Step into City Tamils

உலக தமிழர்களுக்கு வணக்கம்! City Tamils தளத்தினை அழுத்துவதன் மூலம் பிரான்ஸ் - கனடா-யாழ்-லண்டன் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்...

Top 5 This Week

பிரான்சில் 2025 முக்கிய மாற்றங்கள்

2025-ஆம் ஆண்டில் பிரான்சில் சிறு தொழில்முனைவோர், தனிநபர்கள் மற்றும் பாடசாலை குழந்தைகள்உட்பட பலருக்கும் முக்கியமான சட்டமாற்றங்கள் அமுலுக்கு வருகின்றன.  VAT வரம்புகள் மாற்றம் சிறு தொழில்முனைவோருக்கான VAT (Value Added Tax) வருவாய் வரம்புகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. - வாங்குதல்/விற்றல் மற்றும் Furnished தங்குமிடங்களை வழங்குதல் உள்ளிட்ட தொழில்களுக்கு, 2024இல்€91,900 இருந்த வரம்பு, 2025-இல் €85,000-ஆக குறைக்கப்பட்டுள்ளது. - சேவைத் துறை மற்றும் சில தகுதி தொழில்களுக்கு வரம்பு €36,800-இல் இருந்து €37,500 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது. சமூக கட்டணங்கள் உயர்வு (Social Charges Rise) BNC பிரிவில் உள்ள தற்சார்பு தொழில்முனைவோருக்கான சமூக கட்டணங்கள் 2025-இல் 23.1%-இல்இருந்து 24.6%-ஆக அதிகரிக்கின்றன. லாபப் பகிர்வு திட்டம் 2025 ஜனவரி 1-ஆம் திகதி முதல், குறைந்தபட்சம் 11 ஊழியர்களைக் கொண்ட அனைத்து நிறுவனங்களும், சிலநிபந்தனைகளின் கீழ், லாப பகிர்வு திட்டத்தை செயல்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. Lunch Vouchers ‘Tickets...

மீண்டும் வட-கிழக்கில் கனமழை!

27.12.2024 வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி இந்தோனேஷியாவின் பண்டா அச்சே தீவுகளுக்கு மேற்காக...

பாரிசில் பயங்கரம்! ஈழ தமிழ் இளைஞர் சுட்டு படுகொலை!

லாகூர்நெவ்வில் 29 வயது வயதான தமிழ் இளைஞர் சுட்டு படுகொலை! உயிரிழந்தவர் வெள்ளிக்கிழமை...

பிரான்சின் மூத்த குடிகளே அதிர்ஷ்டசாலிகள்

பிரான்சில் மூத்த குடிமக்கள் நாட்டின் வளங்களை அதிகமாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள், இது...

மெட்ரோ B நிறுத்தப்பட்டுள்ளது…தீவிர மீட்பு பணி..

லியோனில் தொழில்நுட்ப கோளாறினால் மெட்ரோ B நிறுத்தப்பட்டுள்ளது, மீண்டும் இயக்க நிலைக்கு...

மிதிவண்டி சாரதி பலி.. நாடு முழுவதும் உணர்ச்சிகரமான அஞ்சலி நிகழ்வுகள்!

கடந்த செவ்வாய்க்கிழமை பரிசில் மகிழுந்து மோதி கொல்லப்பட்ட Paul எனும் மிதிவண்டி...

