செய்தி
நாரதர் கலகம் நன்மைக்குத்தான் …..
நேற்று(26/03/2025) கோப்பாய் பிரதேச செயலக கூட்டப்பக்கம் அர்ச்சுனா எம்.பி யைத் தவிர ஒருவரையும் காணவில்லை என்னவாறு செய்தி ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதில் அர்ச்சுனா எம்.பி குறித்த கூட்டத்திற்கு சமூகமளித்தமையால் தான் அந்த கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லையாமா என்று ஒரு தேசியவாதி சொன்னதாகவும் அவரது இந்த நடத்தைப் பற்றி விபரிப்பதாகவும் அந்த செய்தி அமைந்திருந்தது.
இந்த செய்தி பற்றி அர்ச்சுனா எம்.பி இன் கருத்து
இன்றைய தினம் தினக் குரல் பத்திரிகையில் வந்த ஆசிரியர் தலையங்கம் (என்று நினைக்கிறேன்) ஒன்றை whatsapp மூலமாக எனக்கு யாரோ ஒரு அன்பர் பகிர்ந்திருந்தார்.
இன்று காலை 9 மணிக்கு இளங்குமரன் தலைமையில் பிரதேச ஒருங்கமைப்பு கூட்டம் வடமராட்சி கிழக்கு பகுதியில் நடைபெறுகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காகவும் வேறு ஒரு சில காரணங்களுக்காகவும் நான் இன்றைய பிரதேச உறங்க நினைப்பு குழு கூட்ட மீட்டிங்கை தவிர்க்கிறேன்.
சற்று நிதானமாக கேட்கும் கேள்விகளை ஊகித்து பதில் சொல்லக் கூடியவர்களுடன் பிரதேச ஒழுங்கமைப்பு கூட்டங்களை நடத்திக் கொள்ளலாம்.
உதாரணமாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவன் ஒரு ஆசிரியர் மட்டுமல்ல ஒரு அதிபரும் கூட.
அவருக்கு என்னால் கேட்கும் கேள்விகளை பொறுமையாக கேட்கவும் அதே நேரம் அந்தக் கேள்விகளுக்குரிய பதில்களை இல்லாத இடத்தில் ஒன்றாக சேர்ந்து பொதுமக்களின் நன்மைக்காக இணைந்து செயல்பட்டு பிரச்சினைகளை இனம் கண்டு தீர்த்து வைக்கக்கூடிய வழி வகைகளை இனம் காணலாம்.
ஆனால் இளாம் குமரன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் நடக்கின்ற கூட்டங்கள் மக்களுக்கு இடையே தேவையில்லாத சலசலப்புகளை ஏற்படுத்தும்.
அவரால் நாங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு எந்த பதில்களையும் தரக்கூடிய நிலைமையில் ஊகித்துக் கூட கதைக்க முடியாது.
அவ்வாறான ஒருவரின் தலைமையில் நடக்கும் பிரதேச சபை கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதே தமிழரின் எதிர்காலத்துக்குரிய தகுந்த செயற்பாடாக கருதுகிறேன்.
அவருடைய ஒரு சில கைக்கூலிகள் திட்டமிடப்பட்டு பொதுமக்களாக இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள செய்யப்பட்டு குழப்பம் செய்ய முனைந்திருப்பதாக தெளிவாக பொதுமக்கள் எனக்கு அறிவித்திருக்கிறார்கள்.
இதனால் இவருடைய தலைமையில் நடக்கின்ற மீட்டிங்கை நான் என்று வெளிநடப்பு செய்திருக்கிறேன்.
ஆனால் அந்தப் பிரதேசத்தில் நடக்கின்ற அபிவிருத்தி வேலைகளை நாங்கள் கடுமையாக கண்காணித்து பாராளுமன்றத்தில் மட்டுமல்ல மாகாண சபைகளில் கூட நிவர்த்தி செய்வோம்.
காலம் காத்துக் கிடக்கிறது பதில் சொல்லுகிறோம்!