Tuesday, March 10, 2026
No menu items!

யாழில் இன்று அதிகாலை பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு – ஹயஸ் வாகனத்தில் பயணித்தவர்கள் மீது சுட்ட பொலிஸ்

யாழ்ப்பாணம், பிப்ரவரி 10 – யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வீதியில் அல்லைப்பிட்டி சந்தியில் அதிகாலை வேளையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 17 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் தகவலின்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை ஊர்காவற்துறை பகுதியில் உள்ள அல்லைப்பிட்டி சந்தியில் கடமையில் இருந்த பொலிஸார், சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த ஹயஸ் ரக வாகனம் ஒன்றை நிறுத்துமாறு சமிக்ஞை செய்தனர்.

ஆனால், வாகன சாரதி பொலிஸாரின் கட்டளையை மீறி வேகமாகத் தப்பிச் செல்ல முயன்றதால், பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

வாகனம் நிறுத்தப்பட்டபோது, உள்ளே இருந்த அல்பினோ அருள் பயாஸ் துப்பாக்கிக் குண்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டார். பொலிஸாரே அவரை உடனடியாக மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அதே வாகனத்தில் பயணித்த மேலும் இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், மற்றொருவர் நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை வேளையில் ஊர்காவற்துறை நோக்கி அவர்கள் ஏன் பயணித்தனர்? வாகனத்தில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் ஏதேனும் இருந்தனவா? அவர்களுக்கு முன்னர் குற்றப் பின்னணி உள்ளதா? என்பன உள்ளிட்ட விவரங்களை ஆராய்ந்து வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் மாவட்டத்தினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்கள் கிடைக்கப் பெற்றவுடன் புதுப்பிக்கப்படும்.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

ATA உதவிதொகை பெறும் பாரிஸ் தமிழர்கள்!

தமிழ் செய்தி: தற்காலிக காத்திருப்பு உதவித்தொகை (ATA) இன்னும் சிலருக்கு வழங்கப்படுகிறது 2017-இல் ரத்து செய்யப்பட்ட போதிலும், தற்காலிக காத்திருப்பு உதவித்தொகை (ATA) மிகக் குறிப்பிட்டநிபந்தனைகளின் கீழ், சில குறிப்பிட்ட நபர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படுகிறது. இருப்பினும், இதன்முழுமையான மறைவு வெகு தொலைவில் இல்லை. பொதுமக்களுக்கு அணுகல் இல்லை, ஆனால் இன்னும் மறையவில்லை செப்டம்பர் 1, 2017 முதல் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்ட தற்காலிக காத்திருப்பு உதவித்தொகை(ATA), மிகக் குறைவான பயனாளிகளுக்கு மட்டும், குறிப்பிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்தால்வழங்கப்படுகிறது. ஏப்ரல் 16, 2025 அன்று TF1-இன் இரவு 8 மணி செய்தியில் ஒளிபரப்பான அறிக்கை, இந்தஉதவித்தொகை பழைய இழப்பீட்டு முறையின் குறைபாடுகளை சரிசெய்ய உருவாக்கப்பட்டது என்றும், சிலமிகக் குறிப்பிட்ட சூழல்களில் இன்னும் நடைமுறையில் உள்ளது என்றும் தெரிவிக்கிறது. சமூக சேவைகளால் இப்போது வழங்கப்படும் உதவித் திட்டங்களில் ATA இல்லை. இது, RSA அல்லதுவேலையின்மை பயன்களைப் பெற முடியாத, விலக்கப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு வலையாகவடிவமைக்கப்பட்டது. இதன் ரத்துக்குப் பிறகு, புதிய விண்ணப்பதாரர்களுக்கு இது மூடப்பட்டுவிட்டது, ஆனால்விதிவிலக்காக இன்னும் உள்ளது. கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள்  இன்று, சில குறிப்பிட்ட வகை மக்களுக்கு மட்டுமே ATA கிடைக்கிறது. இவை பெரும்பாலும் சட்டத்தால்அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட சந்தர்ப்பங்கள், பெரும்பாலும் தீவிர வறுமை அல்லது சிக்கலான புலம்பெயர்வுபயணங்களுடன் தொடர்புடையவை. இந்த பயனாளிகள் பின்வருவனர்கள்: - வேலை தேடுபவர்களாக பதிவு செய்யப்பட்ட அரசியல் அடையாளமற்றவர்கள்,   - தங்கள் நாட்டில் அச்சுறுத்தல்கள் உள்ளதால் துணை பாதுகாப்பு பெற்ற வெளிநாட்டவர்கள்,   - வெளிநாட்டு பிரதேசங்களிலிருந்து அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்து திரும்பிய முன்னாள்வெளிநாட்டு வாழ் மக்கள்,   - குறைந்தது இரண்டு மாத தண்டனை அனுபவித்து, France Travail-இல் பதிவு செய்த முன்னாள் கைதிகள்.   இந்த உதவித்தொகை ஒவ்வொரு வரையறுக்கப்பட்ட சந்தர்ப்பத்திற்கும் ஒரு முறை மட்டுமே பெறப்பட முடியும். "இந்த திட்டம் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட சூழல்களுக்கு மட்டுமே கிடைக்கும்," என ஒரு நிறுவன ஆதாரம்தெரிவிக்கிறது. மிதமான தொகை, சமீபத்தில் மறுமதிப்பீடு இதன் வரம்பு குறைவாக இருந்தாலும், ATA இறுதி பயனாளிகளுக்கு முக்கியமான நிதி உதவியாக உள்ளது. இதன் கட்டணம், RSA வரம்பை தாண்டாத வள நிலை மற்றும் குடும்ப அமைப்பைப் பொறுத்து மாறுபடும். ஏப்ரல் 1, 2025 முதல், இதன் தினசரி தொகை 13.39 யூரோவிலிருந்து 13.62 யூரோவாக மறுமதிப்பீடுசெய்யப்பட்டுள்ளது, இது மார்ச் 31, 2025-இன் உத்தரவு எண் 2025-302-இன் படி. இந்த ஆண்டு உயர்வு, தொழிலாளர் குறியீட்டின் பிரிவு L161-25-இன் படி, நுகர்வோர் விலை குறியீட்டின் மாற்றத்தை பிரதிபலிக்கிறது. இது மிதமானதாக இருந்தாலும், இந்த உயர்வு பயனாளிகளுக்கு குறைந்தபட்ச வாங்கும் சக்தியைபராமரிக்கிறது. திட்டமிடப்பட்ட மறைவு ATA-வை நீடிக்க வேண்டிய அவசியமில்லை. இது, அதன் ரத்துக்கு முன் பதிவு செய்யப்பட்ட கடைசிபயனாளிகளின் உரிமைகளை மதிக்க மட்டுமே தொடர்கிறது. புதிய கோப்புகள் திறக்கப்பட முடியாது, இதனால்இந்த உதவி படிப்படியாக மறைந்துவிடும்.
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img