Special Articles

Secrets of the Millionaire Mind | கோடிஸ்வர சிந்தனை இரகசியங்கள்

கோடிஸ்வர சிந்தனை இரகசியங்கள்  உலகில் சிலர் மட்டும் பணக்காரர் ஆவது பணக்காரர்கள் ஆக முடியாத மற்றவர்கள் காண்பதை, நினைப்பதை , நம்புவதை அதிகமாக சிறப்பாக செய்து யாரும் பணக்காரங்கள் ஆவதில்லை..மற்றவர்களால் பார்க்கமுடியாத,செய்ய இயலாதவற்றை செய்தே ஆகின்றனர். எண்ணங்களிலிருந்து விளைவுகள் எப்படி உருவாகின்றன,உங்களின் அக உலகம்தான் உங்களின் புறஉலகத்தை உருவாக்கும். உழைப்பதற்கான முன்னோக்கு , பணம் குறித்த உங்களின் கடந்தகால அனுபவங்கள்எல்லாவற்றையு் தாண்டி எவ்வாறு சிலர் பணக்காரர்கள் ஆகிறார்கள் என்ற இரகசியம்.. நீங்கள் நம்பி பெற்று கொண்ட தகவல்களின் தொகுப்புதான் உங்கள் அக உலகத்தைஉருவாக்குகின்றது.எண்ணங்களுக்கும் உங்களுக்குமான உறவு,நீங்கள் யார் என்ற உண்மை..? எண்ணங்களின்அதிகாரம்..! எங்கு எதுவெல்லாம் முக்கியம்..? உங்களின் பொருளாதார வெற்றியின் துல்லியமான அளவு!  உங்களுக்கு நடக்கும  நல்லது கெட்டதுகள்..! பிரமாண்டமான சிந்தனை முறைகள்..கவனத்தை குவிக்கும்முறைகள்..! பணக்காரன் ஆவதற்கான அடிப்படை விதிகள்..! எங்கேயிருந்து தொடங்குகின்றது எப்படிசெல்கின்றது எங்கு சென்று முடிகின்றது என்று இந்த புத்தகம் விளக்கின்றது.. வெற்றியின் இரகசியம் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் தப்பித்து ஓடுவதில்லை,மாறாக பிரச்சினைகளை விடஉங்களை பெரிதாக வளர்த்து கொள்வது.பிரபஞ்சத்துடனான கொடுக்கல் வாங்கல் விதிகள் எவ்வாறுதொழிற்படுகின்றது..? காரண காரியங்கள்..? மனிதர்களின் அடிப்படை உளவில் எவ்வாறு இயங்குகின்றது..? பயம் மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் மேற்கொள்ளப்படும் வாழ்க்கை  பணக்காரன்,ஏழைகளின் பணத்தின் இடையிலான எண்ண விளைவு தொடர்புகள்...உடனடி திருப்தி Vs பொருளாதார சுதந்திரம்... உலகில் ஏழைகள் எவ்வாறு உருவாகின்றனர் என்பதை அறிந்து அவர்கள் செய்வதை,அந்த செயல்களைதூண்டுகின்ற எண்ணங்களை தவிர்த்து கொண்டாலே நீங்கள் பாதி பணக்காரர் ஆகிவிடலாம்.. பணக்காரர்ஆவது ஒன்றும் பெரிய விடயமில்லை..அது ஏழைகள் ஆகுவதை விட இலகுவானது...ஏழைகள் இன்னும்கஷ்டப்பட்டு தங்களை ஏழைகளாக்கி கொண்டுள்ளனர்.. பணக்காரர்கள் எந்த கஷ்டமும் இல்லாமல் மேலும்பணக்காரர் ஆக கொண்டுள்ளனர்.. ஏன் என்றால் இங்கு வழி ஒரு திசையில்தான் உள்ளது..அந்த திசையில் செல்ல செல்ல அபரிமிதம்அதிகமாகும்..எதிர் திசையில் செல்ல செல்ல ஏழ்மை அதிகமாகும். இந்த புத்தகம் வாழ்வில் பணக்காரர் ஆக வேண்டும் என்ற நினைப்பவர்களுக்கு பொருத்தமான புத்தகம்..

