Read More

spot_img

பாரிஸ் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சூடு! இருவருக்கு நேர்ந்த கதி!

பாரிஸ் – 13 நிர்வாகப் பிரிவின் (arrondissement) பொலீஸ் நிலையத்தில் நேற்றிரவு 10.30 மணியளவில்இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இரண்டு காவலர்களுக்கு அவசர சிகிச்சைஅளிக்கப்பட்டுவருகிறது. 

கைதான நபர் ஒருவரைச் சோதனையிட்ட பொலீஸ் உத்தியோகத்தர்கள் இருவரே சுடப்பட்டு ப்படுகாயமடைந்துள்ளனர். 

பெண் ஒருவர் மீது வன்செயல் புரிந்தவர் என்று கூறப்படும் அந்த நபரைக் கைது செய்து பொலீஸ் நிலையத்தில்வைத்துச் சோதனையிட்ட சமயத்திலேயே அந்த நபர் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரது துப்பாக்கியைப்பறித்துச் சுட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

துப்பாக்கிச் சூடு நடத்தியவரை ஏனைய பொலீஸ் உத்தியோகத்தர்கள் மடக்கிப் பிடித்துக் கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதாகப் பாரிஸ் நகரப் பொலீஸ்ஆணையாளர் தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img