பரிஸின் Rue de Lévis வீதியில் அமைந்துள்ள நான்கு அடுக்கு குடியிருப்பு கட்டிடத்தில் ஓகஸ்ட் 4, 2025 அன்று பிற்பகல் 3 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. நான்காவது தளத்தில் தொடங்கிய தீ வேகமாகப் பரவியதை அடுத்து, தீயணைப்பு படையினர் உடனடியாக அழைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் தீக்குள் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- Advertisement -
இந்த துயர சம்பவம் குடியிருப்பு வாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலதிக விவரங்கள் விசாரணை முடிவடைந்த பின்னர் தெரிவிக்கப்படும்.
- Advertisement -