Kuruvi

213 Articles written
பிரான்ஸ்

பிரான்ஸ்: மெட்ரோவில் அபராதம்! தமிழர்கள் அவதானம்!

பிரான்ஸ்: மெட்ரோ பயணிகள் மீது தவறுதலாக அபராதம் அடிக்கடி விதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மெட்ரோவில் செடி எடுத்துச் சென்றது, ட்ராமில் கான்ட்ராபாஸ் கொண்டு சென்றது, ஏற்கனவே திறந்திருந்தகேட்டை கடந்தது, போன்றவற்றிற்காக அபராதம் விதிக்கப்பட்ட பயணிகள் தமது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர். காரே-டி-லியோன் நிலையத்தில்,மெட்ரோ லைன் 1-ன் நுழைவு கேட் திறந்திருந்தது. வேலைநிறுத்தம்நடப்பதால் கேட் திறந்திருக்கிறது என்று நினைத்து,  நவிகோ ஈஸி பாஸை பதிவு செய்யாமல் கடந்த  40 வயதுமேரி , சில மீட்டர்கள் தாண்டியவுடன், கட்டுப்பாட்டாளர்கள் தடுத்தனர்..   நெடுஞ்சாலை கட்டணச் சாவடியில் அதைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகளை காவல்துறை காத்திருந்துஅபராதம் விதிப்பது போல இருந்தது என்று கூறப்படுகின்றது.  கட்டுப்பாட்டாளர், குறித்த பெண்ணின் நேர்மையான விளக்கங்களை பொருட்படுத்தாமல், 35 யூரோக்கள்உடனடியாக அல்லது பின்னர் 65 யூரோக்கள் என்று அபராதம் விதித்தார். குறித்த பெண் உடனடியாகஅபராதத்தை செலுத்திவிட்டு கத்தி கொண்டு சென்றுள்ளார்..

பாரிசில் யாழ் பல்கலைகழக பொன் விழா!

யாழ் பல்கலைக்கழகத்தின் பொன்ழா பரிஸ் நகரில், பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  எதிர்வரும் யூன் மாதம் 08ஆம் திகதி, பரிஸ்  இன் புற நகர் பகுதியான Villeneuve  Saint- Georges எனும்...

பாரிஸில் கடத்தப்பட்ட தந்தை! மகனிடம் கப்பம்!

பாரிஸில் cryptocurrency தொழில்முனைவரின் தந்தை கடத்தல்: விரல் வெட்டப்பட்டு மீட்பு France-ஐச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் வியாழக்கிழமை Paris-இல் கடத்தப்பட்டு, சனிக்கிழமை Essonne மாகாணத்தின் Palaiseau-வில் காவல்துறை நடவடிக்கையால் மீட்கப்பட்டார்....

கனடா,Toronto: வேகமாக பரவும் தொற்று!எச்சரிக்கை!

Toronto, Canada பொது சுகாதார எச்சரிக்கைகள் Toronto Public Health, downtown Toronto இல் உள்ள Ripley’s Aquarium இல் ஏற்பட்ட சாத்தியமானதட்டம்மை (measles) தொற்று குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், Health Canada, Seasonique என்ற birth control மாத்திரைகளின் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் மாத்திரைகள் இல்லாததால், அவற்றை நாடு முழுவதும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இந்த மாத்திரைகளைப் பயன்படுத்துபவர்கள்உடனடியாக தங்கள் மருத்துவரை அணுக வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த சுகாதார எச்சரிக்கைகள் Toronto மற்றும் Greater Toronto Area (GTA) மக்களுக்கு மிகவும்முக்கியமானவை. தட்டம்மை ஒரு தொற்று நோயாகும், இது குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகுறைவாக உள்ளவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். Seasonique மாத்திரைகளின் திரும்பப் பெறுதல், கருத்தடை முறைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு மாற்று வழிகளைத் தேட வேண்டிய தேவையைஉருவாக்கியுள்ளது. Toronto Public Health மற்றும் Health Canada ஆகியவை மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. Toronto மற்றும் Greater Toronto Area மக்களுக்கு, தட்டம்மை வெளிப்பாடு மற்றும் மருந்து திரும்பப் பெறுதல்போன்ற பொது சுகாதார எச்சரிக்கைகளின் மத்தியில், நம்பகமான health insurance Canada பெறுவதுஅவசியமாகும். விரிவான health insurance...
சோதிட சேவை
Kuruvi

உங்கள் மகன்,மகள் மருத்துவர்கள் ஆவார்களா?

