Yvelines: நான்கு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.. 36 இராணுவ வீரர்கள் காயம்.
Yvelines பகுதியில் உள்ள Mantes-la-Jolie நகரை ஊடறுக்கும் A13 நெடுஞ்சாலையில், நான்கு இராணுவ பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் 36 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து 19 மார்ச் 2025, புதன்கிழமை இரவு நிகழ்ந்தது.
இந்த நான்கு பேருந்துகளிலும் 120 இராணுவ பயிற்சி மாணவர்கள் பயணம் செய்தார்கள், விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து அவசரசிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
மேலும், 35 பேர் காயங்களுக்கு உண்ணாகியுள்ளனர். அவர்களுக்கும் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.
விபத்துக்கான காரணங்கள் இதுவரை தெளிவாக தெரியவில்லை. விபத்து ஏற்பட்ட போது, இந்த இராணுவ பயிற்சி மாணவர்கள் Evreux நகரில் நடைபெற்று வந்த பயிற்சியை முடித்துவிட்டு திரும்பும்போது இவ்விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் வழக்கு பற்றிய மேலும் விவரங்களை ஆராய்ந்து வருகின்றனர்.