லியோன் நகரத்தில் போலி பரிசோதகர் நடவடிக்கை:
பிரான்ஸின் லியோன் நகர மெட்ரோவின் B அணியில் உள்ள Saxe-Gambetta நிலையத்தில், கடந்த மார்ச் 26ஆம் தேதி, ஒரு போலி பயணச்சீட்டுப் பரிசோதகர் (Fake Ticket Inspector) பயணிகளிடம் பயணச்சீட்டுகளை பரிசோதிப்பதுபோன்று நடித்து, பலரிடம் தண்டப்பணம் என்ற பெயரில் பணம் வசூலித்துள்ளார்.
இந்தச் சம்பவம், அந்த பகுதி பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிலர் அதிகாரபூர்வ புகார்களைச் செய்ததைத் தொடர்ந்து, லியோன் நகர மெட்ரோ நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பல எச்சரிக்கை அறிவிப்புகளை மெட்ரோ நிலையங்கள் மற்றும் தொடர்ச்சியான ஒலிப்பாதையில் (public announcement system) வெளியிட்டு வருகின்றது.
பாதுகாப்பு வழிமுறைகள்:
➡️பணிபுரியும் உண்மையான பரிசோதகர் ஒருவரும் தனியாக செயல்பட முடியாது. எப்போதும் அவர்கள் குறைந்தது இரண்டு பேர் குழுவாகவே செயல்படுகிறார்கள்.
➡️அவர்கள் உடையில் மெட்ரோ நிறுவனத்தின் அதிகாரபூர்வ அடையாள அட்டையும் (badge) மற்றும் அணிகலன்களும் இருக்கும்.
➡️தனியாக நடமாடும் பரிசோதகர் ஒருவர் பயணச்சீட்டை பார்க்க கேட்பாரானால், எச்சரிக்கையாக இருங்கள் – அவருக்கு காட்ட வேண்டாம்.
➡️உடனடியாக மெட்ரோ நிலைய ஊழியரிடம் அல்லது பாதுகாப்புத் துறையினரிடம் தகவல் அளிக்கவும்.
மற்ற நகரங்களிலும் கவனம் தேவை:
போலி பரிசோதகர் சம்பவம் லியோனில் இடம்பெற்றாலும், இது பாரிஸ் உள்ளிட்ட மற்ற பெரிய நகரங்களிலும் நடைபெற வாய்ப்பு உள்ளதைக் கருத்தில் கொண்டு, அனைத்து மெட்ரோ பயணிகளும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
இணையத்தில் பரவும் போலி டிக்கெட் விற்பனை:
இதேபோன்று, சமீபத்தில் போலி ரயில் டிக்கெட் ஒன்லைன் விற்பனை தொடர்பாகவும், சில பயணிகள் மோசடிக்குள்ளான சம்பவங்கள் பதிவாகியுள்ளது. எனவே, ஒன்லைனில் டிக்கெட் வாங்கும் போது, அதிகாரபூர்வ வலைத்தளங்களையும் செயலிகளையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பயணச்சீட்டுப் பரிசோதனை என்பது பாதுகாப்புக்கான ஒரு நடவடிக்கைதான். ஆனால் அதையே ஏமாற்றுக் குற்றவாளிகள் தமது சுயலாபத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கவனித்து, நாம் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும். யாரும் நேரில் பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை – சந்தேகத்திடமான சூழ்நிலைகள் நேர்ந்தால், உடனே அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுங்கள்.