கோடிக்கணக்கானோர் இருக்கின்ற இந்த உலகில் ஒரு சிலரே பேருண்மையை கண்டுபிடித்துள்ளனர் அவர்கள் தங்களுடைய துன்பங்கள் மற்றும் வாழ்க்கையின் எதிர்மறைகளில் இருந்து முற்றிலுமாக விடுதலை பெற்று நிரந்தர மகிழ்ச்சி மற்றும் அமைதியில் திளைத்து கொண்டிருக்கின்றனர்.
உண்மையில் இங்கு முற்றிலும் விடுதலை என்பதும் நிரந்தர மகிழ்ச்சி என்பதும் எவ்வாறு வருகின்றது என்றால் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு வருவதாலோ அல்லது ஒன்றை விட்டு விட்டு விலகுவதால் வருவதில்லை, இரண்டுக்கும் இடையே ஏற்படுகின்ற சமநிலைத் தன்மை தான் இந்த முற்றிலும் விடுதலை மற்றும் நிரந்தரமான மகிழ்ச்சியை மக்களுக்கு கொண்டு வருகின்றது.
மீதி மக்களும் இதைத்தான் ஒவ்வொரு நாளும் தேடுகின்றனர். இந்த சமநிலை தன்மையைத்தான் மக்கள் தேடி வருகின்றனர். வரலாறு நெடுகிலும் விஞ்ஞானிகள் தீர்க்கதரிசிகள் மதத் தலைவர்கள் ஆகியோர் இந்த ரகசியத்தை தான் நேரடியாகவும் மறைமுகமாகவும் எழுதி வைத்துள்ள போதிலும் நம்மில் பெரும்பாலானோர் இந்த மாபெரும் கண்டுபிடிப்பு குறித்து ஏதும் அறியாதவர்களாக இருக்கின்றோம் என்று சொல்ல முடியாது.நாம் எல்லோருமே அதனை நோக்கியே பயணப்பட்டு கொண்டுள்ளோம்.ஆனால் அந்த உண்மையான சமனிலை தன்மையில் இருந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு தூரத்தில் இருக்கின்றோம்.
உதாரணமாக ஒருவர் பயணத்தில் உண்மை சமனிலை தன்மைக்கு அருகில் இருப்பதால் பின்னால் வரும் மற்றவர்கள் அதை புரிந்து கொள்ளவில்லை என்று சொல்லமுடியாது,அதே போல் பயணத்தில் மற்றவர்கள் பின்னால் இருப்பதால் முன்னாள் இருப்பவர்தான் எல்லாமும் என்று பின்னால் வருபவர்களும் நினைக்க கூடாது.முன்னால் இருப்பவர் பின்னால் இருப்பவர் புரிந்து கொண்டவர்கள்,புரியாதவர்கள் என எல்லாவற்றையும் உள்ளடக்கியதுதான் நாம் தேடி பயணப்பட்டு கொண்டிருக்கும் உண்மை சமனிலைதன்மை.
சில மதங்களில் இந்த பேருண்மை பிற மதங்களில் கூறப்பட்டுள்ளது போல் தெளிவாகவும் வெளிப்படையாகவும் கூறப்படவில்லை என்றாலும் அனைத்து மதங்களின் அடிநாதமாக விளங்குவது இந்த உண்மை தான் மாபெரும் உண்மை. நம் எல்லோரின் பார்வையும் படும்படியாக தான் வைக்கப்பட்டுள்ளது நம் சுவாசத்தை விட மிக அருகிலேயே அது நமக்கு இருக்கின்றது ஆனால் நாம் அதை தவறவிட்டு விடுகிறோம் என்று நினைப்பதே தவறான விடயம்
நாம் அதை பார்க்கும் அதை உணர்ந்து கொள்ளும் தூரத்தில் இன்னும் எமது பயணம் எமது அதன் அருகில் வரவில்லை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் தொடர்ந்து பயணப்பட்டு கொண்டுதான் இருக்கின்றோம். அந்த இரகசியத்தை அந்த சமநிலைத் தன்மையை நோக்கி ஆனால் நாம் அவற்றைப் புரிந்துகொள்ளும் படியோ அல்லது அந்த உண்மைக்கு அருகில் வர வேண்டிய தூரம் இன்னும் வரவில்லை. ஆனால் அதை நோக்கி தொடர்ந்து பயணப்பட்டு கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மையாகும் அதைத்தான் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
இங்கு எதுவுமே இரகசியம் அல்ல ஒரு ரகசியத்தை ஒளித்து வைக்க சிறந்த இடம் அதை எல்லோர் பார்வையிலும் படும்படியாக ஓர் இடத்தில் வைக்க வேண்டும் என்று புராதான பாரம்பரியம் அறிந்து வைத்திருக்கின்றனர் என்று சொல்வது தவறு இங்கு எதுவுமே ரகசியம் இல்லை இங்கு எல்லோருக்கும் படும்படியாக எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும் அது இருக்கின்றது. அது குறித்த ஆழமான விழிப்புணர்வும் எல்லோருக்கும் இங்கு உண்டு. ஆனால் அவர்கள் அதற்கு பயணப்படும் பயண தூரத்தை வைத்துக் கொண்டு அந்த ரகசியம் தொடர்பான அறிவு இல்லை என நம்மால் முடிவெடுக்க முடியாது.
