செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அடுத்த இலக்கு இலங்கையா?
⭕ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய இறக்குமதி வரிகளை கடுமையாக அறிவித்துள்ளார், இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகளாவிய வர்த்தகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சவாலாகும்.
⭕ அமெரிக்க இறக்குமதிகள் அனைத்திற்கும் 10%...
பிரான்ஸ்: வயதுவந்தோருக்கான தொடர் – கல்வி அமைச்சரின் திரையிடல் தடை!
"எங்களிடம் சிறப்பான சீரீஸ் உள்ளன" இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வூட்டும் தொலைக்காட்சித் தொடரான Adolescence தொடருக்கு மறுப்பு தெரிவித்த Élisabeth Borneபிரித்தானியாவில் உள்ள நடுத்தர வகுப்பு மாணவர்களுக்கு Adolescence எனும் சீரிஸ் திரையிடப்பட உள்ளதாக...
எலும்பை வலுவாக்கும் தமிழர் பாரம்பரிய உணவு
உளுத்தங்களி செய்வது எப்படி…தேவையான பொருள்கள்பச்சரிசி - 4 கப்தோலுடன் கூடிய உளுத்தம்பருப்பு - 1 கப்வட்டு கருப்பட்டி - 2நல்லெண்ணெய் - 1 கப்நெய் - 1/4 கப்செய்முறைபச்சரிசியையும், தோலுடன் கூடிய கறுப்பு...
பிரிட்டன்: முழுநேர ஊழியர் ஊதிய மாற்றம்! மகிழ்ச்சித் தகவல்!
பிரித்தானியாவில் 300,000 முழு நேரப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு – ஏப்ரல் 1, 2025 முதல் பிரித்தானியாவில் தேசிய வாழ்வாதார ஊதிய உயர்வு அமலுக்கு வந்துள்ளதால், பல பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க...
இல்-தூ-பிரான்சை தாக்கிய மழை,இடி
புல்லட்டின் அளவு ஆலங்கட்டி மழை , வெள்ளம், மூடப்பட்ட விமான நிலையங்கள், ஆலங்கட்டி மழையால் மூடப்பட்ட வீதிகள், ஈபிள் கோபுரத்தில்மின்னல் தாக்கம்... புதன்கிழமை மாலை, இல்-து-பிரான்ஸ் குறிப்பிடத்தக்க மோசமான வானிலைதாக்குதலுக்கு உட்பட்டது.
கிட்டத்தட்ட அபோகாலிப்டிக் காட்சிகள். புதன்கிழமை மாலை, இல்-து-பிரான்ஸ் பகுதியில் ஆலங்கட்டி மழைமற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. Val-d'Oise பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன..
மே 1 புதன் அன்று Météo France முழு பாரிஸ் பிராந்தியத்தையும் செம்மஞ்சள் எச்சரிக்கையில்வைத்திருந்தது.
Ile-de-France வீதிகள் A1 இல், வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட வேண்டும் என்று X Météo Express இல்தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது..
பிரான்ஸில் முக்கிய கட்டுபாடு அமுல்…
குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் தொடுதிரை சாதனங்களுக்குள் மூழ்கிச் சீரழிவதைத் தடுப்பதற்கானவழிமுறைகளைக் கண்டறிய நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு அதன் அறிக்கையை அரசுத் தலைவர்மக்ரோனிடம் சமர்ப்பித்துள்ளது.
மூன்று வயதுவரை குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களைத் தொட்டுப் பயன்படுத்துவதை முற்றாகத் தடைசெய்யப் (banning screens) பரிந்துரைத்துள்ளது. அதேசமயம்
சிறுவர்கள் பதினொரு வயதுக்கு முன்னர் ஸ்மார்ட் போன்களைப் பாவிப்பதைத் தடுக்குமாறும்அரசுக்கு அறிவிறுத்தியுள்ளது.
13 வயதில் ஸ்மார்ட் போன்களை வழங்கலாம்.
ஆனால் அவற்றின் மூலம் சமூக வலை ஊடகங்களை அணுகமுடியாது தடுக்கப்பட வேண்டும்.15வயதுக்குப்பிறகே சமூக ஊடகங்களின் பாவனையை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
டிஜிட்டல் தொடு திரை சாதனங்கள் குழந்தைகள் மற்றும் சிறுவர்களிடையே
நேரடியானதும் மறைமுகமானதுமான
தாக்கங்களை ஏற்படுத்துவதைச் சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை,
தனிமை, மன அழுத்தம் போன்ற
ஆபத்தான விடயங்களின் ஆரம்ப இடமாக அவை தென்படுகின்றன என்று தெரிவிக்கிறது.
