பரிசில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நோர்து-டேம் தேவாலயம், 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் பெருமளவில் சேதமடைந்தது. இதனை மீளப்புதுப்பிக்கும் பணிகளுக்கு உலகம் முழுவதும் உள்ள நன்கொடையாளர்கள் தாராளமாக நிதி வழங்கினர். அவர்களை கௌரவிக்கும் வகையில், அபூர்வமான ஒரு பரிசு காத்திருக்கிறது.
சிதைவிலிருந்து கிடைக்கும் வரலாற்றுச் சின்னம்!
நோர்து-டேம் தேவாலயத்தின் தீவிபத்துக்கு முன்பு அதன் அமைப்பில் இருந்த சிறிய கற்கள் (stone fragments), சிதைவுகளில் இருந்து பாதுகாத்து எடுக்கப்பட்டன. இவற்றிலிருந்து 50 பேருக்கு பரிசாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யார் இதில் கலந்து கொள்ளலாம்?
€40 யூரோ அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை நோர்து-டேம் திருத்தப்பணிக்காக நன்கொடை வழங்கியவர்கள்.
தங்களது பெயர் மற்றும் விவரங்களை ஏப்ரல் 4ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை), நள்ளிரவு 11:59க்குள் இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
பரிசு பெற்றவர்களை எப்போது அறிவிப்பார்கள்?
குலுக்கல் (lucky draw) ஏப்ரல் 15, செவ்வாய்க்கிழமை நடத்தப்படும்.
அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 அதிர்ஷ்டசாலிகளுக்கு இந்த வரலாற்றுச் சின்னம் வழங்கப்படும்.