இழந்த மூன்று கோடி!  பிரான்ஸில் இருபது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் 3 கோடி ரூபா பணத்தை இழந்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது..  பாரிஸில் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை ஊரில் உள்ள தனது சொந்த மூத்த சகோதரியிடம்கொடுத்துள்ளார்.குறிப்பிட்ட காலத்தின் பின்னர் ஊருக்கு வந்து ஊரோடு வாழ்வதே தனது விருப்பம்என்றும்,அதற்கு ஒரு நல்ல காணி,அதில் அளவான ஒரு வீடு,தென்னை வேம்பு,பழ மரங்கள் , காய்கறிகள் எனஈழத்தில் வாழ ஆசைப்பட்டு பணத்தை பகுதி பகுதியாக அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற மூத்த சகோதரி , கொஞ்சம் கொஞ்சமாக அதனை சொந்த காரியங்களில்செலவழிக்கலானார்.அப்பப்ப காசு கதை எடுக்கும் போதெல்லாம் அதெல்லாம் அப்படியே கிடக்கு என கூறிவந்துள்ளார். சொந்த அக்காவிடம் கணக்கு கேக்க விருப்பமில்லாமல் இருந்த நிலையில், குடும்பஸ்தரின் மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது,அவர் நேரிடையாக ஊருக்கு நாங்க வந்து காணி வாங்கபோறம், காசை எடுத்து தாங்க என கேட்ட பொழுது , குறித அக்காகாரி , அவரிடம் சண்டை போட்டுள்ளார்.இதுதனது தம்பி பணம்,அக்கா தம்பிக்கிடையில் வேறு யாரும் வர வேண்டாம் என கூறியுள்ளார். France paris tamil news அதற்கிடையில் குடும்பஸ்தர் மனைவி நீங்க காசு தந்துட்டு வாயை காட்டுங்கோ என கூற மேலும் சண்டைஇறுகி,தற்போது பேசாமல் இருக்கிறார் அக்கா.. தெரிந்த உறவுகள் மூலம் காசை தருமாறு தம்பிகெஞ்சியுள்ளார்..அதற்கு அக்கா,உன்னால் ஊரில் என் மரியாதை போச்சு,அதற்கு எத்தனை கோடிகொடுத்தாலும் பத்தாது,மான நஷ்ட கணக்கு நீதான் தர வேண்டும் என உறவுகளிடம் கூறியுள்ளாராம்.. கருத்து- பணம் பத்தும் செய்யும்,உறவுகளை பிரிக்கும்,மனிதர்களை கெடுக்கும்.காசு அளவோடு இருப்பதுநல்லது அதிகமானால் அதனால் வரும் தொல்லைகளையும் சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும். https://citytamils.com/resultats-bac-2024-pour-lacademie-de-lille-decouvrez-la-liste-des-admis https://citytamils.com/france-election-results-and-latest-updates-in-tamil-july-8

Résultats du baccalauréat 2024 pour l’académie de Lille

resultats bac 2024 - Un moment toujours très attendu, et aussi redouté. Les résultats du baccalauréat sont annoncés ce lundi 8 juillet à 13h30...

French Election Turnout Highest in 43 Years: Far-Right Falls Short

French Election Turnout Highest in 43 Years French Election Turnout Highest in 43 Years ; In an unexpected twist, the French election witnessed the highest...
City news
Kuruvi

பாரிஸ் 14 வயது தமிழ் சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில்!

