வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 11, 2025, பிரான்சின் Noisy-le-Grand பகுதியில் முன்னாள் கணவரால் நடந்த கொலை முயற்சி, குடும்பக் பிரச்சனைகள் எவ்வளவு மோசமான முடிவுகளுக்கு வழிவகுக்கலாம் என்பதை காட்டுகிறது.
35 வயது பெண் ஒருவர், தனது முன்னாள் கணவரால் வன்முறை தாக்குதலுக்குள்ளானார். அவர், குடியிருப்பின் பொது வெளியில், கழுத்திலும் வயிற்றிலும் பல முறை கத்தியால் குத்தப்பட்டார். இந்த பயங்கரமான தாக்குதல் நடப்பதற்குள் தாயை காப்பாற்ற முயன்ற 13 வயது மகனின் துணிவால் ஒரு பெரிய பேரழிவைத் தடுக்க முடிந்தது.
சம்பவத்தின் போது, தாயை காப்பாற்ற முயன்ற 13 வயது மகனின் செயல், தாயின் உயிரைக் காப்பாற்றும் முக்கிய காரணி ஆனது. தாயின் கைகளில் ஏற்பட்ட காயங்கள், தன்னை காக்க முயன்றபோது ஏற்பட்டவை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்டவர் 37 வயது ஆண், இவர் அவரின் முன்னாள் கணவர் எனக் கூறப்படுகிறது. சம்பவத்திற்குப் பின் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி, உடற்கூறு காயம் விளைவித்தல், மற்றும் பிள்ளைகளின் முன்னிலையில் வன்முறை போன்ற குற்றச்சாட்டுகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் “protocole féminicide” எனப்படும் அவசர பாதுகாப்பு திட்டத்திற்குட்பட்டது. இதில், உயிருக்கு ஆபத்தான நிலைக்கு உள்ள பெண்கள் மற்றும் பிள்ளைகள் உடனடியாக பாதுகாக்கப்படுகிறார்கள்.
தற்போது, தாயும், அவரது இரண்டு பிள்ளைகளும் l’hôpital Robert-Ballanger (Aulnay-sous-Bois) மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குப் பின், l’Aide Sociale à l’Enfance (ASE) எனப்படும் சிறுவர் நலத்துறை பராமரிப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம், பிரான்சில் குடும்ப violence (வன்முறை) மற்றும் féminicide (பெண்களுக்கு எதிரான கொலை முயற்சிகள்) என்ற பிரச்சினைகள் இன்னும் தொடர்ந்துகொண்டிருப்பதை வெளிக்கொணர்கிறது. குழந்தைகளின் மனநிலையும், இவாறான சம்பவங்களின் பின்னர் அவர்களிடம் ஏற்படும் மனத்தாக்கமும் பெரும் கவலைக்கிடமாக உள்ளது. இவ்வாறான சம்பவங்களின் பொருட்டு
சட்டத்துறையும், சமூக சேவையுயும் மேலும் பலப்படுத்தப்பட வேண்டிய அவசியம் தெளிவாகத் தெரிகிறது.