கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த பெண்ணொருவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
கனடாவில் வசித்து வரும் இராஜரட்ணம் சுமதி (வயது 59) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்து கொடிகாமம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் , துவிச்சக்கர வண்டியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானார்.
விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
கருத்து- கனடா வீதி பயணங்கள் எதிர்பக்கமாக இருப்பவை. தவிர வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு யாழ் வீதிகள் மிகவும் சோதனைகுரிய ஒன்றாகவே இருக்கும் காரணம்,ஊரில் இருப்பவர்களே தினமும் மயிரிழையில் வாகனம் செலுத்தியே வாழ்க்கையை ஓட்டி கொண்டுள்ளனர். கனடாவில் இருந்து வருபவர்கள் அதுவும் பிரதான வீதிகளில் சைக்கிள் ஓட்டி போவது என்பது தேவையில்லாத ஒன்று! உயிரை பணயம் வைக்கும் அளவுக்கு காசு மிச்சம் பிடிக்கிற வேலைக்கு போவது நல்லதல்ல.
நிலைமை , சூழ்நிலைகள் எப்படி இருக்கின்றதோ அதற்கு தகுந்த முறையில் நாம் நம்மை மாற்றி கொள்ள வேண்டும். அப்போதுதான் தப்பி வாழ முடியும் தினமும் வீதி விபத்துக்களும் பேராசை கொண்ட டிப்பர்களும் நிறைந்த வீதி ஒன்றில் கனடாவில் இருந்து வந்து 59 வயதில் சைக்கிளில் போக வேண்டும் என நினைத்தது ஆபத்து.. ஒன்று நடந்து செல்லுங்கள்.. இல்லையேல் ஆட்டோ,கார் என பிடித்து செல்லுங்கள்.