பாரிஸை சேர்ந்த 14 வயது தமிழ் மாணவன் ஒருவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் அதிக குளிர்பானம் குடிப்பது தொடர்பாக அடிமையாக இருந்துள்ளதாகவும் பெற்றோரும்கண்டுகொள்ளாமல் விட்டிருக்கின்றனர்... தொடர்ச்சியாக இனிப்பு குளிர் பானங்களை அருந்துவது கல்லீரலை பாதிக்கிறது. சிறு வயதாக இருந்தாலும்இப்போது இந்த மாதிரி வருத்தங்கள் வர தொடங்கியுள்ளது.காரணம் ஆரோக்கியமற்ற உணவுகள் தவறானவாழ்க்கை முறை காரணமாக நோய்கள் சிறுவயதிலேயே பெரிதாக தொடங்கியுள்ளது.. தமிழ் பெற்றோர்கள் குறிப்பாக தாய்மார்கள் அவதானமாக இருங்கள்..பிள்ளைகளுக்கும் கணவருக்கும் எதுஎன்றாலும் ஆரோக்கியமான வீட்டு சாப்பாட்டை சமைத்து கொடுங்கள்...கண்டபடி வெளியில் சாப்பிடவிடாதீர்கள்...தொடர்ச்சியாக அவர்களின் உணவு பழக்கவழக்கங்களை கண்காணியுங்கள்...  முக்கிய குறிப்பு : இதனுடன் தொடர்புடைய எச்சரிக்கை பிரான்ஸ் அரசு ஏற்கனவே இரு தடவைகள் விடுத்திருந்தது 2022,2023 களில் நாமும் எமது தளத்தில் வெளியிட்டிருந்தோம்..நீங்கள் எத்தனை பேர் பாத்தீர்கள் என்று தெரியவில்லை..இப்போது...
Kuruvi

பிரான்சில் வேலைவாய்ப்பு இழப்பீடு தொடர்பில் காசு வசூல்! அரசு எச்சரிக்கை

ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களுக்கு சிக்கல்: தவறான தகவல் தொடர்பால் அதிகப்படியான தொகை வசூல் பிரான்ஸ் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் (France Travail) ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களுக்கு சிக்கல்ஏற்பட்டுள்ளது. ஓய்வூதியம் மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் (caisses de retraite et l'opérateur chargé de l'indemnisation)  தவறான தகவல் தொடர்பால், நூற்றுக்கணக்கான மூத்த குடிமக்களிடம் அதிகப்படியானதொகை வசூலிக்கப்படுகிறது.  இந்த சிக்கலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர், வேலைவாய்ப்பு இழப்பீடுகளில் ஏற்படும் பிரச்சனைகளைஆராய்ந்து அறிக்கை தயாரிக்கும் பொறுப்பான  மத்தியஸ்தர் ஜீன்-லூயிஸ் வால்டர் (Jean-Louis Walter) ஆவார். 2024 ஆம் ஆண்டுக்கான அவரது அறிக்கையில், 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, பிரான்ஸ் முழுவதும் உள்ள பிராந்திய மத்தியஸ்தர்களுக்கு "பல ஆயிரக்கணக்கான யூரோக்கள்" வரைவசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  இந்த அதிகப்படியான தொகை வசூலிப்புக்கு காரணம் என்ன? 62 வயதிலிருந்து 67 வயது வரை முழு ஓய்வூதியம்பெறத் தகுதியில்லாத மூத்த குடிமக்களுக்கு, ஓய்வூதியம் கிடைக்கும் வரை வேலைவாய்ப்பு இழப்பீடுவழங்கப்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வேலைவாய்ப்பு ஆலோசகர்கள், வேலைநாள் பதிவேட்டில்(relevé de carrière) உள்ள தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, தவறான தேதியை பதிவுசெய்கின்றனர்.  ஓய்வூதிய நிறுவனங்கள் மறுபரிசீலனை செய்து, 65 அல்லது 66 வயதில் முழு ஓய்வூதியம் பெறத்தகுதியுள்ளவர்கள் என உறுதி செய்தால், வேலைவாய்ப்பு நிறுவனம் ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்த வேண்டும்.  ஆனால், ஓய்வூதிய நிறுவனங்கள் தகவல்களை தாமதமாக அனுப்புகின்றன. இதனால், வேலைவாய்ப்பு நிறுவனம்ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்த தவறி, அதிகப்படியான தொகை வசூலிக்கப்படுகிறது.  மேலும், ஓய்வூதிய நிறுவனங்கள் பின்னோக்கி ஓய்வூதியம் வழங்கும் வழக்கம் இல்லை. அதாவது, அதிகப்படியாகவசூலிக்கப்பட்ட தொகையை திரும்பப் பெற முடியாது.  இந்த சிக்கலைத் தவிர்க்க, ஓய்வூதிய நிறுவனங்களால் வழங்கப்படும் "சோமேஜ் இண்டெம்னிஸே: ரெகுலரைசேஷன் டி கரியர்" (Chômage indemnisé : régularisation de carrière) என்ற சான்றிதழை பெறுவதுஅவசியம்.  இந்த சிக்கலால் பாதிக்கப்பட்டவர்களை France Travail தொடர்பு கொள்ளும். பாதிக்கப்பட்டவர்கள்,  மத்தியஸ்தரை அணுகி கடன் தள்ளுபடி கோரலாம்.
Kuruvi

பிரான்ஸில் மாணவி காதலை மறுத்த மாணவர் கடத்தி தாக்குதல்!

