ரணிலின் ஆட்சியை இரவோடிரவா கலைத்தார் சந்திரிகா… அதிலும் முக்கிய அமைச்சுகளை முதலில் பறித்துவிட்டு…பிரதமராக இருந்தாலும் தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்துக்கே ரணில் வரக்கூடாதென அனுமதி மறுத்த மைத்ரிபால.. ஒரு கட்டத்தில் ரணிலின் அமைச்சரவையை வண்ணத்து பூச்சிகளின் கூடாரம் என்றார்…
ரணில் கைது பற்றி பேசலாம்.. ஆனால் ‘அரசியலமைப்பு சர்வாதிகாரம்’ என்ற தலைப்பில் பேச சந்திரிக்கா , மைத்ரிக்கு அருகதை கிடையாது…
1972 குடியரசு யாப்பு கொண்டு வரப்பட்டதே, சோல்பரி அரசியல் யாப்பில் இந்த விளையாட்டு எல்லாம் விட முடியாது என்பதால் தான். மீறுவதற்காக தங்களுக்கு ஏற்றாற் போல் வளைப்பதற்காக “சுதேசியம்” என்று மக்களை ஏமாற்றிய மேட்டுக்குடி அதிகார வர்க்கம் இன்றி முகவரி இன்றி கிடக்கிறது அவர்களின் கடைசி மண்டிதான் ரணில் விக்கிரமசிங்க,
ருவன் விஜேவர்தன போன்றவர்கள். பண்டாரநாயக்கா பரம்பரை அடியோடு போய்விட்டது. சோல்பரி அரசியல் யாப்பில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தையும் நீக்கி இறுதியில் இனவழிப்பை கட்டவிழ்த்து அவர்களிடம் இருந்து பெற்ற கோடாரிக்காம்புகளை வைத்து காலத்தை ஓட்டுகிறார்கள்.
இவர்கள் வளர்த்து விட்ட ரவுடிகள் தான் இன்று அரசியல் செய்கிறார்கள். இவர்கள் அழித்து விட்ட தரமான ஒழுக்கமான காலநிகரான கல்வி திட்டம் காரணமாக படித்தும் அதை வெளிப்படுத்த தெரியாத ஒழுங்காக பாராளுமன்றத்தில் உரையாற்ற தெரியாத வாய்சப்பி பாராளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச சபைகளில் உரையாற்ற தெரியாத அமைச்சர்கள், உயர் நீதிமன்றம் கூட முடிவெடுக்க தடுமாறும் குழப்பங்கள் நிறைந்த அரசியலமைப்பு “Patchwork” சாம்பார் சட்டங்களையும் வைத்து நாடு ஓடுகிறது .