Read More

பிரான்ஸில் ஈழ தமிழ் இளைஞருக்கு பரிசாக கிடைத்த சொகுசு மாடி குடியிருப்பு!

பிரான்ஸில் ஈழ தமிழ் இளைஞருக்கு பரிசாக கிடைத்த சொகுசு மாடி குடியிருப்பு!

பிரான்ஸில் பிறந்து வாழ்ந்து வரும் ஒரு தமிழ் இளைஞர்,இவர் பாரிஸ் மென்பொருள் பல்கலைகழகத்தில் படித்து முடித்து பின்னர் தேலதிக பல கற்கைநெறிகளையும் படித்து,தேர்ந்த மென்பொருள் பொறியிலாளராக உருவெடுத்தார். பிரான்சில் கிளை தொடங்கிய அமெரிக்க ஐடி நிறுவனம் ஒன்று இவரை ஒப்பந்த வேலைக்கு அமர்த்தியது.

அங்கு அவர் செய்து கொடுத்த புரஜக்ட்ல முக்கிய பழுது பார்ப்பு செயன்முறை ஒன்று உலகின் முன்னணி நிறுவனமாக கூகிளை கவர்ந்திருக்கின்றது..உடனடியாக குறித்த நிறுவனத்துக்கு பெருந்தொகை பணத்தை கொடுத்து அந்த மென்பொருள் பழுது பார்ப்பு தொழில்நுட்ப முறையை வாங்கியுள்ளது.

இதனால் இவரை ஒப்பந்ததுக்கு அமர்த்திய குறித்த நிறுவனம் இவருக்கு பாரிஸ் புறநகரில் சொகுசு வீட்டு குடியுருப்பு ஒன்றை அன்பளிப்பாக வாங்கி கொடுத்துள்ளது.

- Advertisement -

தாய் அளவெட்டியை பூர்வீகமாக கொண்டவர் என்றும் தந்தையார் பிரான்ஸ் வந்து குறிப்பிட்ட காலத்தில் மரணித்து விட தனிநாக வளர்த்தெடுத்தார் என்றும் சொல்லப்படுகின்றது. குறித்த இளைஞர் திருமணமாகியவர்..

எங்கள் கருத்து – தனிப்பட்ட அடையாளங்கள் நீக்கி விட்டே அந்த தகவலை நாம் செய்தியாக தருகிறோம்.. சம்பந்தபட்ட பொறியியாளர் எங்களிடம் கேட்டு கொண்டதுக்கு இணங்க. தவிர சொகுசு மாடி வீடு எல்லாம் அமெரிக்க நிறுவனம் அன்பில் வாங்கி கொடுப்பதில்லை. வியாபார ஒப்பந்தத்தை தொடர்ந்து பேணவும் , அவரை வைத்து தாம் உழைத்த பெரும் லாபத்தில் ஒரு சிறு பங்கை அவருக்கு கொடுக்கவும்தான்..

ஐடி துறைகள்தான் எதிர்காலம்..அதிலும் சாதாரண படிப்புகள் எல்லாம் இனி சரி வராது..படிக்க இறங்கிட்டா அடி முடி தொடும் வரை படிச்சு வித்தை மொத்தமாக கற்றிடுங்கள்..இனி வரும் காலங்களில் அப்படி இருந்தால் மட்டும்தான் உழைப்பு சாத்தியம்.. இல்லையெனில் இப்பவே பாரிஸ் உணவகங்களில் கிச்சின் வேலைகளில் சேர்வது லாபம்.

- Advertisement -