1980 to 1990 –கால கட்டங்களில் தமிழக நகர்புறங்களில் வாழ்ந்து வந்த அத்துனை மேல்தர மற்றும் நடுத்தரக்குடும்பங்களின் இலட்சியம், குறிக்கோள் ஒரே மாதிரியாக இருந்தது. அது “நான் எனது மகனை Doctor –ஆக்கிகாட்டுவேன். Doctor –ஆக்காமல் ஓயமாட்டேன்” என்பதே.  அச்சமயம் இதை இலட்சியம் என்பதை விட ஒருவிதமான “வெறி” என்றே சொல்லலாம். இதற்கு காரணம்நிச்சயம் “பணமாக” இருக்க முடியாது. ஏன் எனில், அக்காலத்தில் 7 தலைமுறை உட்கார்ந்து சாப்பிடும்அளவிற்கு பணம் படைத்த மேட்டுக்குடி குடும்பத்தினர்கள் கூட தன் மகனை மருத்துவம் படிக்க வைக்கஇலட்சக்கணக்கில் பணத்தை கொட்டிக் கொடுக்கத் தயாராக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  அந்தளவிற்கு ஒரு மருத்துவருக்கு சமூக அங்கீகாரம் மற்றும் உயர்தர மரியாதை அளிக்கப்பட்டது. Dotor சொன்னா சரியாத்தான் இருக்கும் என்ற எண்ணம் வெகுசன மக்களின் மனதில் புரையோடிக் கிடந்தது. ஒருசபையில் “மருத்துவர்” நுழைந்ததுமே அத்துனை பேருமே எழுந்து நின்றுவிடுவார்கள்.  இது 80 – 90 களில் நடந்த உண்மை நிலவரம். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முந்தைய காலக்கட்டங்களில்“மருத்துவத் தொழிலுக்கு” இந்தளவிற்கு மரியாதை இல்லை. அது ஒரு ரெண்டாந்தர சேவைத் தொழிலாகவேமக்கள் பார்த்தார்கள். ஒரு நாட்டு மருத்துவர் வீட்டிற்கே தேடிவந்து வைத்தியம் பார்ப்பார்.  மருந்தை தானே தயாரித்து புண்களை சுத்தம் செய்து பராமரிப்பார். காரணம் மருத்துவம் ஒரு சேவையாகபார்க்கப்பட்ட காலம் அது. சோதிடத்தில் சூரியன் என்பது மருத்துவம் (அ) அரசியலைக் குறிக்கும். சந்திரன்என்பது சேவையைக் குறிக்கும். நாட்டு வைத்தியம் இவ்விரண்டு கர்மாவின் கலவைகளாக இருந்த காலம் அது.  ஆனால் இதே (சூரி+சந்) கர்மவினை பிரிட்டிஷ் ஆட்சியின் போது “மருத்துவராக” பரிணமிக்க வில்லை. மாறாக“Nurse” என்ற கீழ்நிலை மருத்துவப் பணியாக தன்னை உருமாற்றிக் கொண்டது. காரணம் அப்பணியில்சூரியனோடு சந்திரன் என்ற சேவைக் கர்மவினையும் கலந்திருந்தது. பிரிட்டிஷ் ஆங்கில மருத்துவர்கள்கீழ்நிலை மருத்துவப் பணியை நேரடியாக களத்தில் இறங்கி செய்யமாட்டார்கள்.  எமது தனித்துவமான ஜோதிட சேவைகளை பெற கீழுள்ள வாட்ஸ்ஆப்பில் தொடர்பு கொள்ளுங்கள்... எல்லா பணிகளுக்குமே அவருக்கென வேலையாட்கள் நியமிக்கப்பட்டார்கள். அதாவது தலைமை மருத்துவம்என்பது Policy & Decision Making என்ற அளவிற்கு மிக உயர்வாக கருதப்பட்டது. இதன் அடிப்படையில்கவர்னர், உயர்நீதிமன்ற நீதிபதிகள் விடுப்பில் செல்லும் போது அரசாங்க ஆணைகளில் கையெழுத்திடுவதுமற்றும் அரசாங்க காரியங்களுக்கான மேற்பார்வை செய்வது என்ற அளவில் ஆங்கில மருத்துவர்களின் பணிஇருந்தது.  அச்சமயம் அரசு அதிகார மையத்தின் 3 –வது படிநிலையில் அவர்கள் வைக்கப்பட்டிருந்தார்கள். 1947...
Kuruvi

