Read More

பிரான்ஸ்: நூதன முறையில் திருட்டு! மக்கள் அவதானம்!!

Hauts-de-Seine மாவட்டத்தில் உள்ள Antony நகரில், கொள்ளையர்கள் நகராட்சி ஊழியர்களாக நடித்து வீடுகளில் நுழைந்து மோசடி செய்யும் புதிய முறையைப் பயன்படுத்தி வருகிறார்கள் இந்த மோசடி முறையில், தங்களை நகராட்சி

பணியாளர்கள் எனக் கூறி, தொண்டு நிறுவனங்களுக்காக ஆடைகள் சேகரிப்பதாகக் கூறி வீடு தோறும் செல்கின்றனர். இந்த மோசடியில், கொள்ளையர்கள் வீடுகளைச் சோதனை செய்தல், வீட்டில் உள்ளவர்களை வேவு பார்த்தல், அல்லது யாரும் இல்லாத

- Advertisement -

நேரத்தில் திருடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சில சந்தர்ப்பங்களில், மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக, உண்மையாகவே வழங்கப்படும் ஆடைகளை எடுத்துச் சென்று, பின்னர் அவற்றை விற்பனை செய்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Antony நகராட்சி தனது இணையதளத்தில்

பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது:
உங்கள் குடியிருப்புகளில் ஆடைகள் சேகரிக்கப் பொய்யாக வரும் முயற்சிகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகிறோம். நகராட்சி யாரையும் உங்கள் வீடுகளுக்குச் சென்று ஆடைகளை சேகரிக்க அனுமதிப்பதில்லை.

மேலும் மோசடிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பின்வரும் ஆலோசனைகளை வழங்குகிறது:
அறியாத நபர்களுக்கு கதவைத் திறவாதீர்கள்.
அதிகாரப்பூர்வ சான்றிதழ்கள் இருந்தாலும் எச்சரிக்கையாக இருங்கள்.

- Advertisement -

உள்ளூர் ஊராட்சி அல்லது காவற்துறையினரிடம் (Police Municipale) உறுதிப்படுத்தவும்.
உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் இந்தத் தகவலைப் பகிரவும்.

விடுமுறை காலங்களில் வீடுகள் வெறிச்சோடியிருக்கும் போது இது போன்ற மோசடிகள் அதிகரிக்கலாம், எனவே உங்கள் வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும். இந்த மோசடி முறைகள் குறித்து மேலும் அறிய, Antony நகராட்சியின் இணையதளத்தைப்

பார்வையிடவும் அல்லது உள்ளூர் காவற்துறையைத் தொடர்பு கொள்ளவும்.
(Antony, Hauts-de-Seine, Municipalité d’Antony, Police Municipale, Fraude, Vol, Collecte de vêtements)

- Advertisement -

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Chargement des actualités de Capital.fr...