ஈஸ்டர் வார இறுதி நாட்களில், பிரான்ஸ் முழுவதும் முக்கியமான நெடுஞ்சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என Bison Futé எச்சரிக்கிறது. இந்த நெரிசலுக்கு முக்கியக் காரணம் – Zone A பகுதிகளில் (உதாரணமாக: போர்டோ, லியோன், கிளெர்மொங்-ஃபெர்ரான்) விடுமுறைகள் துவங்குகின்றன, மற்றும் Zone B (உதாரணமாக: மார்செய், ரென்ஸ், ஸ்ட்ராஸ்பூர்க்) பகுதிகளில் விடுமுறை முடிவடைகின்றது. இதனால் மக்கள் பலரும் ஒரே நேரத்தில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
முக்கிய நெரிசல் நாட்கள்:
வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18)
காலை முதல் மாலை வரை அதிகமான நெரிசல் எதிர்பார்க்கப்படுகிறது.
A1, A25, A13, A11, A63, A7 உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகளில் கூடுதல் நெரிசல், குறிப்பாக இத்தாலி எல்லை வழியாகவும் பேருந்துகள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் கூடுதலாக இருக்கலாம்.
சனிக்கிழமை (அப்ரல் 19):
மக்கள் விடுமுறைக்கு புறப்படும் நாளாக இருப்பதால், காலை நேரம் முதல் மதியம் வரை பயணங்கள் மிகவும் மந்தமாக இருக்கும்.
திங்கட்கிழமை (அப்ரல் 21):
விடுமுறை முடிந்து மக்கள் திரும்பும் நேரம் என்பதால், மாலையில் குறிப்பாக தெற்கு-வடக்கு திசைகளில் (South to North) போக்குவரத்து சுமையாக இருக்கும்.
பயணம் நேரங்கள்:
ஞாயிற்றுக்கிழமை (அப்ரல் 20):
போக்குவரத்து மிக மிதமாக இருக்கும் அதாவது நெரிசல் சமாளிக்க கூடிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமூகமான பயணத்தை விரும்புவோருக்கு இது சிறந்த நாளாகும்.
பொதுப் போக்குவரத்து:
ரயில், மெட்ரோ மற்றும் பஸ் சேவைகள் சரிவர இயங்கும் என SNCF தெரிவித்துள்ளது. நெரிசலைத் தவிர்க்க இது ஒரு சிறந்த மாற்று வழியாகும்.
பாதுகாப்பு ஆலோசனைகள்:
👉உங்கள் பயணத்தை முன்பே திட்டமிடுங்கள் (நேரம் மற்றும் ;பயணிப்பதற்கான வழிமுறைகள்).
👉Bison Futé, Google Maps, Waze போன்ற செயலிகளை பயன்படுத்தி நேரடி போக்குவரத்து நிலவரத்தை சரிபார்க்கவும்.
👉நீண்ட பயணங்களுக்கு முன் உங்கள் வாகனத்தை சரிபார்க்கவும் – டயர் அழுத்தம், எரிபொருள் நிலை, பிரேக் நிலை போன்றவை.
👉குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பயணிக்கும்போது போதிய இடைவேளைகளை எடுத்துக் கொள்ளவும்.
ஈஸ்டர் விடுமுறையை கொண்டாடும் மக்கள் பெரிதளவில் சாலை பயணங்களைத் திட்டமிட்டு உள்ளதால், நெரிசல் தவிர்க்கப்பட முடியாது. ஆனால் சீராக திட்டமிடப்பட்ட பயணம், சரியான நாளைத் தேர்ந்தெடுக்கும் விவேகம், மற்றும் பொது போக்குவரத்து போன்ற மாற்று வழிகளால் நீங்கள் உங்கள் பயணத்தை சௌகரியமாக்கலாம்.