Read More

spot_img

யாழ் பல்கலை! மாணவர் விபரீத முடிவு! வெளிவராத சில தகவல்கள்!

காதலியுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து   யாழ் பல்கலைக்கழகத்தில் 3ம் ஆண்டில் படிக்கும்கொட்டகலையைச் சேர்ந்த 24 வயது மாணவன் உயிரிழப்பு.!

நிம்மதியாய் கால் நீட்டி படுக்ககூட முடியாத, சுவர்களில் மண் உதிர்ந்து கொண்டிக்கொண்டிருக்கும் 

இரண்டு அறைகளை கொண்ட 

லயத்து வீடு அது!

அவனின் சவப்பெட்டியை கூட இலகுவாக அந்த வாசலில் கொண்டு செல்ல முடியாது!

அவனின் அம்மா இந்தமுறை 

அவன் தங்கை பெற்ற மூன்று A சித்திகளை அவனிடம் சொல்லி  “எப்படி இனி நம்பி உன் தங்கச்சிய கெம்பஸ்அனுப்புவேன் என்று கதறி துடித்துக்கொண்டு இருக்கின்றார்!

பாடசாலையிலும் சமூகத்திலும் மிக கட்டுக்கோப்பாக வளர்ந்த ஒருவன்!

எத்தனை கனவுகளோடு பெற்றோர் 

அனுப்பியிருப்பார்கள் அவனை!

அவனின் ஒரு நேர பஸ் காசுக்காக தாய் இரண்டு நாட்கள் கொழுந்து கூடையை நிச்சயம் சுமந்திருப்பார்!

இனி எந்த வார்த்தை சொல்லி அந்த 

தாயை நாங்கள் சாந்தப்படுத்த முடியும்?

கம்பஸ் விடுமுறை நாட்களில் அவன் எங்களோடு வேலைக்கு வந்து சென்றது நினைவுக்கு வருகின்றது!

யுனிக்கு Fun பன்ன கொஞ்ச பேர் வந்துருக்காங்க!  அவங்களுக்கு கனடா யூரோப் விசா ரெடியா இருக்குஆனால் எல்லோருக்கும் அப்புடி அல்ல… நாம் யார்..? எமதும் எம்மை சார்ந்த குடும்பத்தின் நிலைமை என்ன? அதற்காக நாம் இப்போது எதை செய்ய வேண்டும்? எதை செய்யகூடாது என்ற அடிப்படை தெளிவு இருக்கவேண்டும்.. காநலிக்க கூடாது என்று சொல்லவில்லை..ஆனால் நேற்று வந்தவளுக்காக இவ்வளவு காலமுமாகபெற்று வளர்த்த பெற்றோர்,சகோதரர்களை  தண்டிப்பது என்ன நியாயம்..? அதனை கொஞ்சம் கூட சிந்தித்துபாத்திருக்கலாம். புரிந்து கொள்ளாமல் கடைசில் தொங்க விடுகிற இத்த காதலோ,காதலியோ நமக்குஉண்மையில் தேவைதானா? இதற்காக ஏன் இப்படி ஒரு முடிவை நாம் எடுக்க வேண்டும் என்று கூட கடைசிநொடியில் நினைத்திருக்கலாம்..

முதலில் காதல் என்றால் என்ன என்று தெரிந்துவிட்டு காதலில் இறங்குங்கள்…தெரியாத விசயங்களில் இறங்கிஇவ்வாறு மாட்டுபடுகிறீர்கள்…புத்திசாலிகள் யாரை காதலிப்பதில்லை என்று ஒரு அமெரிக்க உளவியல் ஆய்வுமுடிவு சொல்கிறது..அவர்கள் திருமணம் முடிக்க வேண்டி வந்தால் தெரிந்து பழகிய ஒருவரை முடித்து கொண்டுவாழ்க்கையை தொடங்குவார்கள் என்றும்,பயணத்தில் பிரிவு வந்தால் கூட அதனை சரியாக தெளிவாக விளங்கிகொள்வார்கள் என்றும் அதன் பின்னர் கூட நண்பராக பழகி கொள்வார்கள் என்று அந்த ஆய்வு சொல்கின்றது.

முடிவு கருத்து- பலவீனமானவர்களுக்கு இந்த பூமியில் இடமில்லை..வாழும் தகுதியும் இல்லை – விவேகானந்தா! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img