The Secret | இரகசியம் | Book Review in Tamil

இரகசியம் - Book Roast  பிரபஞ்சம் என்ற எல்லாவற்றையும் இணைத்து கொண்டு எல்லாத்தையும் கடந்த ஒன்றாகவும் இருக்கின்றஒன்றுக்கும் உங்களுக்குமான தொடர்புகளும்.. அவற்றுக்கிடையில் தொழிற்படும் கவர்ச்சி விசைகளால்அலைகழிக்கப்படும் மனிதர்கள் அவற்றை எவ்வாறு சாதகமாக பயன்படுத்தி பிரபஞ்ச ஒட்டத்துடன்ஒத்திசைவான அபரிமிதமான ஒரு சக்தியுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுதல் பற்றி இந்த புத்தகம்பேசுகின்றது. முழுக்க முழுக்க அற்புதமான அதிசயமான அன்பான வாழ்க்கை ஒன்று இங்கு அனைவருக்குமே சாத்தியமானதுஎன்றும் உங்கள் உணர்வுகள்,எண்ணங்கள்,உடன்படிக்கைகள் , விழிப்புணர்வுகள் , விருப்பங்கள் என்பனஎவ்வாறு பிரபஞ்சத்துடன் உங்களை ஐக்கியப்படுத்தி கொள்கின்றது என இந்த புத்தகம் விளக்குகின்றது. மகிழ்வான மனநிலையுடன் உணர்வுபூர்வமாக நீங்கள் நம்பி விரும்பும் விடயங்களை தொடர்ச்சியா உங்கள்மனகண்ணில் திரும்ப திரும்ப கண்டு வரும் போதும் கற்பனை செய்து வரும் போதும் அவை உண்மையில்உருவாகி உங்களுக்கு நிகழ் உலகில் கிடைக்கின்றன.. எப்போதுமே தொழிற்பட்டு கொண்டுள்ள ஈர்ப்பு சக்தி மூலம் பிரபஞ்சத்துக்கு உங்களின் ஆழ்மனவிருப்பங்களை அனுப்பும் போது அது உங்களுக்கு பதில் விடையளிக்கின்றது.இவை  தெரிந்தோ தெரியாமலோஉங்கள் வாழ்வில் நடைபெற்று கொண்டுள்ள ஒரு பிரபஞ்ச செயற்பாடுதான்.இது வரை நீங்கள் உங்கள்வாழ்வில் அடைந்த நல்லது கெட்டது எல்லாமே நீங்களாக மேற்கூறிய முறையில் பிரபஞ்சத்திடம் இருந்துதருவித்து கொண்டவைதான். பிரபஞ்சம் பற்றி நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ இருந்தாலும் அது உங்களுடன்இணைப்பில்தான் இருக்கின்றது.அந்த தொடர்புவெளிக்கு அப்பால் உங்களால் போக முடியாது.படைப்பின்மர்மம் அதுதான்.பிரபஞ்ச தாக்கத்துக்கு உட்பட்டே உங்கள் வாழ்வு இயங்குகின்றது அதன் விதிகள்தான்உங்கள் வாழ்வை ஆக்கி கொள்கின்றன,அழித்தும் கொள்கின்றன. உங்களால் முடிந்தது எல்லாம் அவை தரும் அபரிதமான வாழ்வை பெற்று கொள்ளுவதுதன் மூலம் அதனைபுரிந்து கொண்டு ஏற்று கொள்வதுதான். இந்த உலகில் அற்புதங்கள் தினசரி நிகழ்வுகள்..ஒட்டு மொத்த அபரிமிதத்தால் இந்த உலகம் நிரம்பிவழிகின்றது.பிரபஞ்ச பேருணர்வோடு இணைந்து அதன் உள்ளிருக்கும் தங்குதடையற்ற போக்கோடு போவதும்அதனுள் இருக்கும் உலகில் உங்கள் ஆத்மாவை அடை காப்பதுமே உங்கள் வேலை. இந்த புத்தகத்தை உங்கள் கையில் எடுத்து மனதுக்கு உங்கள் பிடித்த இடத்தில் ஆற அமர இருந்து படிப்பதன்மூலம் இதுவரை கடந்து போன உங்கள் வாழ்வில் நடந்து முக்கிய சம்பவங்கள் பற்றி தெளிவைஅடைவீர்கள்,அவை ஏன் எவ்வாறு எதற்காக நடந்தன என்ற உண்மையை உணர்வீர்கள்,இதனை வைத்துஉங்கள் நிகழ்கால வாழ்வை ஒழுங்கமைத்து கொள்வதன் மூலம் எதிர்காலத்தை நிச்சயமாக்கி கொள்வீர்கள்.. இந்த புத்தகம் உங்களை தாண்டிய சக்தி ஒன்று உள்ளது என்பதையும் அது உங்களுக்குள்ளும்உண்டு,அதனிடமிருந்து விலகி ஓடாமல், அதனுடன் உங்களை ஒரு அங்கமாக்கி கொள்வதன் மூலம் அபரிமிதத்தை தினம் தினம் அனுபவிக்க முடியும்என்பதை உங்களுக்கு கற்று தரும்.

காலை எழுந்தவுடன் தவளை | Book Review

காலை எழுந்தவுடன் தவளை என்ற இந்த புத்தக தலைப்பு சிலருக்கு ஆரம்பத்தில் புரியாமல்இருக்கலாம்.ஆனால் எமக்கும் எமது இலக்குகளுக்கும் இடையிலான பயண நுணுக்கங்களை பற்றியும்துல்லியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையானவை பற்றியும் எளிமையாக அலசுகின்றது. இன்று ஒரு நாள் காலையிலிருந்து  வர போகின்ற உங்களின் எதிர்கால வாழ்க்கை வரையிலான மொத்த காலஅளவையும் அதற்கான நுட்பங்களையும் விளக்கி சொல்கின்றது.இலக்கு தொடர்பான எமக்குள் செய்யவேண்டிய சில மாற்றங்களையும் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்களையும் விலாவாரியாக விவரித்துகூறுகின்றது. உங்கள் வெற்றிக்கான மாபெரும் விதிமுறைகள் தொடர்பான விளக்கத்தை தருகின்றது.ஒரு யானையைஎவ்வாறு சாப்பிடுவது..? ஒரு நேரத்தில் ஒரு கடி.. அதாவது யானை போல் உள்ள பெரிய ஒரு வேலையைஎவ்வாறு செய்து முடிப்பது..? பெரிய வேலையை சிறு துண்டுகளாக பிரித்து ஒரு நேரத்தில் ஒரு துண்டு வேலை.. நீங்கள் இலக்குகள்,வாழ்வில் வெற்றி பெற முடியாமல் இருப்பதற்கான பக்கத்தையும் உங்களுக்குகாட்டுகின்றது.உங்கள் ஆற்றலை எவ்வாறு பிரித்து கொள்வது? எதற்கு எவ்வளவு? எப்படி பயன்படுத்துவது எனகுறிப்பிட்டு கால வரைகளுடன் கணிக்க உதவுகின்றது.  உங்கள் இலக்குகள் நோக்கி இலகுவாக முன்னேறுவதற்கான நடைமுறைகள்,தந்திரங்கள்,தடைநீக்கிகளை , சிந்தனை முறைகள், நீண்டகால நோக்குகள், நிகழ்கால தேர்ந்தெடுப்புக்கள் , காலகெடுகள் , வீண்அழுத்தங்கள் , முட்டுகட்டைகள், மட்டுபடுத்தும் காரணிகள் , முக்கியான எடுகோள்கள் என இந்த புத்தகம்விரிவாக பேசுகின்றது. வாழ்வில் இலக்குகளை அடைய விரும்பும் அனைவருக்கும் இந்த புத்தகம் ஒரு வழிகாட்டியாக இருக்கும். 

