லண்டன்: பிரித்தானியாவின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு நிகழ்ந்த கொடூரமான கொலை சம்பவம், தற்போது முழுமையான விசாரணை தகவல்களுடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
23 வயதான ஔர்மன் சிங் என்ற DPD சாரதி, பொதுமக்கள் முன்னிலையில் பகல் நேரத்தில் 8 பேர் கொண்ட குழுவால் திட்டமிட்டு தாக்கப்பட்டு, உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பிரித்தானியாவை மட்டுமல்ல, உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொடூரமான தாக்குதல் – கேமராவில் பதிவான சாட்சிகள்
2023 ஆகஸ்ட் 21 ஆம் தேதி, பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில், கோடாரி, ஹொக்கி மட்டை, கத்தி, கோல்ஃப் கிளப் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த குழு, ஔர்மன் சிங்கை கொடூரமாக தாக்கியது. அவரது இடது காதை துண்டித்ததுடன், மண்டையைப் பிளந்து மூளை சிதையும்வரை தாக்கினர்.
இந்த தாக்குதல், அப்பகுதியில் அமைந்திருந்த பாதுகாப்பு மற்றும் குடியிருப்பு கேமராக்களில் தெளிவாக பதிவாகியுள்ளது.
பின்னணியில் பழிவாங்கும் நோக்கம்
விசாரணை அதிகாரிகள் இந்த தாக்குதலை மெக்சிகோவில் போதை மருந்து குழுக்கள் நடத்தும் படுகொலைகளுக்கே ஒப்பிடக்கூடியது என கூறுகின்றனர்.
இந்த கொலைக்குச் சாத்தியமான பின்னணியாக, இரண்டு சம்பவங்கள் அடையாளம் காட்டப்படுகின்றன:
➡️ஒரு மாதத்துக்கு முன் நடைபெற்ற பஞ்சாபியர்களின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட வாக்குவாதம்
➡️கொலையுக்கு முந்தைய தினம் டெர்பியில் நடைபெற்ற கபடி போட்டியில் உருவான வன்முறைசெயல்
➡️இரண்டாவது சம்பவம், முக்கியமான தூண்டுதல் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
விசாரணை மற்றும் தண்டனை
இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில், 24 வயதான மெஹக்தீப் சிங் மற்றும் 26 வயதான செஹஜ்பால் சிங் ஆகிய இருவரும் மூன்று வார விசாரணைக்குப் பிறகு குற்றவாளிகளாக நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டனர்.
குடும்பத்தின் வேதனை
ஔர்மன் சிங் இத்தாலியில் பிறந்து, தனது 46 வயதான தாயார் மற்றும் சகோதரியுடன் பிரித்தானியாவின் ஸ்மெத்விக் பகுதியில் வாழ்ந்து வந்தார். கொலையினால் அதிர்ச்சியடைந்த இவர்களின் குடும்பம் தற்போது அந்த பகுதியிலிருந்து வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளது.
இந்த கொலைச் சம்பவம், பிரித்தானியாவில் உள்ள இளைய தலைமுறைகளில் உருவாகும் குழுசார்ந்த வன்முறை மற்றும் சமூகத்தைப் பாதிக்கும் பழிவாங்கும் கலாச்சாரம் குறித்து கேள்விகள் எழுப்புகிறது. விசாரணை தொடர்கின்றது.