Read More

பிரான்ஸில் தமிழர் வாழும் பகுதியில் நடந்த கொடூரம்!

Seine saint denisல் கொலையாக சந்தேகப்படும் வழக்கில், முந்தைய வன்முறை குற்றச் செயல்களுக்காக அறியப்பட்ட 33 வயதான ஒருவர் வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். .

ரோஸ்-டெஸ்-வென்ட்ஸ் பகுதியில் உள்ள பிளேஸ் ஜுபிடர் பகுதியில் அதிகாலை 1:00 மணியளவில் துப்பாக்கி சூடு நடந்தது. குடியிருப்பாளர்கள் துப்பாக்கி சத்தம் கேட்டு வெளியே வந்தபோது நபர் ஒருவர் சுருண்டு கிடப்பதைக் கண்டனர்.

- Advertisement -

 அவர் கழுத்தின் பின்புறத்தில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து குறித்த நபரை காப்பாற்ற முயன்றனர், ஆனால் அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். குற்றமிழைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் திருடப்பட்ட மற்றும் எரிக்கப்பட்ட ஆஸ்டின் கூப்பர் கார் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது குற்றச் செயலுடன் தொடர்புடையது என விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர். 

கரீம் பி. கொலை, கடத்தல் போன்ற வன்முறை குற்றச் செயல்களுக்காக காவல்துறைக்கு அறிமுகமானவர். அவர் சிறையில் இருந்து ஒரு வருடத்திற்கு முன்பே விடுதலையானார். இதுவரை எந்த கைதுகளும் செய்யப்படவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Chargement des actualités de Capital.fr...