கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்தார். அந்நேரம் வெளியிடப்பட்ட வீடியோ செய்தி ஒன்றில் ஜனாதிபதியின் பெயர் பிழையாக எழுதியிருந்தேன். பிழை என்றால் ஸா என்பதற்கு பதிலாக ஸ என்று போட்டிருந்தேன்.
அன்று ஜனாதிபதி மட்டக்களப்பில் ஆற்றிய உரை அனல்பறக்கும் உரையாக இருந்தது. பல தரப்பினரை நேரடியாகவே கைகாட்டி பேசியிருந்தார்.
அப்படியிருக்கையில் ஒருவர் எனக்கு தொலைபேசி அழைப்பெடுத்து “அவர் NPP கட்சி உறுப்பினராம் நான் ஜனாதிபதியின் பெயரை பிழையாக எழுதி இருக்கிறேனாம்” என்று வாக்குவாதப்பட்டார்.
நான் கேட்டேன் “ஏப்ரல் மாதம் Gazette ஒன்றும் தமிழில் வெளிவரவில்லை அது உங்களுக்கு தெரியுமா?” என்று.
அதற்கு அவர் “அப்படியா” என்று கேட்கிறார்
ஒரு எழுத்தை பிழையாக எழுதியதற்கே இவரை போன்றோருக்கு இவ்வளவு கோபம் வருகிறது என்றால், அனைத்து அரச திணைக்களங்களிலும் அலுவலகங்களிலும் தமிழை கொன்று புதைக்கிறார்களே அதற்கு ஏன் கோபம் வரவில்லை?
தமிழில் வர்த்தமானி அறிவித்தல் (Gazette) வெளிவருவது ஏன் முக்கியம்?
வேலைவாய்ப்புகள், டென்டர்கள் எல்லாம் Gazette இல் அச்சிடப்படுகின்றது, சிங்களத்தில் மட்டும் குறிப்பிட்ட திகதியில் Gazette வெளிவருகின்றது, அதை சிங்கள மக்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள்.
ஆனால் தமிழில் தாமதமாக வெளிவரும் போது, அதில் இருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் டென்டர்களுக்கான Closing Date முடிந்து விடுகிறது. இது தமிழ் மட்டுமே வாசிக்க தெரிந்தவர்களுக்கு இழைக்கப்படும் அநியாயம் இல்லையா?
இதெல்லாம் தமிழ் மக்களின் அடிப்படை தேவை மற்றும் உரிமை தானே?
இதையெல்லாம் கேட்க துப்பில்லை, ஆனால் நாடாளுமன்றத்தில் பக்கம் பக்கமாக பேசுவார்கள், எந்தவொரு தமிழ் பிரதிநிதியும் நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினையை பேசி நான் காணவில்லை.
இந்த லட்சணத்தில் எழுத்துப்பிழை கண்டுபிடிக்க இப்படி அறிவாளிகள் வருவார்கள்
நன்றி சபீனா