மே 5, 2024 அன்று மாலை 3:30 மணியளவில், பிரான்ஸ் ரைம்ஸில் உள்ள தனது வீட்டிற்கு முன்னால் 16 வயதுசிறுவன் அடையாளம் காணப்பட்ட நபரால் கடத்தப்பட்டார். இவரை ஐந்து பேரால்  Clio வாகனத்தில் கடத்திச்செல்லப்பட்டார்.  முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவம் "காதல் தோல்வி" தொடர்பான பழிவாங்கும் நடவடிக்கையாகஇருக்கலாம் என்று கருதப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் ஏற்கனவே உறவில் இருந்த நிலையில், ஒரு இளம்பெண்ணின் காதலை  நிராகரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர், குறிப்பாக சகோதரர், மற்றும் தாய் ஆகியோர் இந்த தாக்குதலை திட்டமிட்டிருக்கலாம் எனசந்தேகிக்கப்படுகிறது.  தாக்குதலின் போது, சிறுவன் காரில் தாக்கப்பட்டு, பின்னர் அலெயின் பொல்லியார்ட் தெருவில் உள்ள ஒருஅடுக்குமாடி கட்டிடத்தின் பாதாள அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மேலும் தாக்குதல்கள்நடத்தப்பட்டன. பின்னர், ரு அராகோ தெருவில் விடுவிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.  சிறுவனுக்கு உடல் முழுவதும் பல காயங்கள், மூக்கில் பல உடைப்புகள், வலது முதுகில் 5 வெட்டு மற்றும் அறிவுமற்றும் நினைவு இழப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளன. தற்போது சந்தேக நபர்கள் தீவிரமாக தேடப்பட்டுவருகின்றனர். பாதிக்கப்பட்டவரிடம் இன்று மதியம் விசாரணை நடத்தப்படவுள்ளது. 
Kuruvi

பாரிஸ் சுப்பர்மார்கெட்டுகள் தொடர்பில் அரசு எச்சரிக்கை!

பிரான்ஸ் சுப்பர் மார்க்கெட்டுகளில் இனி இந்த கள்ள வேலை செய்தால் 15000€ வரை அபராதம் என அரசுபுதிய வர்த்தமானியில் திருத்தியுள்ளது. பொருட்களில் விலைகள் அருகே நிறைகளை சரியாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சுப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்கள் விலை அதிகரிக்கும் போது நிறைகளை குறைத்து அதேவிலையில் விற்று வரும் ஒரு முறை பரவலாக பாரிஸ் வர்த்தகர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை நீங்கள்அறிந்ததே... இனி வரும் காலங்களில் இந்த மாதிரி எதாவது புத்திசாலிதனமாக செய்ய வெளிகிட்டால் அபராதம்கட்டவேண்டி வரும்...
Kuruvi

பாரிஸில் திடீரென மூடப்படும் மெட்ரோ தரிப்பிடங்கள்!

சீன ஜனாதிபதி திரு. ஷி ஜிンピங் அவர்கள் ஞாயிறு முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை பாரிஸுக்கு அதாவது அதிகாரப்பூர்வ, அதாவது விஜயம்) மேற்கொண்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த வருகையின் போது மேற்கு பாரிஸில் உள்ள பல மெட்ரோ...
Kuruvi

பாரிஸில் பயங்கர துப்பாக்கி சூடு! மூவர் பலி!

தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கின்ற பாரிஸின் புறநகரப் பகுதியாகிய செவ்ரோனில் (Sevran-Seine-Saint-Denis) கடந்த 48 மணிநேர இடைவெளியில் அடுத்தடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மூவர் உயிரிழந்துள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர். போதைப் பொருள் கடத்தலுடன்...