பாரிஸ் நடுவீதியில் தமிழ் வட்டிகடைகாரர் தொல்லை!
உரத்த குரலில் தொலைபேசியில் , உன் அப்பா எங்க? போனை அவர்கிட்ட குடு. வெளியப் போயிருக்கிறானா? வட்டிக்காசு கட்டவழியில்ல, ஆனா பேஸ்புக்ல மட்டும் தினமும் போட்டோ போட்டுத்தள்ளுறான்? ஒழுங்காநாளைக்குள்ள வட்டியக் கட்டச்சொல்லு" என்று யாரோ சிறுகுழந்தையை மிரட்டியிருக்கிறார்
தமிழர்கள் திருந்துவார்களா? இப்படி அவசரத்துக்கு வாங்கி சொந்த பிள்ளையை அடுத்தவனிட்ட பேச்சு வாங்கவைக்கிறதுதான் பெற்றோரின் லட்சணமா? முடிஞ்சா உழைச்சு வாழுங்க,மானங்கெட்ட தனமாக கடன் வாங்கிநீங்களும் அசிங்கப்பட்டு குடும்பங்களையும் அசிங்கப்படுத்தி வாழ்ந்து என்னத்தை காண போறீங்க..?
இதே போல வட்டி காசு குடுக்கிறவர்களும் தங்கள் தொழில் நியாயப்படி கண்டிப்பா இருந்தால்தான் காசுதிரும்ப வரும்,ஆனால் கொஞ்சம் இடங்கள் ஆட்களை பார்த்தும் கதைத்து கொள்ளுங்கள்...
பாரிசில் சிக்கிய நகை திருடன்,சொன்ன அதிர்ச்சி தகவல்கள்! காவல்துறை மயக்கம்!
பாரிசில் தொடர்ச்சியாக நகைகளை மட்டும் கொள்ளையடித்து வந்த திருடன் ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளநிலையில் அவன் குற்றத்தை ஒத்துகொண்ட முறை பிரான்ஸ் காவல்துறைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தான் நகைகளை மட்டும் கொள்ளையடிப்பதற்கான காரணம் நகை போடுகிறவர்கள் காசுவைத்திருப்பார்கள்,தனது திருட்டால் அவர்கள் வாழ்வு பெரியளவில் பாதிக்கப்படாது என கருதியதாகவும்,நகைமட்டும் திருடி சில முறைகளில் தேர்ச்சி பெற்றதாகவும் கூலாக கூறியிருக்கிறான்.
அத்துடன் நகைகளை விற்று வரும் பணத்தில் கஷ்டப்பட்டவர்களுக்கும் உதவி செய்திருப்பதாக கூறிய அந்ததிருடன்,பணம் எல்லாவற்றையும் உடன் உடனயே செலவழித்துவிடுவேன் எனவும் கூறியுள்ளான்.