நாளை RER B ரயில் பாதைகள் முழுவதும் வேலைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனது தாக்கம் தெற்கு பகுதியை விட வடக்கு பகுதியை அதிகம் பாதிக்கிறது.CGT-RATP ஏழு மாத வேலைநிறுத்த அறிவிப்பை முன்னரே தாக்கல் செய்தது. அரசாங்கதிடம் இருந்து பல நாட்களாக மேலதிக அறிவிப்பு வராததால் இன்று முழு RER B ரயில் லைன் முழுவதும் வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த அணிதிரட்டல் இரண்டு மாதங்களுக்கு முன்பே, ஒரு பொதுக் கூட்டத்தில், SNCF RER-B வணிக முகவர்களால், CGT மற்றும் SUD RAIL ஆல் ஆதரவுடன், சம்பள உயர்வைக் கோரும் நோக்கத்துடன் முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் இரண்டு ரயில்கள் ஒன்று மட்டுமே RER B இன் வடக்கு நோக்கி இயங்கும், அதே நேரத்தில் நான்கில் மூன்று ரயில்கள் தெற்கை நோக்கி இயங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன. இருப்பினும் Gare du Nord inter connection பொறுத்தவரை ரயிலில் எந்த மாற்றமும் தேவையில்லை. எனினும் இந்த வேலை நிறுத்தம் எத்தனை நாட்கள் தொடரும் என கூற இயலாது.