தமிழர்கள் புலம்பெயர்வு உலக நாடுகள் முழுவதும் தமிழ்
மட்டுமல்ல தமிழ் கலாச்சாரமும் பரவலடைந்து காணப்படுவதற்கு வழிவகுத்தது. அதனடிப்படையில் சைவ கோவில்களும் சைவ தமிழ் கலாச்சசாரமும் பிரான்ஸ் போன்ற தமிழர் வாழும் நாடுகளில் மிகுந்த சிரத்தையுடன் பின்பற்றப்பட்டு வருகின்றது. தமிழரின் திருமண சம்பிரதாயமான தாலி தொடர்பில் பாரிஸில் நடந்த சம்பவம் ஒன்று 👇
நான் தற்போது பிரன்சில் வசிக்கிறேன். கடந்த 12.04.2025 நான் பாரிசில் ஒரு சம்பவத்தை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் இருக்கும் பிள்ளையார் கோயில்தான் அந்த கொடுமையை பார்த்தேன்! 40 அல்லது 45 வயது இருக்கும் ஒரு தம்பதி அவர்களின் மகன் 20 வயது இருக்கும், இவர்கள் மூவரும் ஒரு அர்ச்சனை செய்ய ரிக்கற் 8 யூரோவுக்கு வேண்டுகின்றனர். அப்போது அந்த அம்மா அர்ச்சனை துண்டு கொடுப்பவரிடம் நாங்கள் ஒரு தாலிக்கொடி வாங்கி வந்திருக்கிறோம் அதை அர்ச்சனை செய்த பிறகு கட்டுகின்றோம் என்று கேட்டார், அதற்கு அவர் ஒம் என்று கூறினார், பின்னர் அர்ச்சனை செய்யும்போதும் பூசாரிக்கு அந்த அம்மா 10 யூரோ காசு கொடுத்தார். அர்ச்சனை செய்து முடிந்த பிறகு அந்த அம்மாவின் கணவர் தாலியை கட்டிவிட பையில் இருந்து தாலிக்கொடியை எடுத்தார், அப்போது அங்கு வந்த இன்னொரு அர்ச்சகர் இங்கே தாலி கட்ட முடியாது என்று சொன்னார்😩 அப்போது அந்த பெண்ணின் கணவர் ஏன் என்று கேட்டார்? இங்கே தாலி கட்ட வேண்டும் என்றால் 125யூரோக்கள் கட்ட வேண்டும் என்று சொன்னார்! அதற்கு அந்த பெண் நாங்கள் ஏற்கனவே திருமணம் செய்து தாலி எல்லாம் கட்டினோம், எங்களுக்கு 20 வயது மகன் இருக்கிறார் ஆனால் இப்போது இந்த தாலி புதுசாக செய்து வந்தது இருக்கிறோம் அதை கோவிலில் வைத்து போட்டால் நல்லது என்று தான் வந்தேன் என்று கூறினார். ஆனால் இப்போது அந்த கோவிலின் உரிமையாளர் என்று கூறி 65 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் வந்தார்.. அவர் நான் சும்மா ஒன்றும் கோயில் வைத்திருக்கவில்லை இந்த கோவிலில் மந்திரத்தை சொல்லி தாலி கட்டினாலும் இல்லை அர்ச்சனை செய்து விட்டு தாலி கட்டினாலும் அல்லது ஒன்று செய்யாமல் சும்மா தாலி கட்டினாலும் அல்லது சும்மாதனும் தாலியை கழுத்தில் போட்டாலும் 125யூரோக்கள் தரவேண்டும்😡 என்று கூறினார். அதற்கு அந்த தம்பதி சம்மதிக்கவில்லை👍 அப்பொழுது இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, அப்போது அந்த கோவிலின் பூசாரி, கோயில் உரிமையாளர், ரிக்கற் விற்று பணம் பெறும் நபர், மற்றும் ஒரு பெண் என 5,6 பேர்கள் சேந்து அந்த தம்பதியை கோவிலுக்கு வெளியே தள்ளிக் கொண்டே போய் விட்டார்கள். என்ன ஒரு கொடுமை😢 அந்த தம்பதியினர் போகும் போது இது கோயில் அல்ல இது ஒரு சாக்கடை என்று பலரும் பார்க்க பெரிய சத்தமாக சொல்லிக்கொண்டே போனார்கள் அப்போது தான் நானும் இந்த சாக்கடையில் தான் நானும வந்து அன்னதானம் சாப்பிட்டேன் என்று மனம் நொந்து கொண்டேன்.. அவர்கள் ஒரு ஓரமாக நின்று அந்த தாலியை போட விட்டிருக்கலாம்…. அந்த அளவுக்கு வெளிநாட்டிலும் பண பேய்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்! எனது ஆதங்கம் எல்லாம் கடவுள் பெயரால் நடப்பதால் தான். நன்றி