எல்லோருமே அந்த ரகசியத்தை நோக்கியும் அந்த உண்மையை நோக்கிய பயணப்பட்டு கொண்டிருக்கிறோம்.இங்கு அந்த பயணம் மட்டுமே நடைபெற்று கொண்டுள்ளது.
நாம் இந்த உண்மையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தவறவிட்டு வந்திருக்கிறோம் என்று நினைப்பது தவறு நாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த உண்மையை நெருங்கி வந்திருக்கின்றோம்.
நம்முடைய பிரச்சனைகளால் நம்முடைய வாழ்க்கை எனும் நாடகத்தின் காட்சிகளால் உலக நடப்புகளால் ஏற்படும் கவன சிதறல்களால் நம் பயணம் தடைப்படவில்லை.இங்கு எந்த வாய்ப்பையும் நாம் தவறவிடவில்லை.அவரவருக்குரிய வாய்ப்புக்கள் பயணத்தில் அவரவருக்கு கிடைத்து கொண்டுள்ளது.
எந்த ஒரு ரகசியங்களும் உங்கள் வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போடப் போவதில்லை.எந்த ஒரு கண்டுபிடிப்பும் நம்மை துன்பங்களில் இருந்து விடுவித்து நிறைந்த மகிழ்ச்சியுடன் வைத்திருக்கப் போவதில்லை. ஆனால் இங்கு எதுவுமே நம்மை புரட்டிப் போடப் போவதில்லை. ஒவ்வொரு மாற்றங்களுமே மாறாத ஒன்றை சுற்றித் தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றது என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.அந்த மாறாத ஒன்றை நோக்கிதான் நாம் பயணப்பட்டு கொண்டுள்ளோம்.
எங்கள் மாற்றங்களிடையே ஒரு மாறாத தன்மை இருக்கின்றது என்ற விழிப்புணர்வு கிடைக்கும் வரை நம் பயணம் தொடரும்.
எதிர்மறை சிந்தனைகள்,மனதளர்ச்சி,கவலை,மனகாயம்,துன்பங்கள் என உங்களை தடுத்து நிறுத்துவதாக நீங்கள் நினைத்து கொண்டிருக்கும் எல்லாமே இரகசிய பயணத்தில் உங்களின் எரிபொருட்கள்.அவற்றை எரித்து அதன் சக்தியை கொண்டு நாம் தொடர்ந்து பயணப்பட்டு கொண்டுள்ளோம்.எமது நீண்ட பயணத்தில் நாம் கடந்து வரும் எல்லாமே நமக்கான எரிபொருட்கள்தான்.
நம்முடைய துன்பங்களுக்கான அடிப்படை காரணமாக நம்முடைய உண்மையான இயல்பு குறித்து அறியாமை என்று சொன்னால் தவறு
அந்த அறியாமையால் ஏற்படும் துன்பங்களை எரிபொருளாக கொண்ட அந்த இயல்பை அறியும் பொருட்டு நாம் தொடர்ந்து பயணப்பட்டு கொண்டிருக்கின்றோம் என்றே எடுத்து கொள்ள வேண்டும்.