பிரான்ஸில் 175,000€ உடன் ஈழ தமிழர் மாயம்!

175,000€ பணத்துடன் பிரான்ஸில் கோவில் கட்ட கொடுத்த காசு அபேஸ்!  பிரான்ஸில் ஒரு அம்மன் கோவில் கட்டப்பட உள்ளதாகவும் அதற்காக கிட்டத்தட்ட 175,000€ பணம் மற்றும்நகை சேர்க்கப்பட்டுள்ளதுடன் அதன்பின்னர் கோவில் வேலைகள் எதிர்பார்த்தபடி தொடங்கவில்லை எனதெரிகின்றது. காசை சேர்த்தவரும் மனைவியையும் கொஞ்ச நாளாக காணவில்லை எனவும்,காசு கொடுத்தவர்கள்புலம்பியவண்ணம் உள்ளனர்.கோவில் கட்டுற ஐடியாவிலிருந்து காசு சேர்க்க ஆட்கள் சேர்த்வரை குறித்தநபரின் மனைவியே மூளையாக செயற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. கருத்து: மனிசர் என்ன நினைக்கிறமோ அது நடக்கும்,கஷ்டப்பட்டு உழைத்தால் யாரும் முன்னாலவரலாம்,சந்தோசமாக இருக்கலாம்.ஆனால் இந்த சந்தோசம் காசு எல்லாம் கடவுள்தான் தாறார் என்றுஅப்பாவிதனமாக நினைத்து ஏமாறுபவர்கள் இருக்கும்வரை இப்படி ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள். இவர்கள் ஏமாற்றுகிற மொடல் இப்படிதான்.. சாதாரண குடும்பங்கள் மதிக்கிற , சமூகத்தில் செல்வாக்குள்ளஆனால் உள்ளுக்குள் மதம் சம்பந்தமாக பயப்பிடுற / அப்பாவியை மயக்கி தம் பக்கம் இழுத்துகொள்வார்கள்,பின்னர் அவரை வைத்து 10 பேரை சேர்ப்பார்கள்.. இவ்வாறு ஒவ்வொரு இடத்திலும்...சேர்த்துகடைசியில் இதுக்கு மேல போனா ஓவராயிடும் என்ற நிலை வர.. அப்படியே அடிச்ச காசோட காணாமல்போய்டு.. வேற எங்கயாவது இருப்பார்கள்..இல்லை திரும்ப வந்து காசு கொடுத்தவர்கள் தொட முடியாத அளவுஇருப்பார்கள்.
Kuruvi

