Read More

spot_img

பரிஸிஸ்: மீண்டும் குண்டுவெடிப்பு பீதி! போக்குவரத்து முடக்கம்!

பிரான்சின் தலைநகர் பரிஸ், உலகப் புகழ்பெற்ற சுற்றுலா நகரம் மட்டுமல்லாது, பல்வேறு கலாசார நிகழ்வுகளுக்கும், வர்த்தகச் செயல்பாடுகளுக்கும் மையமாக விளங்குகிறது. ஆனால், அந்த நகரம் நேற்று ஏப்ரல் 16 ஆம் தேதி (புதன்கிழமை) மீண்டும் ஒரு வெடிகுண்டு எச்சரிக்கையால் பதற்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

மாலை நேரத்தில் பரபரப்பு ஏற்பட்ட இடம் – Champs-Elysées சாலை. இந்த பிரபல சாலையில் அமைந்துள்ள Galerie des Arcades எனும் வணிக வளாகத்தில், தரைத்தளத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு Starbucks கடையில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற தகவல் பரப்பப்பட்டதுடன், அங்கு திடீர் பதற்றம் நிலவத் தொடங்கியது.

இந்நிலையில் எச்சரிக்கை தகவல் கிடைத்தவுடன், பரிஸ் காவல்துறையும், வெடிபொருள் விசாரணை நிபுணர்களும் அவசரமாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வணிக வளாகத்தை முற்றுகையிட்டனர். உள்ளிருந்த அனைத்து கடைகளும் உடனடியாக மூடப்பட்டன. பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் கடை ஊழியர்கள் அவசர வெளியேற்றம் செய்யப்பட்டனர். சம்பவ இடத்தின் சுற்றிலும் இருபுற போக்குவரத்தும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டது.

தொடர்ந்த பல மணி நேர சோதனைக்குப் பிறகு, சம்பவ இடத்தில் எந்தவிதமான வெடிகுண்டும் இல்லையென அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாலை 5 மணிக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்ததும், பொதுமக்கள் மீண்டும் வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வெடிகுண்டு இருக்கிறதென பிழையான தகவலை பரப்பிய நபரை கண்டறிந்து, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான தனிச்சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடரும் தவறான வெடிகுண்டு எச்சரிக்கைகள்: Gare de l’Est நிலையத்திலும் பீதி
இதே நாளில், அதாவது ஏப்ரல் 16 காலை நேரத்தில், பரிஸில் உள்ள Gare de l’Est எனும் முக்கியமான தொடருந்து நிலையத்திலும் வெடிகுண்டு இருப்பதாக ஒரு பொய்யான எச்சரிக்கை பரவியது. இதனால் அங்கு சில நேரம் பரபரப்பு நிலவியது. எனினும், அங்கு எந்தவிதமான வெடிபொருளும் இல்லையென உறுதி செய்யப்பட்டது.

பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் – அதிகாரிகள் வேண்டுகோள்
தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கும் பொய்யான வெடிகுண்டு எச்சரிக்கைகள், பாதுகாப்பு அமைப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளன. இதனால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், எந்தவித சந்தேகமான நடவடிக்கையும் பார்வையில் பட்டால் உடனே காவல்துறையைத் தொடர்புகொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் பாரிஸ் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நகரங்களில் நடந்த தீவிரவாத தாக்குதல்களின் பின்னணி காரணமாக, குறைந்தபட்ச சந்தேகத்திற்கு கூட கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் சில நேரங்களில் இவாறான போலித் தகவல்களால் தாமதமடைய நேரிட்டாலும், இது அவர்களது பாதுகாப்பிற்காகவே என்பதை மனதில் கொள்ளுமாறு காவல்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img