Read More

spot_img

பிரான்ஸ்: கடும் புயல்! ஒருவர் பலி!

மார்ச் 21, வெள்ளிக்கிழமை, Toulouse நகரை தாக்கிய கடும் புயல் காரணமாக ஒருவர் உயிரிழந்தது சோகமளிக்கின்றது.

Toulouse நகருக்கு முந்தைய தினமே செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய புயல்,

மரங்களை முறியச் செய்து நான்கு மகிழுந்துகளை பலமாக சேதப்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியாகி, மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

- Advertisement -

புயல் தாக்கம் அதிகமாக இருந்த Haute-Garonne மற்றும் Tarn மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து சாலைகள் மறிக்கப்பட்டு போக்குவரத்து சிக்கலாகியுள்ளது.

சில இடங்களில் மின்சாரத்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.

அதிகரித்த வளிமண்டல அழுத்த மாற்றங்கள் காரணமாக, மழை மற்றும் புயல் வேகம் ஒரே நேரத்தில் ஏற்பட்டதால், பாதிப்பு அதிகரித்தது.

இட்லர் பிரதேசங்களில் புயலால் ஏற்படும் அபாயங்களை தவிர்க்க பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

முந்தைய ஆண்டுகளில் நிகழ்ந்த புயல் தாக்கங்களுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டின் புயல்கள் மிகவும் கடுமையானதாகும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட கடும் வானிலை மாற்றங்களே இதற்கான காரணமாகும் என அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், எதிர்வரும் நாட்களில் தொடர்ந்து புயல் எச்சரிக்கைகள் விடுக்கப்படலாம் என்பதால்,

பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கும்படி ஆலோசிக்கப்பட்டுள்ளனர்.

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img