City News

பிரான்ஸில் மாணவி காதலை மறுத்த மாணவர் கடத்தி தாக்குதல்!

மே 5, 2024 அன்று மாலை 3:30 மணியளவில், பிரான்ஸ் ரைம்ஸில் உள்ள தனது வீட்டிற்கு முன்னால் 16 வயதுசிறுவன் அடையாளம் காணப்பட்ட நபரால் கடத்தப்பட்டார். இவரை ஐந்து பேரால்  Clio வாகனத்தில் கடத்திச்செல்லப்பட்டார்.  முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவம் "காதல் தோல்வி" தொடர்பான பழிவாங்கும் நடவடிக்கையாகஇருக்கலாம் என்று கருதப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் ஏற்கனவே உறவில் இருந்த நிலையில், ஒரு இளம்பெண்ணின் காதலை  நிராகரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர், குறிப்பாக சகோதரர், மற்றும் தாய் ஆகியோர் இந்த தாக்குதலை திட்டமிட்டிருக்கலாம் எனசந்தேகிக்கப்படுகிறது.  தாக்குதலின் போது, சிறுவன் காரில் தாக்கப்பட்டு, பின்னர் அலெயின் பொல்லியார்ட் தெருவில் உள்ள ஒருஅடுக்குமாடி கட்டிடத்தின் பாதாள அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மேலும் தாக்குதல்கள்நடத்தப்பட்டன. பின்னர், ரு அராகோ தெருவில் விடுவிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.  சிறுவனுக்கு உடல் முழுவதும் பல காயங்கள், மூக்கில் பல உடைப்புகள், வலது முதுகில் 5 வெட்டு மற்றும் அறிவுமற்றும் நினைவு இழப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளன. தற்போது சந்தேக நபர்கள் தீவிரமாக தேடப்பட்டுவருகின்றனர். பாதிக்கப்பட்டவரிடம் இன்று மதியம் விசாரணை நடத்தப்படவுள்ளது. 

பிரான்ஸில் அடிக்கடி இசைநிகழ்ச்சி! விடப்பட்ட சந்தேகம்!

பிரான்ஸ் தமிழர்களிடமிருந்து புலிகளுக்காக சேர்க்கப்பட்ட பெருந்தொகை படத்தை வெள்ளையாக்கும்நோக்கிலேயே அண்மையில் அதிகமாக இசை நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு வருவதாக விமர்சனம் ஒன்றுவைக்கப்பட்டுள்ளது. இறுதி போரில் மக்களிடமிருந்து அதிகமான பணம் சேர்க்கப்பட்டு காணாமல் போனதாகவும்,அவை குறிப்பிட்டகாலம் வெளியில் எடுக்கப்படாமல் வைத்திருந்துவிட்டு தற்போது அவற்றை எடுத்து வெள்ளையாக்கி வருவதாகசொல்லப்படுகின்றது.. பிரான்ஸ் மக்களின் வெள்ளை பணத்தை , பதுக்கி கறுப்பாக்கிவிட்டு தற்போது மீண்டும் அவர்களை வைத்துவெள்ளையாக்கி வருவதாக சில அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். எமது கருத்து: இது தொடர்பாக ஆதாரங்கள் இல்லாமல் யாரும் எதையும் பேச சொல்ல முடியும்.எந்தஆம்பிளையை மடக்கிறது என்றாலும் கடைசில சமூகத்தில் இருக்கிற "பெண் பலவீனம்" என்ற பதத்தை போல , இப்ப எது என்றாலும் இயக்க காசு என்ற ஓரு பல்லவி விடாமல் பாட ஒவ்வொரு நாட்டில் ஆட்கள்இருக்கிறார்கள். ஆனாலும் காலம் சரியானதை நிருபிக்கும்வரை நாம் காத்திருக்கதான் வேண்டும்..