பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு கடும் நடவடிக்கை – உரையாற்றுவதற்கு தடுப்பு!
தேசிய நல்லிணக்கத்துக்கும், இன சகவாழ்வுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக குற்றச்சாட்டு!
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் செயல்பாடுகள் மற்றும் கருத்துக்கள் தேசிய நல்லிணக்கம் மற்றும் இன சகவாழ்விற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக சபாநாயகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாராளுமன்ற உரை ஒளிபரப்பு தடை!
இதன் தொடர்ச்சியாக, அர்ச்சுனாவின் உரைகள் எதிர்வரும் மே மாதம் வரை நேரடி ஒளிபரப்பிலிருந்து இடைநிறுத்தப்படுகின்றன. மேலும், அவர் தனது உரைகளை சமூக வலைதளங்களில் பகிரவும் அனுமதியில்லை எனவும் சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய வார்த்தைகள் ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கம்
இதுவரை அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அனைத்தும் ஹன்சாட் (Parliamentary Hansard) பதிவிலிருந்து நீக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
பெண்களை விமர்சித்தது – கடும் கண்டனம்
அர்ச்சுனா, பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி பெண்களை மிக மோசமான முறையில் விமர்சித்துள்ளார். இது பாராளுமன்றத்தின் கெளரவத்திற்கே அவமதிப்பாகும் என சபாநாயகர் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானம், பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றும் பொழுது பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய அவசியத்தைக் காட்டுகிறது.