அவசரப்பட்ட யாழ் இளைஞர்! அவல சாவு!
மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த மதுசகின் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் நேற்றைய...
புல தமிழர்கள் இவற்றை பார்த்து வாங்குங்கள் பிரான்ஸ்,ஐரோப்பா,கனடா!
City Tamils News Desk | பிப்ரவரி 24, 2025
இன்றைய காலத்தில், ஃப்ரான்ஸ், ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் உள்ள பல குடும்பங்கள் சீனாவில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் கிளாஸ்வேர்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்....
Are Chinese Plastic and Glassware Safe for Your Kitchen? A Guide
City Tamils News Desk | February 24, 2025
As affordable kitchenware floods global markets, many consumers in France, Europe, and Canada rely on Chinese-made plastic...
தமிழ் கற்கலாம் – Lesson 23: Asking for Permission & Making Polite Requests
(Pure Tamil Words Only – No Sanskrit Influence)
வணக்கம்! (Vaṇakkam!) Welcome to Lesson 23! 😊
In this lesson, we will learn:✅ How to ask for permission...
பாரிஸில் வாடகைக்கு : எது சிறந்த தெரிவு?
பாரிஸில் ஒரு வீட்டை வாங்குதல் அல்லது வாடகைக்கு: எது சிறந்த தெரிவு? Acheter une Maison à Paris ou Louer : Lequel Est la Meilleure Option ?
அறிமுகம்:
Acheter une Maison à Paris ou Louer : Lequel Est...
பாரிஸ் கபே , பேக்கரி உணவக தொழில் தொடர்பான சில இரகசியங்கள்!
நீங்கள் சரியான வாய்ப்புகளை கண்டறிந்து, உள்ளூர் சந்தையின் தேவைகளை நிவர்த்தி செய்தால், பாரிஸில்ஒரு சிறு வணிகத்தைத் தொடங்குவது ஒரு நம்பிக்கைக்குரிய முயற்சியாக இருக்கும். பாரிஸில்வெற்றிபெறக்கூடிய சில ஒரு வணிக யோசனை
கஃபே அல்லது பேக்கரி ஒன்றை பாரிசில் தொடங்க விரும்பும் தமிழர்கள் இந்த பாரிஸ் முதலாளி சொல்லும் சில உத்திகளை மனதில் வையுங்கள்.
பிரெஞ்ச் மக்கள் கோப்பி மற்றும் பேஸ்ட்ரிகளை அதிகம் விரும்புகிறார்கள். ஒருஅழகான கஃபே அல்லது பேக்கரியைத் திறப்பது லாபகரமான முயற்சியாக இருக்கலாம், குறிப்பாக நீங்கள்உயர்தர, தனித்துவமான உங்கள் பொருட்கள் சேவைகளில் கவனம் செலுத்தினால் இன்னும் நன்றாகஉழைக்கும் வாய்ப்பும் கிடைக்கும் ,
அங்கே முக்கியமான விசயமே கடையை திறப்பது அல்ல,ஏற்கனவே பல கடைகள் இருக்கின்றன.சேவைகள்/பொருட்கள் ஒன்றாக இருந்தாலும் அவற்றின் தரம் கூட கிட்டத்தட்ட ஒன்றாக இருந்தாலும் உங்களின்கடையில் நீங்கள் அவர்களுக்கு அவற்றை அளிக்கும் சேவையின் தரத்தை அதிகரிப்பதன் மூலம் Brand கட்டியெழுப்ப முடியும்.
இதற்காக நீங்கள் சில முயற்சிகளை மேற்கொள்ளலாம்.. உதாரணமாக பாரம்பரிய பாஸ்ரி வகைகளைகண்டறிந்து அவற்றை மீண்டும் பாரம்பரிய தயாரிப்பு முறைகளில் வழங்கலாம். பாரிசியன்கள் விரும்புவார்கள்.
ஒரு Theme முறை ஊடாக உங்கள் கடைக்கு ஒரு பாரிசியர்கள் விரும்பும் வடிவத்தை கொடுக்கலாம்.
allergen-free pastries. Gluten-free, vegan, and low-sugar என வித்தியாசமான நிறைய வகைகளில்தேர்வுகளை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம்.
