பிரான்ஸில் கைது செய்யப்பட்ட இலங்கையின் பிரபல பாதாள உலக நபரான ‘குடு அஞ்சு’ என அழைக்கப்படும்சின்ஹாரகே சமிந்த சில்வா, பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தெஹிவளை – கல்கிசை மாநகர சபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வாவின் கொலை, பாரியளவிலானபோதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டதற்காக தேடப்பட்டு வந்த ‘குடு அஞ்சு’ கடந்தஏப்ரல் மாதம் பிரான்ஸில் கைது செய்யப்பட்டார்.
வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து போதைப்பொருள் கடத்தல் கும்பலை நடத்தி வந்த ‘குடு அஞ்சு’ என்பவரை கைது செய்ய இன்டர்போலும் சிவப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இவர் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையை கொன்ற பிரதான சந்தேகநபராவார்.இந்நிலையில் இவரின் விடுதலையை இலங்கையில் பார்டி வைத்து கொண்டாடிய இவரின் சகாக்கள்நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
- பிரான்ஸ்: நேரலையில் இறந்த பிரபலம்! சடலம் மீட்பு!
- பாரிஸ்: மெட்ரோ சுரங்கத்தில் பயங்கரம்! 2மணிநேரம் போக்குவரத்து தடை!
- பாரிஸ் வந்த பெண்ணுக்கு நடந்த துயரம்! தமிழர்கள் எச்சரிக்கை!
- பிரான்ஸ்: புலம்பெயர்ந்தோர் பகுதியில் வன்முறை! உயிர் ஆபத்தில் ஒருவர்!
- பாரிஸ் நெரிசலில் பயங்கர விபத்து! தூக்கி வீசப்பட்டு ஒருவர் பலி!