City news

பிரான்சில் 2025 முக்கிய மாற்றங்கள்

2025-ஆம் ஆண்டில் பிரான்சில் சிறு தொழில்முனைவோர், தனிநபர்கள் மற்றும் பாடசாலை குழந்தைகள்உட்பட பலருக்கும் முக்கியமான சட்டமாற்றங்கள் அமுலுக்கு வருகின்றன.  VAT வரம்புகள் மாற்றம் சிறு தொழில்முனைவோருக்கான VAT (Value Added Tax) வருவாய் வரம்புகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. - வாங்குதல்/விற்றல் மற்றும் Furnished தங்குமிடங்களை வழங்குதல் உள்ளிட்ட தொழில்களுக்கு, 2024இல்€91,900 இருந்த வரம்பு, 2025-இல் €85,000-ஆக குறைக்கப்பட்டுள்ளது. - சேவைத் துறை மற்றும் சில தகுதி தொழில்களுக்கு வரம்பு €36,800-இல் இருந்து €37,500 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது. சமூக கட்டணங்கள் உயர்வு (Social Charges Rise) BNC பிரிவில் உள்ள தற்சார்பு தொழில்முனைவோருக்கான சமூக கட்டணங்கள் 2025-இல் 23.1%-இல்இருந்து 24.6%-ஆக அதிகரிக்கின்றன. லாபப் பகிர்வு திட்டம் 2025 ஜனவரி 1-ஆம் திகதி முதல், குறைந்தபட்சம் 11 ஊழியர்களைக் கொண்ட அனைத்து நிறுவனங்களும், சிலநிபந்தனைகளின் கீழ், லாப பகிர்வு திட்டத்தை செயல்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. Lunch Vouchers ‘Tickets restaurants’ மத்திய உணவு vouchers-கள் 2025 முதல் டிஜிட்டல் வடிவிலேயே வழங்கப்படும். பாடசாலை கல்வி திருத்தங்கள் - 2024-ஆம் ஆண்டின் பல்கலைத் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் வந்ததை அடுத்து, கணிதம் மற்றும்பிரெஞ்சு பாடத்திட்டங்களில் 2025-இல் முழுமையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். - அனைத்து வயதிற்கும் தகுந்த கற்றல் தேவைக்குழு பயிற்சிகள் ஏற்படுத்தப்படும். - தேவைகள் அடிப்படையில், சில குழந்தைகள் மீண்டும் ஒரு வருடத்திற்கு இதே படிப்பை தொடர வேண்டுமாஎன்பதை தீர்மானிக்க ஆசிரியர்களுக்கு முழு பொறுப்பு உள்ளது. இது குறித்து பள்ளி, பெற்றோர் மற்றும் கல்விஅதிகாரிகள் முன்பே விவாதிக்கவேண்டும். - ஜனவரி முதல், ஸ்மார்ட்போன்கள் ஆரம்பப் பள்ளி மற்றும் கல்லூரியில் (இரண்டாம் நிலை முதல் நான்குஆண்டுகள்) தடை செய்யப்படும். - Brevet தேர்வு: இறுதித் தேர்வு மதிப்பெண்கள் 60% ஆக உயர்த்தப்படும். - மாணவர்களுக்கு தினசரி வீட்டுப்பாட உதவி வகுப்புகள் வழங்கப்படும். உயர்கல்வி மாற்றங்கள் 2026-ஆம் ஆண்டு தொடங்கி மாணவர் உதவித் தொகை முறை மாற்றப்படும். Parcoursup விண்ணப்பதளத்தில் வேலைவாய்ப்பு தரவுகள் போன்ற புதிய தகவல்கள் அறிமுகமாகும். குழந்தை பராமரிப்பு சேவைகள் 2025 முதல் mairies (நகராட்சியின் நிர்வாகம்), குடும்பங்களின் குழந்தை பராமரிப்பு தேவைகளை முழுமையாகமதிப்பீடு செய்து, தேவையான சேவைகளை ஏற்பாடு செய்ய பொறுப்பாக இருக்கும். இந்த மாற்றங்கள், பிரான்சில் கல்வி, தொழில் மற்றும் சமூகத்திற்கான வளர்ச்சியைத் தூண்டுவதற்கான முக்கியநடவடிக்கையாக கருதப்படுகின்றன.

மீண்டும் வட-கிழக்கில் கனமழை!

27.12.2024 வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி இந்தோனேஷியாவின் பண்டா அச்சே தீவுகளுக்கு மேற்காக காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது அடுத்த சில நாட்களில் மேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்வரும்...

பாரிசில் பயங்கரம்! ஈழ தமிழ் இளைஞர் சுட்டு படுகொலை!

லாகூர்நெவ்வில் 29 வயது வயதான தமிழ் இளைஞர் சுட்டு படுகொலை! உயிரிழந்தவர் வெள்ளிக்கிழமை மதிய நேரத்தில், சிறிய கேலிபரால் சுட்டு கொல்லப்பட்டார். இதன் பின்னணி மர்மமாக உள்ளதாக கூறி குற்றவியல் பிரிகேட் மேலதிக விசாரணைகளை...