பருவகாலங்களுக்கு ஏற்ற மெனுக்களை சிறப்பு கழிவாக வழங்கலாம் அல்லது சிறுது இலவச சாம்பிளாககொடுக்கலாம்.
புத்தகங்கள்,Art Paintings,பூக்கள் என்பவற்றை சேர்த்து நேர்த்தியாக விக்கலாம்..
பின்னணியில் சிறிய இசைகளை பாட விடலாம்.
Subscription Boxes போன்ற சில முறைகளை கொண்டு வருவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தங்கள்கடையை திரும்ப திரும்ப வர வைக்க முடியும்..
அவர்கள் உங்கள் கடையில் இருந்து கோப்பி குடிப்பது ஏதோ அவர்களுக்கு சொர்க்கத்தில் இருப்பது போன்றஉணர்வை கொடுக்க வேண்டும்.
தொழில் வெற்றி என்பது மக்கள் உணர்வுகளை உங்கள பக்கம் திருப்புவதுதான்.காசை நினைத்தீர்கள் என்றால் மக்களை...
பாரிசில் நகை திருடன் கூறிய அதிர்ச்சி தகவல்! காவல்துறை மயக்கம்!
பாரிசில் சிக்கிய நகை திருடன்,சொன்ன அதிர்ச்சி தகவல்கள்! காவல்துறை மயக்கம்!
பாரிசில் தொடர்ச்சியாக நகைகளை மட்டும் கொள்ளையடித்து வந்த திருடன் ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளநிலையில் அவன் குற்றத்தை ஒத்துகொண்ட முறை பிரான்ஸ் காவல்துறைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தான் நகைகளை மட்டும் கொள்ளையடிப்பதற்கான காரணம் நகை போடுகிறவர்கள் காசுவைத்திருப்பார்கள்,தனது திருட்டால் அவர்கள் வாழ்வு பெரியளவில் பாதிக்கப்படாது என கருதியதாகவும்,நகைமட்டும் திருடி சில முறைகளில் தேர்ச்சி பெற்றதாகவும் கூலாக கூறியிருக்கிறான்.
அத்துடன் நகைகளை விற்று வரும் பணத்தில் கஷ்டப்பட்டவர்களுக்கும் உதவி செய்திருப்பதாக கூறிய அந்ததிருடன்,பணம் எல்லாவற்றையும் உடன் உடனயே செலவழித்துவிடுவேன் எனவும் கூறியுள்ளான்.
பாரிஸ் லியோ திரையரங்கில் மோதல்! தமிழ் குழுக்கள் கைவரிசை
பிரான்ஸில் நேற்று வெளியான விஜய் நடித்த லியோ பட காட்சிகளின் போது இரு தமிழ் குழுக்களிடையேநடந்த வன்முறை காரணமாக தியேட்டர் கலவரப்பட்டுள்ளது.
பின்னர் பொலிசார் தலையிட்டு பிரச்சினைக்குரியவர்களை அப்புறப்படுத்தியுள்ளதாக தகவல்கள்தெரிவிக்கின்றன. இது ஒரு விஜய் - அஜித் ரசிகர்கள் மோதலாக இருக்கலாம் என்றும் அல்லது இரு தமிழ்இளைஞர் குழுக்களிடையே ஆன மோதலாக இருக்கலாம் என கருத்தப்படுகின்றது.
குறித்த தமிழ் இளைஞர்கள் கத்தி வைத்திருந்தாகவும் சொல்லப்படுகின்றது.கத்தி குத்து சம்பவம்நடைபெற்றதாக வதந்திகள் பாரிசில் பரவிய போதிலும் முழுமையான எம்மால் தற்போதுவரை அதனைஉறுதிப்படுத்த முடியவில்லை.
உக்கிரமான வன்முறை காட்சிகளை கொண்ட லியோ படத்தை பார்க்க வந்துவிட்டு அமைதியாக திரும்பிபோனால் அது லோகேஷ் கனகராஜ்ஜின் யூனிவேர்ஸை LCU வை அவமதிப்பு போலாகிவிடும் என்பதால் குறித்தசம்பவத்தை பாரிஸ் தமிழர்கள் திட்டமிட்டு லியோவுக்கான Tribute ஆக செய்திருக்கலாம் என சினிமாவிமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
பாரிஸ் இளம் தமிழ் தாயார் ஒருவருக்கு புற்றுநோய்..விடப்படும் எச்சரிக்கை!