பாரிசில் பணம் கொட்டும் இந்த தொழில்

சுற்றுலா வழிகாட்டி சேவைகள் பிரான்சில் பாரிஸ் ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். நகரத்தைப் பற்றிய ஆழமான அறிவு உங்களுக்கு இருந்தால், சுற்றுலாப் பயணிகளுக்கு அதன் வரலாறு, கலாச்சாரம் மற்றும் மறைக்கப்பட்ட பல விடயங்களை காண்பிக்கும்வகையில் வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்களை வழங்கலாம். இது வருடத்தின் 12 மாதங்களும் பகுதி நேரமாக செய கூடியதும் ஆனாலும் வருடத்துக்கு கிட்டத்தட்ட லட்சம்ஈரோக்கள் வரை இலகுவாக உழைக்க கூடிய ஒரு சொந்த தொழிலாகும்.உங்களுக்கு அடிப்படையாக தெரியவேண்டியது ஆங்கில பேச்சு மொழி , ப்ரெஞ்ச் மொழி..  முழுமையாக தெரியாவிட்டாலும் ஆர்வமாக தொழிலில் இறங்கினால்,3-6 மாதங்களில் இரண்டு மொழிகளும்பரீட்சயமாகிவிடும்.பிரான்சின் வரலாறு,பண்பாடு பாரம்பரியத்தை அவ்வவ்போது தெரிந்து கொள்ளுங்கள்.அதைஎவ்வாறு கோர்வையாக தேவைக்கேற்ப நீட்டி சுருக்கி சொல்ல தெரிந்து கொள்ளுங்கள்..  இது தொழிலில் இறங்கி நாலு பேருடன் கதைக்க வெளிக்கிட தானாக வரும்.ஏர்போர்ட்டில் வாகனத்திலஏத்திறதுல இருந்து ஹொட்டல் சாப்பாடு , தங்குமிடம் என்று பக்கேஜ் போட்டா அடுத்தகட்டத்துக்கு போயிட்டாபிறகு வருமானம் இன்னும் அள்ளும், இந்த தொழிலில் விளம்பரம் தேவையில்லை.சேவையை சரியாக கொடுத்து வாறவர்கள் மனதில் பதிய வைத்தால்சரி,அவர்களே பத்து பேருக்கு போய் சொல்லுவார்கள். பழைய பிரான்ஸ் சம்பவங்கள்,வரலாறுகள்,இன்றைய நிலைமைகள்,மக்கள்,பிரச்சினைகள் என சகலதும்கலந்து கட்டி அடிச்சா.. சுக்ரன் உங்க பொக்கட்டில் வந்து இருந்திடுவார். ஏற்கனவே பல இளம் தமிழர்கள் இறங்கியிருக்கின்றனர்.இந்த தொழில்  எல்லையற்றது,விரிவாக்கி கொண்டேபோகலாம்.வாழ்த்துக்கள்...
Kuruvi

பாரிஸில் வாடகைக்கு : எது சிறந்த தெரிவு?

பாரிஸில் ஒரு வீட்டை வாங்குதல் அல்லது வாடகைக்கு: எது சிறந்த தெரிவு? Acheter une Maison à Paris ou Louer : Lequel Est la Meilleure Option ? அறிமுகம்: Acheter une Maison à Paris ou Louer : Lequel Est...
Kuruvi

பாரிஸ் கபே , பேக்கரி உணவக தொழில் தொடர்பான சில இரகசியங்கள்!

