கூலி | Coolie
Typical Lokesh style movie…!
கதையில் நிறைய layers இருந்தது படத்துக்கு மிகப்பெரிய பலம். ஆனால் அதுவே சில இடங்களில் loose endsஆகப் பட்டது. ஆங்காங்கே ஸ்க்ரிப்டில் சில ஓட்டைகள் தென்பட்டன. ஆனால் அதையும் தாண்டிப் படத்தோடு ஒட்டவைப்பது ஸ்க்ரீன்ப்ளே தான். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று கதைக்களங்களில் கதை பயணிப்பதால் படத்தின் 3 மணிநேரமும் சலிப்பில்லாமல் பார்க்கமுடிகிறது.
ஸ்க்ரீன்ப்ளே தாண்டிப் படத்தில் பொசிடிவ்கள் என்றால் எல்லா நடிகர்களுக்கும் முக்கிய பங்கு கொடுத்திருப்பது தான். ரஜினி, நாகர்ஜுனா, சௌபின், உபேந்த்ரா, ரச்சிதா ராம், ஸ்ருதி என் அனைவருக்கும் weightஆன ரோல்கள் கொடுக்கப்பட்டிருந்தது.
அதிலும் நாகர்ஜுனா 🔥🔥🔥
ரட்சகன் லுக்கில் ஒரு சைக்கோத்தனமான வில்லனாக அவ்வளவு அட்டகாசமாக மிரட்டியிருந்தார். அந்த சிரிப்பு, பாடி லாங்குவேஜ், Funky Hairstyle என சொல்லிக்கொண்டே போகலாம்.
இன்னொரு புறம் சௌபின். இந்தக் கதாபாத்திரத்துக்கு எதற்காக ஃபகத்தை யோசித்தார்கள் என்று தெரியவில்லை. சௌபின் apt ஆகப் பொருந்தியிருந்தார்.
உபேந்த்ராவுக்கு limitedஆன ஸ்பேஸ் தான். ஆனால் அவர் வரும் சீன்களில் எல்லாம் விசில் மொமென்ட் ஆக இருந்தது. அவர் ஆடியோ லோஞ்ச்சில் சொன்ன துரோணாச்சார்யா – ஏகலைவன் மொமென்ட்கள் எல்லாம் திரையில் பட்டாசாக இருந்தன.
இந்தமுறை சுருதிக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் மிக அழகாக ஸ்கோர் பண்ணியிருக்கிறார். அவ்வளவு எமோஷனலான ரோல்களில் இதற்கு முதல் சுருதிஹாசனைப் பார்த்ததில்லை என்பதாலோ என்றவோ வெகுவாகப் பிடித்திருந்தது.
இன்னும் ஒரு ஸ்பெஷல் சீன் இருக்கிறது. அதைத் தியேட்டரில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். சற்றும் எதிர்பார்க்காத சீன் அது. தரமாக இருந்தது.
அதேபோல படத்தில் மிகவும் அட்டகாசமாக இருந்த இன்னொரு விஷயம் என்றால் ஸ்டன்ட் காட்சிகள் தான். வன்முறைக் காட்சிகள் அதிகம் என்றாலும் அன்பறிவ் Stunt Choreography பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். அதுவும் அந்த தேவா மேன்ஷன் சண்டைக் காட்சி 🔥🔥🔥
அனிருத்தின் பங்கு நன்றாக இருந்தாலும் விக்ரம் அளவுக்கு இல்லை என்றே நினைக்கிறேன். சிக்கிட்டு மற்றும் மோனிகா பாடல்கள் நன்றாக இருந்தன. அதேபோல ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் போட்ட பின்னணியிசையையும் கடைசியாக வந்த கொக்கி + டிஸ்கோ mixஉம் பிடித்திருந்தது.
Flashback மற்றும் De-aging காட்சிகளில் நன்கு மினக்கெட்டிருக்கிறார்கள். 80s ரஜினியை அப்படியே திரையில் காண்பித்திருந்தார்கள். Voiceஇல் மட்டும் இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம் என்று தோன்றியது.
கடைசியாக வந்த அமீர்கான் போர்ஷன் அவசியம் இல்லாததாகப்பட்டது. வீண் நேரவிரயம் என்றே சொல்லிவிடலாம்.
அதேபோல படத்தில் ரஜினி மொமென்ட்ஸ் என்று ஸ்பெஷலாகச் சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை. அதுவொரு மைனஸ் என்றே சொல்லவேண்டும். படம் ஒரு கட்டத்துக்கு மேல் அதிகம் Intenseஆகப் பயணிப்பதால் கதையைக் கூர்மையாகக் கவனிக்கவேண்டி இருந்தது. ஆங்காங்கே கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணியிருக்கலாம் என்றே தோன்றுகிறது.
கண்டிப்பாக தியேட்டரில் பார்க்கக்கூடிய Entertainer. ஆனாலும் லோகேஷின் விக்ரம், கைதியோடு ஒப்பிட்டால் சற்றுக் குறைவு என்றே தோன்றுகிறது.
நன்றி – கிருத்திகன் மதிரூபன்