Modal title

Copyright © Newspaper Theme.

Read More

spot_img

எலான் மஸ்க்: தொழில்நுட்பத்தை மாற்றியமைக்கும் மாபெரும் நகர்வு!

“Twitter-ஐ $44 பில்லியனுக்கு வாங்கினார். இப்போது அந்த நிறுவனம் “X” என அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் அவர் X ஐ சமூக ஊடகமாகக் காட்டினாலும் X இன் உண்மையான நோக்கம், தரவுகளின் பெறுமதி இப்பொழுதுதான் புரிகிறது.”

தென் ஆப்பிரிக்காவில் பிறந்த தொழில்நுட்ப விஞ்ஞானியான எலான் ரீவ் மஸ்க் (Elon Reeve Musk), தொழிலதிபர் மற்றும் கண்டுபிடிப்பாளராக உலகம் முழுவதும் அறியப்படுகிறார். SpaceX, Tesla, Neuralink, The Boring Company, மற்றும் தற்போது xAI எனும் AI நிறுவனத்தை இயக்கும் இவர், 21ஆம் நூற்றாண்டின் ‘ஸ்டீவ் ஜாப்ஸ்’ என அழைக்கப்படுகிறார்.

எலான் மஸ்க் இற்கு சொந்தமான நிறுவனங்களின் பட்டியல்
👉Tesla (2004–) – மின்சார கார்கள் மற்றும் பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்களில் முன்னோடி.
👉SpaceX (2002–) – வான்வெளி பயணங்களை நிஜமாக்கிய நிறுவனம்.
👉Neuralink, The Boring Company, Starlink – மனதைக் கணிப்பதிலிருந்து, பூமியின் அடியில் சுரங்கங்கள் தோண்டும் முயற்சிகள் வரை, பல துறைகளில் மாறுபட்ட முயற்சிகள்.
👉xAI (2023) – மனிதன் போன்று சிந்திக்கும் Artificial Intelligence உருவாக்கும் நோக்குடன் உருவான நிறுவனம்.

கடந்த 2022-ம் ஆண்டு, எலான் மஸ்க் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், Twitter-ஐ $44 பில்லியனுக்கு வாங்கினார். இப்போது அந்த நிறுவனம் “X” என அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் அவர் X ஐ சமூக ஊடகமாகக் காட்டினாலும் X இன் உண்மையான நோக்கம், தரவுகளின் பெறுமதி இப்பொழுதுதான் புரிகிறது.

xAI – X ஒன்றிணைப்பு: ஒரு புதுமையான திட்டம்
2025-ல், மஸ்க் ஒரு பெரிய தீர்மானம் எடுத்தார். தனது AI நிறுவனம் xAI, முன்னாள் Twitter என அறியப்படும் X-ஐ $33 பில்லியனுக்கு ஷேர் அடிப்படையில் வாங்கியது. X-ன் $12 பில்லியன் கடனை தவிர்த்துவிட்டனர்.

அறிகுறிகள்:
X இன் மதிப்பு: $33 பில்லியன்
xAI இன் புதிய மதிப்பு: $80 பில்லியன்
இந்த டீல் மூலம் xAI, OpenAI, Google, Anthropic போன்ற AI நிறுவனங்களுக்கு நேரடி போட்டியாக மாறியது.

Twitter-ஐ $44 பில்லியனுக்கு மஸ்க் வாங்கியபோது அவர் நஷ்டத்தில் விழுகிறார் என்பதே அனைவரது கருத்தாகவும் இருந்தது ஆனால் இப்போது அவரது நோக்கம் வெளிப்படையாத் தெரிகிறது: “AI-க்கு தேவையான நேரடி, மனித தொடர்பு தரவுகள்”

X ஒரு தரவுகளின் தங்கச் சுரங்கம்
600 மில்லியன் பயனர்கள், நேரடி உரையாடல்கள், மனிதக் கருத்துகள், உண்மையான நிகழ்வுகள் – இவை அனைத்தும் AI மாடல்களை நேரடி சூழ்நிலைக்கு ஏற்ப பயிற்சி செய்ய உதவுகின்றன. அதிகபட்ச AI நிறுவனங்கள் பழைய, வரலாற்று தரவுகளை மட்டுமே பயன்படுத்துகின்றன. ஆனால் xAI-க்கு நிகழ்காலத் தரவுப்பெருக்கம் கிடைத்துள்ளது.

இதன் விளைவுகள்:
✅ மனிதன் போல் சிந்திக்கும் AI
✅ நேரடி அப்ளிகேஷன்களில் முன்னிலை
✅ எங்கும் கிடைக்காத சமீபத்திய தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பயிற்சி

எதிர்காலம் எப்படியிருக்கும்?
1️⃣ AI வழிநடத்தும் உள்ளடக்கங்கள்
– உங்கள் விருப்பங்களை புரிந்து, AI பரிந்துரைகள், உண்மை சரிபார்ப்பு, வாதங்களை தீர்ப்பது போன்ற அம்சங்கள்.
2️⃣ X “எல்லாம் ஒரு செயலி” ஆக மாறும்
– உள்ளடக்கம் உருவாக்கம், AI உதவியாளர்கள், கல்வி, செய்தி, என எல்லாம் ஒரே இடத்தில்.
3️⃣ ஒழுங்குமுறை தடைகளை தவிர்க்கும் திறமை
– xAI தான் X-ஐ வாங்கியதால், இது சோஷியல் மீடியா ஒருங்கிணைப்பு அல்ல, AI மேம்பாடு என அமைந்துவிட்டது.

எலான் மஸ்க் ஒரு சாதாரண வாழ்க்கை வாழும் தொழில்நுட்ப மாஸ்டர். அவர் அதிக நேரம் தனது திட்டங்கள், ஆராய்ச்சிகள், மற்றும் நிகழ்ந்த தவறுகளை திருத்துவதில் செலவழிக்கிறார். வெறும் பணத்துக்காக அல்லாமல், மனித இனம் மேம்பட வேண்டும் என்பதே அவரது வழிமுறை.

இது ஒரு சாதாரண டெக் டீல் அல்ல. மாறாக ஒரு திட்டமிட்ட, சக்திவாய்ந்த மாற்றம். xAI இப்போது ஒரு AI சாம்ராஜ்யமாக மாறியுள்ளது. மஸ்க் இப்போது யாருடனும் போட்டியிடவில்லை
அவர் இந்த மொத்த விளையாட்டையே மாற்றி விட்டார். தற்போதைய உலகில், தகவல் தான் சக்தி.மஸ்க் அதனை உணர்ந்தவர் மற்றும் அதனை பயன்படுத்தத் தெரிந்த ஒரே நபர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

We noticed you're visiting from France. We've updated our prices to Euro for your shopping convenience. Use United States (US) dollar instead. Dismiss