Kuruvi

157 Articles written
Tamil news

பாரிஸ்: தமிழர் வேலை செய்யும் உணவக அசம்பாவிதம்! ஒருவர் பலி!

Paris restaurant incident news பாரீஸ் நகரில் உணவம் ஒன்றில் கார் ஒன்று வேகமாக மோதிய சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மூவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். தீவிர தேடுதல் நடவடிக்கை குறித்த சம்பவத்தை அடுத்து, அந்த...

பாரிஸ் தமிழ் குடும்பஸ்தர் இழந்த மூன்று கோடி!

France paris tamil news - பாரிஸில் தமிழ் குடும்பஸ்தர் இழந்த மூன்று கோடி!  பிரான்ஸில் இருபது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் 3 கோடி ரூபா பணத்தை இழந்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது..  பாரிஸில் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை ஊரில் உள்ள தனது சொந்த மூத்த சகோதரியிடம்கொடுத்துள்ளார்.குறிப்பிட்ட காலத்தின் பின்னர் ஊருக்கு வந்து ஊரோடு வாழ்வதே தனது விருப்பம்என்றும்,அதற்கு ஒரு நல்ல காணி,அதில் அளவான ஒரு வீடு,தென்னை வேம்பு,பழ மரங்கள் , காய்கறிகள் எனஈழத்தில் வாழ ஆசைப்பட்டு பணத்தை பகுதி பகுதியாக அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற மூத்த சகோதரி , கொஞ்சம் கொஞ்சமாக அதனை சொந்த காரியங்களில்செலவழிக்கலானார்.அப்பப்ப காசு கதை எடுக்கும் போதெல்லாம் அதெல்லாம் அப்படியே கிடக்கு என கூறிவந்துள்ளார். சொந்த அக்காவிடம் கணக்கு கேக்க விருப்பமில்லாமல் இருந்த நிலையில், குடும்பஸ்தரின் மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது,அவர் நேரிடையாக ஊருக்கு நாங்க வந்து காணி வாங்கபோறம், காசை எடுத்து தாங்க என கேட்ட பொழுது , குறித அக்காகாரி , அவரிடம் சண்டை போட்டுள்ளார்.இதுதனது தம்பி பணம்,அக்கா தம்பிக்கிடையில் வேறு யாரும் வர வேண்டாம் என கூறியுள்ளார். France paris tamil news அதற்கிடையில் குடும்பஸ்தர் மனைவி நீங்க காசு தந்துட்டு வாயை காட்டுங்கோ என கூற மேலும் சண்டைஇறுகி,தற்போது பேசாமல் இருக்கிறார் அக்கா.. தெரிந்த உறவுகள் மூலம் காசை தருமாறு தம்பிகெஞ்சியுள்ளார்..அதற்கு அக்கா,உன்னால் ஊரில் என் மரியாதை போச்சு,அதற்கு எத்தனை கோடிகொடுத்தாலும் பத்தாது,மான நஷ்ட கணக்கு நீதான் தர வேண்டும் என உறவுகளிடம் கூறியுள்ளாராம்.. கருத்து- பணம் பத்தும் செய்யும்,உறவுகளை பிரிக்கும்,மனிதர்களை கெடுக்கும்.காசு அளவோடு இருப்பதுநல்லது அதிகமானால் அதனால் வரும் தொல்லைகளையும் சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும். https://citytamils.com/resultats-bac-2024-pour-lacademie-de-lille-decouvrez-la-liste-des-admis https://citytamils.com/france-election-results-and-latest-updates-in-tamil-july-8

Résultats du baccalauréat 2024 pour l’académie de Lille

resultats bac 2024 - Un moment toujours très attendu, et aussi redouté. Les résultats du baccalauréat sont annoncés ce lundi 8 juillet à 13h30...

French Election Turnout Highest in 43 Years: Far-Right Falls Short

French Election Turnout Highest in 43 Years French Election Turnout Highest in 43 Years ; In an unexpected twist, the French election witnessed the highest...
City news
Kuruvi

