பிரான்சின் மார்செயில் நகரில் இன்று பிற்பகல் நடந்த கத்தியால் தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதலாளி, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில், போலீசார் பல துப்பாக்கி சூட்டுகளால் தாக்குதலாளியை தடுக்கின்ற காட்சி பதிவாகியுள்ளது. சம்பவம், Cours Belsunce மற்றும் Rue Thubaneau சந்திப்பில் உள்ள ஒரு ஃபாஸ்ட்-ஃபுட் கடையின் வெளிப்புறத் தெரசில் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மிகவும் தீவிர காயமடைந்த ஒருவரை அவசர சிகிச்சை பிரிவு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். விசாரணை வட்டாரங்கள் தெரிவிப்பதாவது, தாக்குதலாளி 1990ஆம் ஆண்டு பிறந்த துனிசிய நாட்டவராக இருக்கிறார். அவர் பிரான்சில் சட்டபூர்வமாக தங்கியிருந்தார். கடந்த காலத்தில் யூத விரோத கருத்துக்களை வெளியிட்டவராகவும் அவர் உளவுத்துறைக்கு அறியப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தேசிய பயங்கரவாத வழக்குகள் விசாரணை பிரிவு இதுவரை சம்பவத்தில் தலையீடு செய்யவில்லை. “இது ஒரு மனநிலை சீர்குலைந்த நபரின் செயல் என்றும் கருதப்படுகிறது” என விசாரணை வட்டார தகவல் கூறுகிறது.
மேலும், தாக்குதலாளர் சம்பவம் நடந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் வசித்து வந்திருக்கலாம் என்றும், வீட்டு வாடகை தொடர்பாக கடை உரிமையாளருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தச் செயலில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மார்செயில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் பாதுகாப்பு வலயத்தை அமைத்து, Canebière மற்றும் Old Port அருகிலுள்ள பகுதி முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.இதன் மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.