மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி. அண்மையில் நாடாளுமன்ற அமர்வில் கருத்து வெளியிட முற்பட்ட போது, அவருக்கு தடையாக சபாநாயகர் செயல்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
சாணக்கியன் எம்.பி. கருத்துக்கு தடையா?
மட்டக்களப்பில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சாணக்கியன் எம்.பி. கருத்து வெளியிட முயன்றபோது, “இது தேசிய பிரச்சினை அல்ல” என்று கூறிய சபாநாயகர், அவரை முட்டுக்கட்டியதோடு, அடுத்த பேச்சாளருக்கு வாய்ப்பு வழங்கினார்.
அர்ச்சுனா எம்.பி. கொதித்தெழுந்தது ஏன்?
சாணக்கியன் எம்.பிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை கண்டித்தே, நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா எம்.பி. ஆவேசமாக எதிர்ப்புத் தெரிவித்தார். “ஏனைய எம்.பிகளுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படும்போது, எங்களுக்கு மட்டும் ஏன் மறுக்கப்படுகிறது?” என்ற கேள்வியை எழுப்பி, சபாநாயகருடன் தர்க்கத்தில் ஈடுபட்டார். இதனால், சபையில் பரபரப்பு ஏற்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் தலையீடு
அர்ச்சுனா எம்.பி.யின் எதிர்ப்புக்குப் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சாணக்கியன் எம்.பிக்கு உரையாற்றும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இறுதியாக, சபாநாயகர் சாணக்கியன் எம்.பிக்கு பேச அனுமதி வழங்கினார்.
சாணக்கியனுக்கு ஆதரவாக அர்ச்சுனா எம்.பி.
சாணக்கியன் எம்.பிக்கு ஆதரவாக அர்ச்சுனா எம்.பி. தொடர்ந்து சபாநாயகரிடம் கேள்விகள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.