பிரான்ஸில் முக்கிய கட்டுபாடு அமுல்…

குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் தொடுதிரை சாதனங்களுக்குள் மூழ்கிச் சீரழிவதைத் தடுப்பதற்கானவழிமுறைகளைக் கண்டறிய நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு அதன் அறிக்கையை அரசுத் தலைவர்மக்ரோனிடம் சமர்ப்பித்துள்ளது. மூன்று வயதுவரை குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களைத் தொட்டுப் பயன்படுத்துவதை முற்றாகத் தடைசெய்யப் (banning screens) பரிந்துரைத்துள்ளது. அதேசமயம் சிறுவர்கள் பதினொரு வயதுக்கு முன்னர் ஸ்மார்ட் போன்களைப் பாவிப்பதைத் தடுக்குமாறும்அரசுக்கு அறிவிறுத்தியுள்ளது. 13 வயதில் ஸ்மார்ட் போன்களை வழங்கலாம்.  ஆனால் அவற்றின் மூலம் சமூக வலை ஊடகங்களை அணுகமுடியாது தடுக்கப்பட வேண்டும்.15வயதுக்குப்பிறகே சமூக ஊடகங்களின் பாவனையை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். டிஜிட்டல் தொடு திரை சாதனங்கள் குழந்தைகள் மற்றும் சிறுவர்களிடையே நேரடியானதும் மறைமுகமானதுமான தாக்கங்களை ஏற்படுத்துவதைச் சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை, தனிமை, மன அழுத்தம் போன்ற ஆபத்தான விடயங்களின் ஆரம்ப இடமாக அவை தென்படுகின்றன என்று தெரிவிக்கிறது. இந்த சாதனங்கள் குழந்தைகள் மத்தியில் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சிக் கோளாறுகளுக்குக் காரணமல்ல என்று நம்பினாலும் பக்க விளைவுகள் குறித்து எச்சரிக்கையுடன்இருக்க வேண்டியது அவசியம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். வீடுகளிலும் பாடசாலைகளிலும் சிறுவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும். ஆரம்பப் பள்ளிகளிலும் பாலர்வகுப்புகளிலும் கணனிகள், தொலைக்காட்சிகள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களது பயன்பாட்டைத் தடைசெய்யலாம். -அரசு இவ்வாறு கட்டுப்பாடுகளை விதிக்க விரும்பினாலும் அவற்றை நடைமுறையில் செயற்படுத்துவதுசவாலானது. ஏனெனில் இந்த விடயத்தில் பெற்றோர்களே தனிப்பட்ட பொறுப்பைக் கொண்டவர்களாகஉள்ளனர் என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. "ஒவ்வொரு வீடுகளுக்கும் முன்பாகப் பொலீஸ்காரர்களை நிறுத்த முடியாது. சட்டத்தின் மூலம் அன்றிப்பெற்றோர்களை வழிமுறைப் படுத்துவதன் மூலமே இதனைச் செய்ய முடியும்" என்று ஆணைக்குழுவில்இடம்பெற்றுள்ள நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிரான்ஸில் 8-10 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளில் 67 வீதமானவர்கள் சமூக வலைத் தளங்களைஅணுகுகின்றனர் என்பது கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
Kuruvi

பாரிஸ் தமிழ் வர்த்தகருக்கு நடந்தது என்ன..? தீயாய் பரவும் செய்தி!

பாரிஸ் தமிழ் வர்த்தகர் ஒருவர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டமை தொடர்பில் எதிரும் புதிருமான இருகருத்துக்கள் பாரிஸ் வாழ் தமிழர்களிடையே பரவி வருகின்றது.. அதில் ஒன்று சுவிசில் இருந்து வந்து மேற்படி வர்த்தகர் வீட்டில் தங்கி நின்ற சொந்தகார பிள்ளை மீதானபாலியல் சேட்டை எனவும் இதனால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு கதை!  இன்னொரு புறம் குறித்த வர்த்தகர் மனைவி இவற்றை மறுத்திருப்பதாகவும் கடை கொழுவல் மற்றும் சில பணவிவகாரங்களை இலக்கு வைத்து தனது கணவன் மீது அபான்டமான குற்றசாட்டை போட்டு சிறையில் தள்ளும்நோக்கோடு திட்டமிட்டு சுவிஸ் குடும்பம் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று இன்னொரு கதை பரவிவருகின்றது.. சிக்கல் என்னவென்றால் தமிழர்கள் பிரிந்து பிரிந்து காணப்படுவதாலும் தமது வேலை வீடு என்று இருப்பதால்தகவல்கள் எடுப்பது கஷ்டமாக உள்ளது...மேற்குறித்த தகவல்கள் ஒரு இணையம் ஒன்று முதலில் வெளியிட்டதுபின்னர் அனைவரும் அதனை பிரதி செய்து பரப்பியிருக்கிறார்கள்.. உண்மையில் இப்படி ஒன்று நடந்ததா என்றுஉறுதிப்படுத்த கூட போதுமான தகவல்கள் பாரிஸில் இல்லை...
Kuruvi

பாரிஸில் பயங்கர தீ விபத்து! மூவர் பலி!

திங்கள் முதல் செவ்வாய் கிழமை இரவு பாரிஸின் 2வது மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். நேற்று இரவு, பாரிஸில் உள்ள பவுலேவார்ட் டெஸ் இத்தாலியன்ஸில் உள்ள படிக்கட்டு கிணற்றில் தீ...
Kuruvi

பிரான்ஸில் கடுமையாகும் வேலைவாய்ப்பின்மை காப்புறுதி கொடுப்பனவு!

தகவல் பாரிசியான் : july 1 முதல் வேலைவாய்ப்பின்மை காப்பீட்டு விதிகளை கடுமையாக்க அரசு திட்டமிட்டுள்ளது. வேலையின்மைக்கான இழப்பீடு வழங்குவதற்கு முன் காத்திருக்கும் காலத்தை அதிகரிப்பது உட்பட அனைத்து வழிகளும் பரிசீலிக்கப்படுகின்றன. நிர்வாகிகள்...
Kuruvi

பாரிஸை நோக்கி வரும் ரயில் பழுதடைவு! 7 மணிநேர நிறுத்தம்!

இந்த ஞாயிறு காலை லியோனில் இருந்து பாரிஸுக்கு புறப்பட்ட ஒரு TGV எஞ்சின் பழுது காரணமாக நூவில்-சூர்-சாவோனில் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டது. லியோனில் இருந்து இந்த ஞாயிறு காலை பாரிஸுக்கு செல்லும்...
Kuruvi

பாரிஸில் கட்டாயமாகும் பாஸ் நடைமுறை!

ஒலிம்பிக் போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாகப் பாரிஸ் நகரின் சில இடங்களில் வசிப்போர் மற்றும் அந்தப்பகுதிகளுக்குச் சென்று வருவோர் விசேட பாஸ் பெற்றுக் கொள்ள வேண்டும்.  ஒலிம்பிக் ஆரம்ப விழா நடைபெறவுள்ள செய்ன்...