நம்மை குறித்து நாம் நம்பிக் கொண்டு இருக்கின்ற ஒன்று உண்மை அற்றதாக இருப்பதால்தான் நாம் துன்புறுகிறோமா?
உண்மையற்று இருப்பதுதான் தான் மாற்றத்துக்கு உள்ளாகும் மாற்றத்தின் மூலமே எமது பயணம் தொடர்ந்து கொண்டுள்ளது என்ற உண்மையை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இங்கு நமது வாழ்க்கையில் வருகின்ற விஷயங்கள் குறித்த எந்தவிதமான கட்டுப்பாடுகளும் எங்களுக்கு இருக்கா இல்லையா என்பதை இங்கு முக்கியமே
இல்லை ஏனென்றால் நாங்கள் எல்லோருமே ஒரு பயணத்தில் ஒவ்வொரு தூரத்தில் பயணப்பட்டு கொண்டுள்ளோம். அது எம்மை எங்கு கொண்டு சேர்க்க வேண்டுமோ அங்கு
கொண்டு சேர்த்துக் கொள்ளும். ஒவ்வொருவரும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தூரத்தில் இயங்கிக் கொண்டு இருக்கின்றோம். நாம் இங்கு எதுவுமே செய்ய தேவை இல்லை அந்தப் பயணம் காலத்தை தாண்டி நிறைவு பெறும் நாம் எதுவுமே செய்ய வேண்டியதில்லை.மாறி கொண்டிருக்கும் உலகியல் காரணிகள் உங்கள் வாழ்வில் குறைய குறைய நீங்கள் மாறாத ஒன்றை உங்கள் பயணத்தில் நெருங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம்.
நம்முடைய உண்மையான இயல்பை புரிந்து கொள்வது என்றால்? எது என்னுடைய உண்மை இயல்பு? அந்த உண்மையை எது , யார் புரிந்து கொள்ள வேண்டும்? நாம்தான் உண்மை இயல்பாக இருக்கும் போது எதற்கு நாம் அதனை புரிந்து கொள்ளவேண்டும்? அந்த புரிந்துணர்வு எம்மிடம்தானே எப்போதும் உண்டு.நாமே மருந்தாக இருக்கின்ற போது எமக்கு எதற்கு மருந்து?
நம்முடைய வாழ்வில் நாம் அனுபவிக்கின்ற மகிழ்ச்சியின்மை,அதிருப்தி,இன்னல்கள் அனைத்தும் நாம் யார் என்ற அறியாமை அல்லது தெளிவின்மை காரணமாக விளைபவை அல்ல..நாம் யார் என்ற அறியாமை குறித்த தெளிவை உண்டாக்க உதவுபவை.நாம் இங்கு எவற்றிலிருந்தும் விடுபட தேவையில்லை.எல்லாமுமாக நாமே இருக்கின்றோம்.
நீங்கள் துன்பங்கள் என நினைத்து கொண்டிருப்பவையில் இருந்து தற்காலிகமாக விடுபடுபட்டு விலகி வந்திருப்பது மகிழ்ச்சி இல்லை.ஆனால் அதிகமாக அதுவே மகிழ்ச்சியாக தோன்றும்.இன்பம் துன்பம் இரண்டையும் ஒன்றாக பார்க்கும் தெளிவு உங்கள் பயணத்தில் அடையும் போதே உங்களுக்குள் ஆழ்ந்த அமைதி பிறக்கும்.அந்த அமைதியே பேரானந்தம்.இன்பமும் துன்பமும் எமது பயணத்தில் இரு கரைகள்.கரைகள் தொடரும் வரை பயணம் தொடரும்.இலக்கை அடைந்த பிறகே கரைகள் காணாமல் போகும்.இங்கு பயணமும் நீங்கள்தான்,கரைகளும் நீங்கள்தான்,இலக்கும் நீங்கள்தான்.
பெளதீக பொருட்கள் மூலம் மகிழ்ச்சி நீடித்திருக்காது என்பது தவறு.பொருட்கள் அழிவதால் மகிழ்ச்சியும் மறைந்து போகவில்லை.எம்மிடம் மகிழ்ச்சி மாறாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.அந்த மாறாத மகிழ்ச்சியை மாறி கொண்டிருக்கின்ற ( அழிந்து கொண்டுள்ள ) பெளதீக பொருட்கள் மூலம் நிரப்பி கொள்கிறோம்.அல்லது நிலையற்ற அழியும் தன்மையுடைய பெளதீக பொருட்கள் ஒவ்வொன்றாக தம்மை அழித்து நமக்கு தம்மால் ஆன மகிழ்ச்சியை கொடுத்து கொண்டிருக்கின்ற என்று எடுத்து கொள்ளலாம்.
