பிரான்ஸ்
பிரான்ஸ்
பாரிஸ்: இன்று காலை பெரும் கொள்ளை!
பாரிஸ் நகரின் 6வது வட்டாரத்தில் பிரபல தோல்பொருள் விற்பனையாளர் Louis Vuitton (LVMH குழுமத்திற்கு சொந்தமான நிறுவனம்) - அதன் Boulevard Saint-Germain கிளை இன்று அதிகாலை 5 மணியளவில் திருடப்பட்டுள்ளது....
பிரான்ஸ்
பாரிஸ் தமிழர்களின் மனதை தொட்டு கண்ணீர் விட வைத்த சம்பவம்!
பாரிஸில் வெளியான ஒரு தமிழ் படத்தை பார்த்து இங்கு வாழும் மூத்த தமிழ் மக்காள் கண்ணீர் சிந்திய சம்பவம்இடம்பெற்றுள்ளது..அப்படி என்ன அந்த படம்? டூரிஸ்ட் பேமிலி என்ற தமிழ் படம்தான்.. எத்தனையோ படங்கள்இதுவரை பாரிஸ் வந்திருக்கின்றன..ஆனால் எதுவும் சொல்லிகொள்ளும்படி மனதை தொடவில்லை. ஆனால்இந்த படம் ஈழதமிழரின் இதயத்தை தொட்டிருக்கின்றது என்பதற்கு பாரிஸ் மூத்த தமிழ் குடிகளின் கண்ணீரேசாட்சி! நீங்களும் கட்டாயம் பாருங்கள்!
தற்செயலாக..வோ அல்லது இறைவன் அழைப்போ தெரியவில்லை..இப் படத்தை பாரிஸ் திரையரங்கில்குடும்பமாக பார்க்க முடிந்தது.எனது நாற்பத்தியொரு ஆண்டு கால புலம்பெயர்ந்த வாழ்வில்,
எமது ஈழத்தமிழ் மக்களின் மனங்களை மகிழ்வால் நிறைத்து..
சிரித்து..
நாமெல்லோரும் இணைந்து கொண்டாடும் வகையில் ஒரு ஆத்மசாந்தியான ஒரு அழகான மனிதர்களோடுஅமைந்த இக்காவியத்தை எமக்களித்த அனைத்து அன்பின் உள்ளங்களுக்கும் எமது
ஈழத்தமிழன்பு நிறை நன்றிகள்.
அன்பினால் மட்டுமே இணைந்தால்..
இன்பமே யாவருக்கும் என்பது
மூத்தோர் வாக்கு.
உண்மை தான். இவ்வளவு காலமும் அகதிகளாக இருப்பவர்களை ஏளனமாக பார்க்க வைத்த காலத்தைஇப்போது இப்படி ஒரு படத்தை ஏற்று தன் நடிப்பால் இவர்களும் வாழவந்த மனிதர்கள்தான் என்பதை தன்நடிப்பால் என்பவர்களை திரும்ப பார்க்கவைத்துள்ளது இப்படம்.
இப்போது நம்மவர்கள் இந்த படத்தின் கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார்கள். நேரம் கிடைக்கும் பொழுதுபார்த்து மகிழுங்கள். அதேவேளையில் சில இடங்களில் கண்ணீரை துடைக்க வேண்டும் என்றுநினைக்கின்றேன். இப்படத்துக்கு நாம் கொடுக்கும் பாரிய அளவிலான ஒத்துழைப்பு அவர்களுக்கு மனம்மகிழ்ந்து கொடுக்கும் நன்றி. நான் பார்த்த திரையரங்குகளில் மண்டபம் நிறைந்த ரசிகர்கள்.
கதை பல முறை பார்த்ததுதான். ஒரு குடியிருப்புப் பகுதிக்குப் புதிதாக வருகிற ஒருவன் படிப்படியாகஅனைத்துக் குடும்பங்களிலும் தங்களில் ஒருவனாக ஏற்கப்படுகிறான்.
கதாபாத்திரங்கள் பல படங்களில் வந்திருப்பவர்கள்தான். பல வீடுகளிலும் பல வகை மனிதர்கள்.ஆனாலும்புத்தம் புதிய திரையனுபவத்தைத் தருகிறது இந்த சுற்றுலாக் குடும்பம். அந்தக் குடும்பமே குடியிருப்புவாசிகளின்நேசத்தை வெல்வதும் புதுசுதான்.
உள்நாட்டுப் படுகொலைச் சூழலில் அடைக்கலம் தேடி வந்தவர்கள், பொருளாதாரம் சீர்குலைந்த நிலையில்வாய்ப்புகளுக்காக வந்தவர்கள் - இருவர்க்குமிடையே பெரும் வேறுபாடு உண்டு. “கள்ளத்தோணி” பயணத்தில்வந்தது மட்டுமே ஒற்றுமை. முதல் காரணத்திற்காக வந்தவர்களைப் போல இரண்டாவது காரணத்திற்காகவந்தவர்கள் பெரிதாகக் கவனிக்கப்படுவதில்லை, ஆதரவைப் பெறுவதில்லை.