நிறைவான வாழ்க்கை 4 உடன்படிக்கை

நிறைவான வாழ்க்கை 4 உடன்படிக்கைகள்  தனி மனித சுதந்திரதிற்கான வழிகாட்டி  உங்களை பற்றி நீங்களே ஒரு அறிய பல படிகளை கடக்க வேண்டியிருக்கும்,பல கால சொந்த அனுபவங்களைபெற்று கொள்ள வேண்டிவரும்,இந்த புத்தகம் அப்படி ஒரு ஆழமான சுய தரிசனத்தை உங்களுக்குகாட்டுகின்றது.எந்தவிதமான அலங்கார வார்த்தைகள்,தேவையற்ற சொற்றொடர்கள் எதுவும் இல்லாமல்நேரிடையாக மிக இயல்பான உண்மைகளை பேசுகின்றது. நீங்கள் யார்,இந்த பூமி பந்தில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்..? உங்களுக்கு என்ன நடந்துகொண்டிருக்கின்றது..? உங்கள் புரிதல்கள் என்ன..? உங்கள் மனது எது..? உங்களின்பயம்,பலம்,பலவீனங்களை அலசி உங்களுக்கே காட்டுகின்றது. பிரபஞ்சத்தில் இருக்கும் நீங்கள்,உங்களுக்குள் இருக்கும் பிரபஞ்சம் என இரண்டும் ஒன்றாக இருக்கதேவையானது இணைப்பு.அந்த இணைப்புக்கு தேவையான 4 உடன்படிக்கைகள் பற்றி எளிமையாகபேசுகின்றது. நரகத்தில் உழன்று கொண்டிருப்பவர்கள் அதனை தனிமையில் அனுபவிக்கவிரும்புவதில்லை,மனித இனம் "கும்பல் மனோபாவத்தில்" இயங்கி வருகின்றதையும் உங்களுடைய மகிழ்ச்சிஎங்கே இருக்கின்றது என்ற முகவரியை உங்களுக்கே காட்டுகின்றது. ஒரு தனிமனிதனை எது போராளியாக மாற்றுகின்றது? உலக வாழ்க்கை என்னும் போர் களத்தில் தனித்துவிடப்பட்டுள்ளவர்களின் போர்கள் எப்படி தோற்கடிக்கப்படுகின்றன,எப்படி வெல்லப்படுகின்றன என்றுவிளக்குகின்றது. நீங்கள்,சமூகம்,உலகம்,பிரபஞ்சம்,விழிப்புணர்வு என பல தத்துவ உண்மைகளை புட்டு புட்டுவைக்கின்றது.நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு புத்தகங்களில் இதுவும் ஒன்று என்பதை நாம் இங்குகுறிப்பிட்டே ஆக வேண்டும்.
spot_img
spot_img
spot_img

Most Popular

Sacred Hindu Pilgrimage Tour: Discovering Divine Temples in Sri Lanka 9 Days

Embark on a spiritual journey that traverses the holy...

The Gems of Eelam Tamils: A 9-Day Adventure

Day 1: Arrival in Jaffna Arrive at Jaffna International Airport. Transfer...

Discover Northern and Eastern Sri Lanka 7D | 6N

Day 1: Arrival in Jaffna Arrive at Jaffna Airport. Check-in to...
spot_img
spot_img
spot_img

Health & wellness

Sacred Hindu Pilgrimage Tour: Discovering Divine Temples in Sri Lanka 9 Days

Embark on a spiritual journey that traverses the holy...

The Gems of Eelam Tamils: A 9-Day Adventure

Day 1: Arrival in Jaffna Arrive at Jaffna International Airport. Transfer...

Discover Northern and Eastern Sri Lanka 7D | 6N

Day 1: Arrival in Jaffna Arrive at Jaffna Airport. Check-in to...