குறித்த பெண்ணுக்கு புற்றுநோய் ஏற்பட்டதுக்கு அதிகமான அவரால் பாவிக்கப்பட்ட உடலை அழகாக்கும் சில இராசயனங்களும் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது.
குறிப்பாக சுருள் கூந்தலை நேராக்குவதற்காக methylene glycol என்னும் ரசாயனம்பயன்படுத்தப்படுகிறது,இந்த மெத்திலீன் கிளைக்கால், பார்மால்டிஹைடு என்னும் ரசாயனத்தைவெளியிடக்கூடியது. இந்த போர்மல்டிகைட் மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்கக்கூடிய ரசாயனம் எனவகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்களே கவனம்... அந்தகாலத்தில் மஞ்சள் பூசுவார்கள் பெண்கள்..இந்த காலத்தில்தான் அவை புற்றுநோயைதடுக்கும் என கண்டுபிடித்தார்கள்..இன்று இவ்வளவு வசதி இருந்தும்,அறிவு இருந்தும் அறிவற்ற வீண் அழகால்கவரப்பட்டு இவ்வாறு அழிகிறார்கள்..
12 ராசிகளில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு இன்றைய ராசி பலன்கள்…
மேசம்: இன்று படத்துக்கு போவதால் தொழில்போட்டி குறையும்,பிள்ளைகள் லியோ பார்க்க ஆசைப்படுவதால்மனதில் சஞ்சலம் தோன்றும்.
ரிசபம் : வீட்டு பெண்களால் இன்று பணசெலவு உண்டாகும்,லியோ டிக்கெட் விலையை கேட்டுமயக்கமுறுவீர்கள்.
மிதுனம்: லியோ டிக்கெட் கிடைக்காத நண்பர்களால் சஞ்சலம் அடைவீர்கள்,லியோ க்ளைமாக்ஸ் நேரத்தில்வயிறு கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு
கடகம்: பிள்ளைகள் நலனிலும் வளர்ச்சியிலும் அக்கறை இருப்பதால் லியோ படத்துக்கு அவர்களை கூட்டிசெல்லாமல் தனியாக செல்வீர்.
சிம்மம் : கவர்ச்சிகரமான ட்ரெயிலை நம்பி படம் பார்க்க வந்துவிட்டோம் என துயர் அடைவீர்.லியோ படம்நினைத்த மாதிரி இல்லாததால் மனசோர்வு அடைவீர்.
கன்னி: லியோவுக்கு கூட்டி செல்வதாக கொடுத்த வாக்கை உங்கள் நண்பர்கள் நிறைவேற்றாதால் ஏமாற்றம்அடைவீர்.கோபத்துக்குள்ளாகுவீர்.
துலாம்: சாதுரியமாக வேலையிடத்தில் பேசி லியோ செல்ல நேரத்தை ஒதுக்குவீர்.எதிர்பார்த்த உதவிகள்எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கும்.
விருட்சிகம் : பிரச்சினைகளில் இருந்து விடுபட அஜித் ரசிகர்களை வம்பிழுப்பீர். உடல் பிரச்சினைக்காகமருத்துவ பரிசோதனை செய்து கொள்ள நேரிடலாம்.
தனுசு: மனைவி பிள்ளைகளுடன் லியோ பார்க்க வெளிகிடுவீர்.மெட்ரோ பயண தடங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள்உண்டு.
மகரம்: 500 ஆ 1000 கோடி லியோ வசூல் பிரச்சினையில் அஜித் ரசிகர்களாக இருக்கும் உங்கள்நண்பர்களுக்கே உமக்கு எதிராக திரும்புவதால் மனசங்கடம் உண்டாகும்.
கும்பம்: உங்கள் பேச்சாற்றலால் லியோவுக்கு நன்றாக உருட்டி முட்டு கொடுத்து தாங்குவீர்.இதன் மூலம் விஜய்ரசிகர்கள் மத்தியில் மிகுந்த புகழடைவீர்.
மீனம்: லியோ பற்றி மற்றவர்களின் தப்பான விமர்சனத்தால் வேதனைபடுவீர்கள்,தியேட்டர் பயணங்களால்அலைச்சல் உண்டாகும்.செலவு அதிகரிக்கும்.