Read More

spot_img

நாகை-யாழ்ப்பாணம் கப்பல் சேவை: நடுக்கடலில் சிக்கல்!

தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட பயணிகள் கப்பல், கடல் சீற்றம் காரணமாக பாதியில் திரும்பியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 18 முதல் வானிலை மாற்றம் மற்றும் சர்வதேச அனுமதி சிக்கல்களின் காரணமாக இச்சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி மீண்டும் பயணிகள் சேவை தொடங்கப்பட்டது.

கடல் சீற்றத்தால் பயணிகள் அச்சம்
மார்ச் 1ஆம் தேதி சேவை மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், மார்ச் 2ஆம் தேதி நாகை துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கி 78 பயணிகளுடன் புறப்பட்ட கப்பல், வேளாங்கண்ணிக்கு தென்கிழக்கே 15 நாட்டிக்கல் தொலைவில் சென்றபோது கடல்சீற்றம் அதிகரித்தது.

- Advertisement -

திடீரென கடல் அலைகள் மோசமாக தாண்டியதால், கப்பல் ததளிக்கத் தொடங்கியது. பயணிகள் அச்சத்தில் அலறியதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக கேப்டன் பாஸ்கர் கப்பலை திருப்பி, மீண்டும் நாகை துறைமுகத்துக்கு கொண்டு வந்தார்.

இதனால் 78 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் அனைவரும் உயிர் தப்பினர். இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மார்ச் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

இத்தகைய தடங்கல்களை தவிர்க்க நம்பகமான வானிலை கணிப்பு மூலம் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, கடல் சீற்றம் குறைவாக இருக்கும் நாட்களில் மட்டுமே கப்பல் இயக்கப்பட வேண்டும். மேலும், புதிய தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, நடுக்கடலில் எதிர்பாராத மாற்றங்களை கணிக்கக்கூடிய சுற்றுச்சூழல் மேலாண்மை முறைகள் செயல்படுத்தப்பட வேண்டும். பயணிகளுக்கு அவசர கால பாதுகாப்பு பயிற்சிகளை வழங்கி, கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் காலங்களில் பயணிகளுக்குப் பதிலாக சரக்கு போக்குவரத்துக்கு முன்னுரிமை வழங்கலாம். அதற்காக, இலங்கை மற்றும் இந்தியா இணைந்து பயணிகள் சேவையைச் செயல்படுத்த ஒரு ஒழுங்கமைந்த திட்டம் உருவாக்க வேண்டும்.

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img