நீங்கள் சரியான வாய்ப்புகளை கண்டறிந்து, உள்ளூர் சந்தையின் தேவைகளை நிவர்த்தி செய்தால், பாரிஸில்ஒரு சிறு வணிகத்தைத் தொடங்குவது ஒரு நம்பிக்கைக்குரிய முயற்சியாக இருக்கும். பாரிஸில்வெற்றிபெறக்கூடிய சில ஒரு வணிக யோசனை கஃபே அல்லது பேக்கரி ஒன்றை பாரிசில் தொடங்க விரும்பும் தமிழர்கள் இந்த பாரிஸ் முதலாளி சொல்லும் சில உத்திகளை மனதில் வையுங்கள். பிரெஞ்ச் மக்கள்  கோப்பி மற்றும் பேஸ்ட்ரிகளை அதிகம் விரும்புகிறார்கள். ஒருஅழகான கஃபே அல்லது பேக்கரியைத் திறப்பது லாபகரமான முயற்சியாக இருக்கலாம், குறிப்பாக நீங்கள்உயர்தர, தனித்துவமான உங்கள் பொருட்கள் சேவைகளில் கவனம் செலுத்தினால் இன்னும் நன்றாகஉழைக்கும் வாய்ப்பும் கிடைக்கும் ,  அங்கே முக்கியமான விசயமே கடையை திறப்பது அல்ல,ஏற்கனவே பல கடைகள் இருக்கின்றன.சேவைகள்/பொருட்கள் ஒன்றாக இருந்தாலும் அவற்றின் தரம் கூட கிட்டத்தட்ட ஒன்றாக இருந்தாலும் உங்களின்கடையில் நீங்கள் அவர்களுக்கு அவற்றை அளிக்கும் சேவையின் தரத்தை அதிகரிப்பதன் மூலம் Brand கட்டியெழுப்ப முடியும். இதற்காக நீங்கள் சில முயற்சிகளை மேற்கொள்ளலாம்.. உதாரணமாக பாரம்பரிய பாஸ்ரி வகைகளைகண்டறிந்து அவற்றை மீண்டும் பாரம்பரிய தயாரிப்பு முறைகளில் வழங்கலாம். பாரிசியன்கள் விரும்புவார்கள். ஒரு Theme முறை ஊடாக உங்கள் கடைக்கு ஒரு பாரிசியர்கள் விரும்பும் வடிவத்தை கொடுக்கலாம். allergen-free pastries. Gluten-free, vegan, and low-sugar என வித்தியாசமான நிறைய வகைகளில்தேர்வுகளை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம். பருவகாலங்களுக்கு ஏற்ற மெனுக்களை சிறப்பு கழிவாக வழங்கலாம் அல்லது சிறுது இலவச சாம்பிளாககொடுக்கலாம். புத்தகங்கள்,Art Paintings,பூக்கள் என்பவற்றை சேர்த்து நேர்த்தியாக விக்கலாம்.. பின்னணியில் சிறிய இசைகளை பாட விடலாம். Subscription Boxes போன்ற சில முறைகளை கொண்டு வருவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தங்கள்கடையை திரும்ப திரும்ப வர வைக்க முடியும்.. அவர்கள் உங்கள் கடையில் இருந்து கோப்பி குடிப்பது ஏதோ அவர்களுக்கு சொர்க்கத்தில் இருப்பது போன்றஉணர்வை கொடுக்க வேண்டும். தொழில் வெற்றி என்பது மக்கள் உணர்வுகளை உங்கள பக்கம் திருப்புவதுதான்.காசை நினைத்தீர்கள் என்றால் மக்களை...
Kuruvi

பாரிசில் நகை திருடன் கூறிய அதிர்ச்சி தகவல்!

பாரிசில் சிக்கிய நகை திருடன்,சொன்ன அதிர்ச்சி தகவல்கள்! காவல்துறை மயக்கம்!  பாரிசில் தொடர்ச்சியாக நகைகளை மட்டும் கொள்ளையடித்து வந்த திருடன் ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளநிலையில் அவன் குற்றத்தை ஒத்துகொண்ட முறை பிரான்ஸ் காவல்துறைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தான் நகைகளை மட்டும் கொள்ளையடிப்பதற்கான காரணம் நகை போடுகிறவர்கள் காசுவைத்திருப்பார்கள்,தனது திருட்டால் அவர்கள் வாழ்வு பெரியளவில் பாதிக்கப்படாது என கருதியதாகவும்,நகைமட்டும் திருடி சில முறைகளில் தேர்ச்சி பெற்றதாகவும் கூலாக கூறியிருக்கிறான். அத்துடன் நகைகளை விற்று வரும் பணத்தில் கஷ்டப்பட்டவர்களுக்கும் உதவி செய்திருப்பதாக கூறிய அந்ததிருடன்,பணம் எல்லாவற்றையும் உடன் உடனயே செலவழித்துவிடுவேன் எனவும் கூறியுள்ளான்.