Read More

🚨பாரிசில் எச்சரிக்கை! ரயிலில் கத்திக்குத்து தாக்குதல்!

Paris Alert // Attaque au couteau // Train britannique // Terrorisme // Sécurité Paris // Breaking News France – பாரிஸ் மற்றும் லண்டன் இடையிலான பாதுகாப்பு வலையமைப்பில் அதிர்ச்சி எழுந்துள்ளது.
பிரித்தானியாவில் (Royaume-Uni) லண்டனை நோக்கிச் சென்ற தொடருந்தில் நடந்த திடீர் கத்திக்குத்துத் தாக்குதல் (Attaque au couteau dans un train britannique) 9 பேரை உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆக்கியுள்ளது.

இந்த சம்பவம் நவம்பர் 1 இரவு 19:40 மணியளவில் (பாரிஸ் நேரம் 20:40) கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அருகே இடம்பெற்றது. திடீரென தொடருந்துக்குள் பயங்கர அலாரம் ஒலித்தது.

- Advertisement -

British Transport Police (BTP) தெரிவித்ததாவது — “10 பேர் காயமடைந்துள்ளனர், அதில் 9 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது” என தெரிவித்தனர்.


🔪 தொடருந்தில் ரத்தக் களரி – பயணிகள் அதிர்ச்சி

பயணிகள் “ஒருவன் பெரிய கத்தியுடன் ஓடிக்கொண்டிருந்தான்” என கூறினர்.
பலர் கழிவறைகளுக்குள் புகுந்து கதவுகளை பூட்டிக்கொண்டனர்.
“ஒருவர் கையில் ரத்தம் சொட்டச்சொட்ட ‘அவர்களிடம் கத்தி இருக்கிறது!’ என்று அலறினார்… எங்கும் ரத்தம் மட்டுமே!” என ஸ்கை நியூஸ் (Sky News) தெரிவித்தது.

ஹண்டிங்டன் (Huntingdon) நிலையத்தில் தொடருந்து நிறுத்தப்பட்டதும், ஆயுதமேந்திய காவலர்கள் (Armed Police UK) தொடருந்தைச் சுற்றி வளைத்தனர்.
ஒரு தாக்குதலாளர் “டேசர்” (Taser Gun) மூலம் மின்சார துப்பாக்கியால் வீழ்த்தப்பட்டார்.

- Advertisement -

🚓 இருவர் கைது – தீவிரவாத விசாரணை தொடங்கியது

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் (Deux suspects arrêtés) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது ஒரு தனிப்பட்ட சண்டையா அல்லது தீவிரவாத சதியா (Terrorisme – Enquête Antiterroriste Royaume-Uni) என்பதற்கான விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது.

UK Anti-terror Unit மற்றும் Scotland Yard இணைந்து விசாரணை மேற்கொண்டுள்ளன.

பிரிட்டிஷ் பிரதமர் கெயர் ஸ்டார்மர் (Keir Starmer), தனது “X” தளத்தில்,

“இது மிகுந்த கவலையளிக்கும் சம்பவம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

🚉 பாதிப்பு – ரத்து செய்யப்பட்ட தொடருந்துகள், பாரிஸிலும் பாதுகாப்பு அதிகரிப்பு

இந்தத் தாக்குதலின் பின்னர், London North Eastern Railway (LNER) வழித்தடத்தில் பல தொடருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாரிஸ் Gare du Nord மற்றும் Eurostar Paris-London வழித்தடத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Sécurité renforcée à Paris Gare du Nord, என பிரான்ஸ் போக்குவரத்து அமைச்சகம் (Ministère des Transports France) அறிவித்துள்ளது.


🧩 பயங்கரவாத சதி சந்தேகம் – Paris Intelligence Alerte

பிரித்தானிய தீவிரவாத தடுப்பு பிரிவினர் (Anti-Terrorist Services UK) கூறுகையில், இது திட்டமிட்ட தாக்குதல் (Attaque préméditée) எனும் கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
இதே நேரத்தில், பாரிஸ் காவல்துறை (Police de Paris) “எச்சரிக்கையாக இருங்கள்” என பொதுமக்களுக்குத் தெரிவித்துள்ளது.


📅 CityTamils.com – Breaking Alert Paris
🔴 தொடருந்து தாக்குதல் விசாரணை தொடர்கிறது… பாரிஸ் மற்றும் லண்டனில் பாதுகாப்பு கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here