Read More

spot_img

பாரிசில் இன்று தொடங்கும் முக்கிய நிகழ்வு! விடப்பட்ட எச்சரிக்கை!

பாரிஸில் ஆண்டு தோறும் நடைபெறுகின்ற சர்வதேச விவசாயக் கண்காட்சி(Salon de l’Agriculture,) இந்தத்தடவை நாட்டில் விவசாயிகளது கிளர்ச்சியினால் பதற்றத்தின் மத்தியில் இன்று சனிக்கிழமைஆரம்பமாகவுள்ளது. 

பாரிஸில் போர்த் து வேர்சாய் கண்காட்சி அரங்கில் (Parc des Expos de Paris Porte de Versailles) மார்ச்3ஆம் திகதி வரை நீடிக்கின்ற இக் கண்காட்சியைப் பார்வையிடுவதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்இருந்து லட்சக்கணக்கானவர்கள் வருகைதரவுள்ளனர்.

இந்தக் கண்காட்சி சமயத்தில் தங்களது வாகனப் பேணிப் போராட்டத்தைப் பாரிஸ் நோக்கி மீண்டும்ஆரம்பித்துக் கவனத்தை ஈர்ப்பதற்கு விவசாய அமைப்புகள் தயாராகியுள்ளன.

அண்மைக் காலமாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற கிராமப் புற விவசாயிகளது ஒருங்கிணைப்புக்குழுவின் கொடிகள் தாங்கிய சுமார் 50 ட்ராக்டர்கள் இன்று வெள்ளிக்கிழமை மிக அமைதியான முறையில்பாரிஸ்நகரின் மையப் பகுதிக்குள் பிரவேசித்துள்ளன.

நாட்டின் இதர பகுதிகளில் இருந்து மேலும் சில வாகனப் பேரணிகள் பாரிஸ் நோக்கிப் புறப்பட்டுள்ளன எனத்தகவல் வெளியாகியிருக்கிறது.வருகை தரும் அரசியல் தலைவர்களின் வாகனங்களை மறித்து ஆர்ப்பாட்டம் செய்யவே இவர்கள் ஊடுருவி வருவதாக பாரிஸ் பொலிஸ் வட்டாரங்களுக்கு உளவுதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.ஏற்கனவே கோரியுள்ள நிபந்தனைகளை நிறைவேற்ற கோரி விவசாயிகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img