Read More

spot_img

Toronto: குடிகாரர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

டொரோண்டோவில் மது அருந்த அனுமதி (Alcohol Consumption Allowed in Toronto Parks)

டொரோண்டோ நகர சபை, பூங்காக்களில் தற்காலிகமாக மது அருந்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது, இதுGTA மக்களிடையே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவு, பொது இடங்களில் மதுஅருந்துவதற்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது.  

இந்த அனுமதி குறிப்பிட்ட பூங்காக்களுக்கு மட்டுமே பொருந்தும், மேலும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே மதுஅருந்த முடியும். பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை கண்காணிப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.  

சிலர் இதை சுதந்திரமான முடிவாக வரவேற்றாலும், மற்றவர்கள் பொது இடங்களில் மது அருந்துவது குறித்துகவலை தெரிவித்துள்ளனர், குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் பூங்காக்களில்தேவையற்ற பிரச்சினைகளை தூண்டும் என மக்கள் கவலை! 

GTA இல் தாக்கம் இந்த முடிவு டொரோண்டோவில் உள்ள பூங்காக்களை மையமாகக் கொண்டாலும், மிசிசாகாமற்றும் பிராம்ப்டன் போன்ற GTA பகுதிகளில் இதேபோன்ற முடிவுகள் பரிசீலிக்கப்படலாம் என்று விவாதங்கள்நடைபெறுகின்றன.  

இந்த திட்டம், கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிந்தைய காலத்தில், பொது இடங்களில் சமூகநடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என குறிப்பிடபட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img