இலங்கையின் வல்வெட்டித்துறையிலிருந்து இரண்டாவது காரணத்திற்காக ராமேஸ்வரம் வரும் தர்மதாஸ் - வசந்தி குடும்பத்திற்குத் தொடக்கத்திலிருந்தே, கைது செய்யாமல் விட்டுவிடுகிற காவல்துறை அதிகாரியில்தொடங்கி, சென்னையில் குடியேறும் பகுதியில் வாழ்கிறவர்கள் வரையில் ஆதரவு கிடைக்கிறது.
இப்படித்தான் முடியும் என்று ஊகிப்பது போலவே முடிவடைகிற படங்கள் ஒரு அலுப்பையும் ஏமாற்றத்தையும்தரும். ஊகிப்பது போலவே முடிவடைகிற இந்தப் படம் ஒரு வியப்பையும் நிறைவையும் தருகிறது. ஊகித்தமுடிவை நோக்கிக் கதை எப்படி நகர்கிறது பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பைத் தருகிறது. எப்படி?
ஒரு குண்டுவெடிப்போடு அந்தக் குடும்பத்தைத் தொடர்புபடுத்தித் தேடலைத் தொடங்கும் காவல்துறையினர்அவர்களை நெருங்க நெருங்க ஒரு புதிர்ச்சுவை இணைகிறது.
நாட்டைவிட்டுப் புலம் பெயர வேண்டிய நிலைமைக்கு உள்ளான குடும்பத்தின் பின்னணியை, கட்டாயச்சூழலைத் தொட்டுக்காட்டவும் முயலவில்லை. திரைக்கதையில் அதற்கான மெனக்கிடல்களுக்குஇடமளிக்கப்படவில்லை. எல்லாமே எளிதாக நடக்கின்றன. ஆகவே அவர்களோடு ஓர் உணர்வார்ந்த ஈடுபாடுஏற்படுவதற்கு அதிகக் காட்சிகளைக் கடக்க வேண்டியிருக்கிறது.
இரண்டாவது காரணத்திற்காக, வந்தவர்களை எடுத்துக்கொண்டதால் கதையைப் பின்னுவதற்குநகைச்சுவையை இழையாக்கியிருப்பது பொருந்துகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாய்விட்டு, மனம்பிடித்துச் சிரிக்க முடிகிற படமாக வந்திருக்கிறது.
சசிகுமார் இப்படிப்பட்ட படங்களில்தான் நடிப்பதென்று முடிவு செய்துவிட்டாரா, அல்லது இப்படிப்பட்டபடங்களுக்கு அவரைப் பிடித்துப்போடுகிறார்களா? இணையராக சிம்ரன், மச்சானாக யோகிபாபு, மகன்களாகவரும் மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், அண்டை வீட்டார்களாக வாழும் எம்.எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா, பகவதி, ஆய்வாளர் ரமேஷ் திலக் என அனைவரும் ஈர்க்கிறார்கள். அவர்களில் சிலரின் தனிக் கதைகள்சேர்த்துக் கோர்க்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கதைகள் வெகுதொலைவு விலக்கிவிடவில்லை.
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு, சீன் ரோல்டன் இசையமைப்பு, பரத் விக்கிரமன் படத்தொகுப்பு எல்லாமேஇளையோரின் கலைத்தொழில் முதிர்ச்சிக்குச் சான்றளிக்கின்றன. புதிய முயற்சிக்குத் துணைசெய்த மில்லியன்டாலர் தயாரிப்புக் குழுமம் பாராட்டுக்குரியது. அந்தத் துணையை நியாயமான முறையில் பயன்படுத்தியிருக்கும்புதிய இயக்குநர் அபிசந்த் ஜீவிந்த் வரவேற்புக்குரியவர்.
குடியிருப்புவாசிகள் எல்லோரும் இலங்கைத் தமிழ் பேசுவதை விசாரணைக்கு உட்படுத்தும் காவல்துறைஅதிகாரியிடம், “இந்தத் தமிழ் பேசுறதுதான் உங்களுக்குப் பிரச்சினையா, இல்லை தமிழ் பேசுறதேபிரச்சினையா,” என்று அந்தப் பெரியவர் கேட்பதில் என்னவொரு சமகால மொழித்திணிப்பு அரசியல் விமர்சனம்! படம் பற்றிய எல்லா விமர்சனங்களிலும் சரியாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிற காட்சி இது.
மற்றொரு கேள்விதான் மையக்கரு. அதற்கான தேவையை உணர்த்தும் வகையில், அந்தக் குடும்பம்ஒதுக்கப்படுவது போன்ற காட்சிகளோ வசனங்களோ இல்லாதது ஒரு பெருங்குறை. இருந்தபோதிலும்சிந்தனையில் பதிகிற கேள்வி அது: “யார் சொன்னது, நீ அகதின்னு?”
யார் சொன்னது, தமிழ் சினிமா உலகத் தரத்திற்குப் போகாதுன்னு???