இந்த சாதனங்கள் குழந்தைகள் மத்தியில் மூளை மற்றும் நரம்பு
வளர்ச்சிக் கோளாறுகளுக்குக் காரணமல்ல என்று நம்பினாலும் பக்க விளைவுகள் குறித்து எச்சரிக்கையுடன்இருக்க வேண்டியது அவசியம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
வீடுகளிலும் பாடசாலைகளிலும் சிறுவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும். ஆரம்பப் பள்ளிகளிலும் பாலர்வகுப்புகளிலும் கணனிகள், தொலைக்காட்சிகள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களது பயன்பாட்டைத் தடைசெய்யலாம்.
-அரசு இவ்வாறு கட்டுப்பாடுகளை விதிக்க விரும்பினாலும் அவற்றை நடைமுறையில் செயற்படுத்துவதுசவாலானது. ஏனெனில் இந்த விடயத்தில் பெற்றோர்களே தனிப்பட்ட பொறுப்பைக் கொண்டவர்களாகஉள்ளனர் என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
"ஒவ்வொரு வீடுகளுக்கும் முன்பாகப் பொலீஸ்காரர்களை நிறுத்த முடியாது. சட்டத்தின் மூலம் அன்றிப்பெற்றோர்களை வழிமுறைப் படுத்துவதன் மூலமே இதனைச் செய்ய முடியும்" என்று ஆணைக்குழுவில்இடம்பெற்றுள்ள நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் 8-10 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளில் 67 வீதமானவர்கள் சமூக வலைத் தளங்களைஅணுகுகின்றனர் என்பது கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பாரிஸ் தமிழ் வர்த்தகருக்கு நடந்தது என்ன..? தீயாய் பரவும் செய்தி!
பாரிஸ் தமிழ் வர்த்தகர் ஒருவர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டமை தொடர்பில் எதிரும் புதிருமான இருகருத்துக்கள் பாரிஸ் வாழ் தமிழர்களிடையே பரவி வருகின்றது..
அதில் ஒன்று சுவிசில் இருந்து வந்து மேற்படி வர்த்தகர் வீட்டில் தங்கி நின்ற சொந்தகார பிள்ளை மீதானபாலியல் சேட்டை எனவும் இதனால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு கதை!
இன்னொரு புறம் குறித்த வர்த்தகர் மனைவி இவற்றை மறுத்திருப்பதாகவும் கடை கொழுவல் மற்றும் சில பணவிவகாரங்களை இலக்கு வைத்து தனது கணவன் மீது அபான்டமான குற்றசாட்டை போட்டு சிறையில் தள்ளும்நோக்கோடு திட்டமிட்டு சுவிஸ் குடும்பம் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று இன்னொரு கதை பரவிவருகின்றது..
சிக்கல் என்னவென்றால் தமிழர்கள் பிரிந்து பிரிந்து காணப்படுவதாலும் தமது வேலை வீடு என்று இருப்பதால்தகவல்கள் எடுப்பது கஷ்டமாக உள்ளது...மேற்குறித்த தகவல்கள் ஒரு இணையம் ஒன்று முதலில் வெளியிட்டதுபின்னர் அனைவரும் அதனை பிரதி செய்து பரப்பியிருக்கிறார்கள்.. உண்மையில் இப்படி ஒன்று நடந்ததா என்றுஉறுதிப்படுத்த கூட போதுமான தகவல்கள் பாரிஸில் இல்லை...
பாரிஸில் பயங்கர தீ விபத்து! மூவர் பலி!
திங்கள் முதல் செவ்வாய் கிழமை இரவு பாரிஸின் 2வது மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
நேற்று இரவு, பாரிஸில் உள்ள பவுலேவார்ட் டெஸ் இத்தாலியன்ஸில் உள்ள படிக்கட்டு கிணற்றில் தீ...
பிரான்ஸில் கடுமையாகும் வேலைவாய்ப்பின்மை காப்புறுதி கொடுப்பனவு!
தகவல் பாரிசியான் : july 1 முதல் வேலைவாய்ப்பின்மை காப்பீட்டு விதிகளை கடுமையாக்க அரசு திட்டமிட்டுள்ளது. வேலையின்மைக்கான இழப்பீடு வழங்குவதற்கு முன் காத்திருக்கும் காலத்தை அதிகரிப்பது உட்பட அனைத்து வழிகளும் பரிசீலிக்கப்படுகின்றன. நிர்வாகிகள்...
பாரிஸை நோக்கி வரும் ரயில் பழுதடைவு! 7 மணிநேர நிறுத்தம்!
இந்த ஞாயிறு காலை லியோனில் இருந்து பாரிஸுக்கு புறப்பட்ட ஒரு TGV எஞ்சின் பழுது காரணமாக நூவில்-சூர்-சாவோனில் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டது.
லியோனில் இருந்து இந்த ஞாயிறு காலை பாரிஸுக்கு செல்லும்...