உண்மையான சுயத்தை நோக்கி உலகம் பயணப்பட்டு கொண்டுள்ளது. உண்மையான சுயத்திலேயே மகிழ்ச்சி உள்ளது.உலகம் உண்மையான சுய மகிழ்வாக உள்ளது.எந்த பக்கம் போனாலும் அதற்கு அது கிடைக்கதான் போகின்றது.பிறகு என்ன கவலை?
நாம் நம்முடைய உண்மையான இயல்பிலேயே இருக்கின்றோம்.எல்லையற்ற எம் இயல்பை எல்லையுடைய உலகத்தால் தடுக்க முடியாது.நாம் யார் என்ற நிலையான சுயவிழிப்புணர்வில்தான் நாம் இருக்கின்றோம்.அது நமக்கு போதும்.அழிய போகும் மாறி கொண்டிருக்கின்ற உடல்,மனத்திற்கு அது தேவையில்லை.உடல் மனதிற்கு அந்த விழிப்புணர்வு கிடைக்காது,தவிர அவை எம்மை அதை அடைவதில் இருந்து தடுத்து கொண்டும் இல்லை.அவற்றால் தடுக்கவும் முடியாது.ஏனென்றால் நாம் ஏற்கனவே நாமாக சுய விழிப்புணர்வில்தான் இருக்கின்றோம்.
எல்லோருமே அதை அனுபவித்து கொண்டுதான் இருக்கிறார்கள். உலகில் உள்ள எல்லா பயங்களுக்கும் மூல பயமான மரண பயத்தில் இருந்து ஒருவர் விடுபடும் போதே நீங்கள் யார் என்று முழுமையை உணர்ந்து கொள்ளுவதற்கான முதல் படியாகும்.
ஏனென்றால் உடல்,மனதால் உண்டாகும் விம்பம் நீங்கள் இல்லை.ஆனால் தொடர்ந்து மாற்றத்துக்குள்ளாகி அழிய போகும்,அழிந்து கொண்டுள்ள இயல்பை கொண்ட உடலும் மனமும் உங்களின் உண்மை இயல்பில் இருந்து உங்களை விலக்கி வைக்க முடியாது.உங்களை உங்கள் இயல்பில் இருந்து விலக்கி வைக்க முயல்வதால்/தடுப்பதால்தான் அவை அழிகின்றன.
நீங்கள் முழுமையானவர் என்ற உண்மை இயல்பை நீங்கள் பயங்களுக்கு எல்லாம் மூல பயமான மரண பயத்தில் இருந்து விடுதலை அடைவதன் மூலமே அடையமுடியும்.அதன் பிறகு உங்களுக்கு எதுவுமே தேவைப்படாது.
நீங்கள் உண்மையை உணர்ந்து கொள்ளவில்லை,உணர வேண்டும் என நினைப்பது தவறு.உண்மை உங்களிடத்தில்தான் உண்டு.உங்களை நோக்கி நீங்கள்தான் பயணப்பட்டு கொண்டுள்ளீர்கள்.முழுமை தொடர்பான உணர்வு உங்கள் எல்லோருக்கும் இருப்பதால்தான் நாம் எல்லோரும் அதனை நோக்கிய பயணத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றோம்.
உங்களை எதுவும் பிடித்து இழுத்து கொண்டும் இல்லை,நீங்கள் எதையும் ஈர்த்து கொண்டும் இல்லை.உங்களிடத்தில் எல்லாம் உண்டு.இங்கு மாறாத மகிழ்வை நோக்கிய பயணம் என்பது கூட மாறி கொண்டிருக்கின்றவைகளில் இருந்து வரும் இன்ப துன்பங்களின் விம்பம்தான் அவைதான் மாறாத முழுமையான மகிழ்ச்சியான நம்மில் இருந்து மாறி மாறி மறைந்து கொண்டிருக்கின்றன.
நன்றி.