Wednesday, March 11, 2026
No menu items!

பிரான்ஸ்: எரிபொருள் விலையில் மாற்றம்! உலக சந்தை தாக்கத்தின் பிரதிபலிப்பு!

உலக சந்தையில் குரூட் எண்ணையின் விலை கணிசமாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, பிரான்சிலும் எரிபொருட்களின் விலை குறைவடைய வாய்ப்பு உருவாகியுள்ளது.

UFIP Énergies et Mobilités அமைப்பின் தலைவர் Olivier Gantois, “எரிபொருள் விலைகளில் 5 முதல் 6 சதவிகிதம் வரை குறைவு ஏற்படலாம்” என கூறியுள்ளார். இது நுகர்வோருக்கு தற்காலிகமாக ஒரு நல்ல விடயமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை $74 டொலர்களில் இருந்து $63 டொலர்களாக, சுமார் 15 சதவிகிதத்திற்கும் மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. இது 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு காணப்படும் மிகக் குறைந்த விலை என குறிப்பிடப்படுகிறது.

இந்த விலை வீழ்ச்சியின் முக்கிய காரணிகளில் ஒன்றாக, சர்வதேச அளவில் எண்ணையின் தேவை குறைவடைந்தமை, மற்றும் பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களான OPEC+ நாடுகள் சில உற்பத்தியை அதிகரித்திருக்கலாம் என்பதும் கூறப்படுகிறது.

பிரான்சில் எரிபொருள் விலைகள் குறைவதால், பொதுமக்கள் மட்டும் அல்லாமல் தொழில்துறைகளும் நன்மை பெறலாம். குறிப்பாக, போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகள் இதில் நேரடி லாபம் காணும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

எரிபொருள் விலைகள் இவ்வாறு குறைவது சில மாதங்கள் மட்டுமே நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், சந்தை நிலைமை தொடர்ந்து மாறக்கூடியதென்பதால், இதனை ஒரு நிரந்தர மாற்றமாக கருத முடியாது என்றும், நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

கனடா – அமெரிக்கா வர்த்தக உறவில் புதிய திருப்பம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் வர்த்தக போரில் ஈடுபட்டு கனடா மற்றும் மெக்சிகோவை குறிவைக்கிறார். புதிய வரிகள் (கட்டணங்கள்) விதிப்பதன் மூலம் கனடா இறக்குமதிப்...

12 ராசிகளில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு இன்றைய ராசி பலன்கள்…

மேசம்: இன்று படத்துக்கு போவதால் தொழில்போட்டி குறையும்,பிள்ளைகள் லியோ பார்க்க ஆசைப்படுவதால்மனதில் சஞ்சலம் தோன்றும். ரிசபம் : வீட்டு பெண்களால் இன்று பணசெலவு உண்டாகும்,லியோ டிக்கெட் விலையை கேட்டுமயக்கமுறுவீர்கள். மிதுனம்: லியோ டிக்கெட் கிடைக்காத நண்பர்களால் சஞ்சலம் அடைவீர்கள்,லியோ க்ளைமாக்ஸ் நேரத்தில்வயிறு கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு  கடகம்: பிள்ளைகள் நலனிலும் வளர்ச்சியிலும் அக்கறை இருப்பதால் லியோ படத்துக்கு அவர்களை கூட்டிசெல்லாமல் தனியாக  செல்வீர். சிம்மம் : கவர்ச்சிகரமான ட்ரெயிலை நம்பி படம் பார்க்க வந்துவிட்டோம் என துயர் அடைவீர்.லியோ படம்நினைத்த மாதிரி இல்லாததால் மனசோர்வு அடைவீர். கன்னி: லியோவுக்கு கூட்டி செல்வதாக கொடுத்த வாக்கை உங்கள் நண்பர்கள் நிறைவேற்றாதால் ஏமாற்றம்அடைவீர்.கோபத்துக்குள்ளாகுவீர். துலாம்: சாதுரியமாக வேலையிடத்தில் பேசி லியோ செல்ல நேரத்தை ஒதுக்குவீர்.எதிர்பார்த்த உதவிகள்எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கும். விருட்சிகம் : பிரச்சினைகளில் இருந்து விடுபட அஜித் ரசிகர்களை வம்பிழுப்பீர். உடல் பிரச்சினைக்காகமருத்துவ பரிசோதனை செய்து கொள்ள நேரிடலாம். தனுசு: மனைவி பிள்ளைகளுடன் லியோ பார்க்க வெளிகிடுவீர்.மெட்ரோ பயண தடங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள்உண்டு. மகரம்: 500 ஆ 1000 கோடி லியோ வசூல் பிரச்சினையில் அஜித் ரசிகர்களாக இருக்கும் உங்கள்நண்பர்களுக்கே உமக்கு எதிராக திரும்புவதால் மனசங்கடம் உண்டாகும். கும்பம்: உங்கள் பேச்சாற்றலால் லியோவுக்கு நன்றாக உருட்டி முட்டு கொடுத்து தாங்குவீர்.இதன் மூலம் விஜய்ரசிகர்கள் மத்தியில் மிகுந்த புகழடைவீர். மீனம்: லியோ பற்றி மற்றவர்களின் தப்பான விமர்சனத்தால் வேதனைபடுவீர்கள்,தியேட்டர் பயணங்களால்அலைச்சல் உண்டாகும்.செலவு அதிகரிக்கும்.

கனடா: PG Work Permit விதிகளில் மாற்றம்!

கனடாவில் Post-Graduation Work Permit (PGWP) விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் 2024 நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கும் அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும் புதிய...

More Articles Like This