பிரான்சின் மூத்த குடிகளே அதிர்ஷ்டசாலிகள்

பிரான்சில் மூத்த குடிமக்கள் நாட்டின் வளங்களை அதிகமாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள், இது இளம் தலைமுறைகளின் மீது முதலீடுகளை குறைத்து வருகிறது. இது மிகவும் குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்குள், பிரான்ஸ் தனது...
City news
jana4

பாரிசில் மூடப்படும் மெற்றா RER ரயில் நிலையங்கள்

ஜூலை 26 ஆம் திகதி ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு ஒருவாரம் முன்பாகப் பாரிஸ் நகரின் மையத்தில் 17 க்கும் மேற்பட்ட மெற்றோ மற்றும் RER ரயில் நிலையங்கள் மூடப்படவுள்ளன. அவற்றை விட வேறு...
Kuruvi

இல்-தூ-பிரான்ஸில் ரயில் விபத்து! ஒருவர் பலி! சேவைகள் ரத்து!

செய்தி: செவ்வாய் கிழமை, ஏப்ரல் 2, 2024 ஆம் தேதி காலை 9 மணி அளவில், Seine-et-Marne பகுதியில் ரயிலால் மோதப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் Roissy-Charles de Gaulle விமான நிலைய...
Kuruvi

பாரிஸில் பிரபலமாகும் 50€ மோசடி! தமிழர்கள் அவதானம்!

தகவல் பாதுகாப்பு எச்சரிக்கை: கார் விண்ட்ஷீல்டில் 50 யூரோ நோட்டு வைக்கப்படுவது தொடர்பான மோசடி முயற்சி குறித்து கவனமாக இருங்கள். தேசிய காவல்துறை பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்த மோசடி...
Kuruvi

பிரான்ஸில் சோகம்! உடலமாக கண்டெடுக்கப்பட்ட சிறுவன்!

மார்ச் 30 சனிக்கிழமை அன்று Haut-Vernet  அருகே எலும்புகள் கண்டறிப்பட்டுள்ளன. எலும்புகளில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுகள் சிறுவனின் அடையாளத்தை உறுதிப்படுத்தின. பி.எஃப்.எம்.டி.வி.யின் தகவலின்படி, நேற்று நண்பகலில் ஒரு நடைபயிற்சி செல்பவர் மண்டையொன்றைக் கண்டுபிடித்தார். ஜூலை 8ஆம்...
Kuruvi

பாரிசில் இன்று தொடங்கும் முக்கிய நிகழ்வு! விடப்பட்ட எச்சரிக்கை!

பாரிஸில் ஆண்டு தோறும் நடைபெறுகின்ற சர்வதேச விவசாயக் கண்காட்சி(Salon de l'Agriculture,) இந்தத்தடவை நாட்டில் விவசாயிகளது கிளர்ச்சியினால் பதற்றத்தின் மத்தியில் இன்று சனிக்கிழமைஆரம்பமாகவுள்ளது.  பாரிஸில் போர்த் து வேர்சாய் கண்காட்சி அரங்கில் (Parc des Expos de Paris Porte de Versailles) மார்ச்3ஆம் திகதி வரை நீடிக்கின்ற இக் கண்காட்சியைப் பார்வையிடுவதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்இருந்து லட்சக்கணக்கானவர்கள் வருகைதரவுள்ளனர். இந்தக் கண்காட்சி சமயத்தில் தங்களது வாகனப் பேணிப் போராட்டத்தைப் பாரிஸ் நோக்கி மீண்டும்ஆரம்பித்துக் கவனத்தை ஈர்ப்பதற்கு விவசாய அமைப்புகள் தயாராகியுள்ளன. அண்மைக் காலமாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற கிராமப் புற விவசாயிகளது ஒருங்கிணைப்புக்குழுவின் கொடிகள் தாங்கிய சுமார் 50 ட்ராக்டர்கள் இன்று வெள்ளிக்கிழமை மிக அமைதியான முறையில்பாரிஸ்நகரின் மையப் பகுதிக்குள் பிரவேசித்துள்ளன. நாட்டின் இதர பகுதிகளில் இருந்து மேலும் சில வாகனப் பேரணிகள் பாரிஸ் நோக்கிப் புறப்பட்டுள்ளன எனத்தகவல் வெளியாகியிருக்கிறது.வருகை தரும் அரசியல் தலைவர்களின் வாகனங்களை மறித்து ஆர்ப்பாட்டம் செய்யவே இவர்கள் ஊடுருவி வருவதாக பாரிஸ் பொலிஸ் வட்டாரங்களுக்கு உளவுதுறை...
ANA

பிரான்ஸில் தனது சொந்த குடும்பத்தை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர்..

13 வருடங்கள் ஏழு சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 52 வயது நபர் ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். Saranda உள்ள Mouthiers-sur-Boëme இல் வசிக்கும் 52 வயதான நபர், சிறார்களை...