Read More

பிரான்ஸ்: நிறுத்தப்பட்டுள்ள முக்கிய சேவை; தமிழர்கள் கவனிக்கவும்!

விமான சேவை வேலை நிறுத்தத்தினால் பயணிகள் மற்றும் பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று, ஜூலை 4, வெள்ளிக்கிழமை, விமான கட்டுப்பாட்டாளர்களின் (contrôleurs) வேலை நிறுத்தம் இரண்டாவது நாளாக தொடர்கையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து

செய்யப்பட்டுள்ளன அல்லது தடைகளை எதிர்கொண்டுள்ளன. இது இலட்சக்கணக்கான பயணிகளின் விடுமுறைத் திட்டங்களை பாதித்து, பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று, வியாழக்கிழமை, 933 விமானங்கள் இரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் பல விமானங்கள் புறப்படவோ அல்லது வந்தடையவோ முடியாமல் தவிக்கின்றன.

- Advertisement -

Charles-de-Gaulle மற்றும் Orly விமான நிலையங்களில் மட்டும் ஒரு நாளில் சுமார் 350,000 பயணிகள் பயணிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. போக்குவரத்து அமைச்சர் Philippe Tabarot இன்று காலை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், “இந்த வேலை நிறுத்தம் ஏற்றுக்கொள்ள முடியாதது. விமான நிறுவனங்கள் பல மில்லியன் வருவாயை இழக்கின்றன.

சுற்றுலாத் துறை கடுமையாக பாதிக்கப்படுகிறது. பெரு நிறுவனங்கள் முதல் வாடகை மகிழுந்து சாரதிகள் வரை அனைவரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்,” என்று கவலை தெரிவித்தார். விடுமுறை காலத்தில் பயணிக்கத் தயாராக இருக்கும் பயணிகளுக்கு இந்த வேலை நிறுத்தம் பெரும் இடையூறாக அமைந்துள்ளது. விமான நிறுவனங்கள் மற்றும் சுற்றுலாத் துறையினர் இதற்கு உடனடி தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளது.

- Advertisement -