‘வித்தியாசமான’ கேங்க்ஸ்டர் லுக், பஞ்ச் டயலாக்குகள், ஸ்டைலிஷ் ஆக்ஷன் இவை அனைத்தையும் தாண்டி, ‘அஜித்’ என்ற பெயரே இந்த திரைப்படத்தைப் பார்க்கச் சொல்லி ரசிகர்களை ஈர்க்கும் என்பது நிதர்சனமான உண்மை. இதை உணர்த்தவே முயற்சித்திருக்கிறது ஆதிக் ரவிச்சந்திரனின் “குட் பேட் அக்லி”.
கதை சுருக்கம்: ரெட் டிராகன் ரீஎன்ட்ரி
இந்தத் திரைப்படத்தில் “ரெட் டிராகன்” என்ற சக்தி வாய்ந்த கேங்க்ஸ்டராக தோன்றும் அஜித் 18 ஆண்டுகளுக்கு முன் தன் மனைவிக்கு கொடுத்த ஒரு வாக்குறுதியின் காரணமாக வன்முறையை விடுத்து சிறைக்குச் சென்றவர் தற்போது விடுதலையடைந்து வெளியே வந்த பிறகு தொலைந்து போன தனது மகனைத் தேடுகிறார். ஆனால் மகன் கிடைக்கவில்லை…. ரெட் டிராகன் ஏன் சிறைக்கு சென்றார்? அவரது குடும்பத்துக்கு என்ன நேர்ந்தது போன்ற கேள்விகளுக்கு பதிலே இந்த 138 நிமிடங்கள்.
விஜயின் கில்லி முதல் அஜித்தின் மங்காத்தா வரை மேற்கோள் காட்டப்பட்டுள்ள ஒரு கதைக்களமாக…..
படத்தின் ட்ரைலரிலிருந்தே ஒரு விஷயம் தெளிவாக இருந்தது – இது ஒரு ‘நாஸ்டால்ஜிக்’ ரைடு(நாம் திகட்ட திகட்ட பார்த்து ரசித்த திரைப்படங்களை மீட்டிப்பார்க்கும் ஒரு தொகுப்பாக)’அஜித் திலகமாக’ இருந்த காலகட்டத்திலிருந்து, சமீபத்திய மங்காத்தா வரை, அவருடைய பல ஹிட் படங்களை நினைவுபடுத்தும் காட்சிகளும், வசனங்களும், டயலாக்குகளும் இப்படத்தில் இடம் பெற்றிருக்கின்றன.
சில நேரங்களில் இது ரசிகர்களுக்கு ஒரு ஜொள்ளி ஃபீஸ்ட் போலத் தோன்றலாம். ‘காரப்பொரி’ காட்சி, ‘வில்லனுக்கே ஹீரோ மாஸ்’ மாதிரியான காட்சிகள், ‘மீண்டும் வந்து விட்டேன்’ என்ற பாணியில் வெறித்தனம் – எல்லாம் சேர்ந்து “அஜித் இன் பாஸ் இன் பேக்” என சொல்லும் அளவுக்கு உள்ளது.
பாரம்பரிய பிம்பத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் த்ரிஷாவின் கதாப்பாத்திர வடிவமைப்பு…..
த்ரிஷா ஒரு மென்மையான பங்களிப்பை வழங்குகிறார். அவருடைய கதாப்பாத்திரம் மிக வலுவாக எழுதப்படவில்லை என்றாலும், முக்கியமான மற்றும் உருக்கமான தருணங்களில் தோன்றுகிறார். கூடவே அர்ஜூன் தாஸ், சுனில், பிரசன்னா உள்ளிட்டவர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். யோகி பாபுவின் நையாண்டி சில இடங்களில் நன்றாக வேலை செய்கிறது.
தொழில்நுட்ப தரம்: இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங்
ஜி.வி. பிரகாஷ் இசையில் “ரெட்ரோ பீட்” மற்றும் “மாஸ் ரி-இமேஜினிங்” டிரெண்டை பின்பற்றியிருக்கிறார். சில பாடல்கள் திரைப்படத்தில் பாடல் உண்டு என்ற அளவிற்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜன, அஜித்தை புதிய பரிணாமத்தில் காட்ட முயற்சித்திருக்கிறார். வெயிடிங், ஸ்லோ மோஷன் ஷாட்கள், வீசி வரும் மழைபோல் பொழியும் பஞ்ச் காட்சிகள் என அத்தனையும் விழா போலவே. எடிட்டிங் வழக்கத்தைவிட வேகமாக ஓடுகிறது, ஆனால் சில இடங்களில் கதை அதிக வேகமோ என்று தோன்ற வைக்கிறது.
விமர்சன பார்வை – வெறுமனே ஏற்கனவே வெளியான திரைப்படங்களை மேற்கோள்காட்டி செதுக்கப்பட்டது போல் தோன்றுகிறதோ என்கிற அபாயம்?
தினமணி – “இந்த படம் முழுக்க முழுக்க அஜித்துக்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவரின் பாணி, தோற்றம், ஃபைட்டுகள், பேச்சு – அனைத்தும் ரசிகர்களுக்கு தீவிர விசில் பாணி.”
இந்தியன் எக்ஸ்பிரஸ் – “பழைய ஹிட் காட்சிகளை மீண்டும் நினைவுபடுத்தும் முயற்சியாகவே படம் அமைந்துள்ளது. இது ஒரு புதிய கதைக்காக அல்ல. ஆனால் ரசிகர்களுக்கான ஒரு உணர்வுப் பயணம்.”
இந்து தமிழ் திசை – “ஒரு கட்டம் வரை, நாஸ்டால்ஜியா ஒரு இன்ப அனுபவமாக இருக்கிறது. ஆனால் படம் முழுக்க அதன் மீதே ஏறி ஓடும்போது, அது ஒரு சலிப்பாக மாறுகிறது. கதை இயக்கம் ஒரு பக்கம், ரெஃபரன்ஸ் ஓவர்டோஸ் ஒரு பக்கம்.”
‘குட் பேட் அக்லி’ – இது ஒரு கதாபாத்திரம் கொண்ட புது முயற்சி இல்லை. ஆனால், அஜித்தின் ரசிகர்களுக்கான ஒரு விருந்து என்பதில் மாற்றமில்லை. ‘மங்காத்தா’, ‘வாலி’, ‘பில்லா’ – எந்த படங்களை ரசித்தீர்களோ, அதற்கான நுணுக்கமான குறிப்புகள் இங்கே நிறையவே இருக்கின்றன. ஆனால், புதிய பார்வையாளர்களுக்கு இது ஒரு ‘டெஜா வு’ அனுபவமாக மாறக்கூடும்.
ரேட்டிங்: 3.25/5 – “அஜித் ரசிகர்கள் கொண்டாடும் சரவெடியாக; மற்றவர்கள் சற்று கூர்ந்து கவனித்து புரிந்து கொள்ள வேண்டிய அனுபவமாக. “