80 லட்சம் ரூபாய் கொடுத்து பிரான்ஸ் வந்தவரின் நிலமை.. நேற்று இரவு பிரான்ஸிலிருந்து நண்பன் ஒருவன் phone எடுத்தான்..
கதைச்சு கணகாலம், கதைக்கிடையில் ஒரு கதையும் சொன்னான்..
அவனுடைய நெருங்கிய உறவினர் பெடியன் ஒருவன்,
வயது 24 , இரண்டு வருடங்களுக்கு முன் 80 லட்சம் கட்டி பிரான்ஸ் வந்திருக்கிறான்..
அந்த 80 லட்சத்தில் 60 லட்சம் கடனாக பெற்ற காசாம்,
அதில் 30 லட்சம் காணி உறுதியை கொடுத்து, 1 லட்சத்துக்கு 5000 ரூபாய் மாத வட்டிக்கு வாங்கிய பணமாம்..
அதற்க்கு மாத வட்டி 150,000 ரூபாயாம்.
சரி ஏதோ பெடியன் ஆசைப்பட்டது போல வந்து சேர்ந்துவிட்டான் France க்கு..
France ல் முதல் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டதாம்.
3 மாதங்களுக்கு முன் இரண்டாவது அகதி விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டு விட்டதாம்..
இந்த இரண்டு வருடங்களிலும் மூன்று மாதங்கள் மட்டும் ஒரு கடையில் வேலை செய்திருக்கிறான்.
அடிமாட்டு சம்பளத்திற்க்கு..
இப்போது மனநல மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கிறானாம் தொடர் சிகிச்சைகளுக்காக..
அவன் அவனாக இல்லையாம்…
கடந்த வருடம் France ல் ஒரு தமிழ் இளைஞன் தொடரூர்ந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டவன், காரணம் visa இல்லை, வேலை செய்த இடத்தில் சம்பளமும் கொடுக்கவில்லை போன்ற விரக்தியால்..இப்படி சொல்லப்படாத கதைகள் ஏராளமாக இருக்கிறது புலம்பெயர் தேசத்தில்.. செத்தவர்களை விட உள்ளே வைத்து அழுத்தி கொண்டு ஓடி கொண்டிருப்பவர்களே அதிகம்..
என்ன பாடுபட்டாவது இங்கு வந்துவிட வேண்டும் என்று பலர்,
அப்படி வந்து மன நிம்மதியை தொலைத்தவர்கள் பலர்… நாம் சொன்னா மட்டும் கேட்க போகிறார்களா? அப்ப நீங்க ஊருக்கு வாங்கனு சொல்லுவானுக..
ஈழதமிழர்களின் பிடிவாதம் என்பது வித்தியாசம்… அதில் நல்லா வந்தவன் நூறு பேர் என்றால் அதை பார்த்து அழிந்தவன் ஆயிரம் பேர்,இன்னும் இடையில் நிற்பவன் பல்லாயிரம் பேர் , அவன் வாழ்க்கை அந்தரத்திலேயே தொங்கி அப்படியே முடிந்துவிடுகின்றது. முழு பிடிவாதமாக வீட்டுக்கு தெரியாமல் பிரான்ஸ் வந்து இன்று ஊரில் நாலு வீடு கட்டி நல்லாயிருக்கிறவனும் இருக்கான்.. வீடு காணியை அடகு வைத்து பிரான்ஸ் வந்து இருந்ததையும் இழந்தவனும் இருக்கிறான்.பிரான்ஸ் வேண்டாம் என்று திரும்பி போய் ஊரில் நல்லா வந்தவனும் இருக்கிறான். தொப்பி அளவானவர்கள் போட்டு கொள்ளுங்கள்..