செய்திகள்

பிரான்ஸ்: பாரிஸ் தமிழர்களுக்கான கடன் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள்

பிரான்ஸ், குறிப்பாக பாரிஸ், பல தமிழ் மக்களுக்கு வேலை, கல்வி அல்லது தொழில்வாய்ப்பு என்பவற்றின் அடிப்படையில் ஒரு முக்கியமான பிராந்தியமாக இருக்கிறது. பிரான்ஸ் நிதி மற்றும் வங்கி முறைகளைப் புரிந்துகொள்வது, அன்றாட வாழ்கைக்குத்...
செய்திகள்

பிரான்ஸ்: பாரிஸ் தமிழர்களுக்கான கடன் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள்

பிரான்ஸ், குறிப்பாக பாரிஸ், பல தமிழ் மக்களுக்கு வேலை, கல்வி அல்லது தொழில்வாய்ப்பு என்பவற்றின் அடிப்படையில் ஒரு முக்கியமான பிராந்தியமாக இருக்கிறது. பிரான்ஸ் நிதி மற்றும் வங்கி முறைகளைப் புரிந்துகொள்வது, அன்றாட வாழ்கைக்குத்...

பிரான்ஸ்: திருநங்கைகளின் அவல நிலை-அரசின் பாதுகாப்பு நடவடிக்கை!

பிரான்ஸில் வீடுகளில் துன்புறுத்தப்படும் திருநங்கை இளைஞர்களை பாதுகாக்க தங்குமிடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் தேவைக்கேற்ப கல்வியை தொடரவோ அல்லது வேலைக்கு செல்லவோ முடியும். பரிசின் Maison des Iris பகுதியில் இந்த தங்குமிடம்...

பிரான்ஸ்-பிரிட்டன் பயணம்: புதிய சட்டங்கள் இன்று முதல் நடைமுறையில்!

இன்று, ஏப்ரல் 1, 2025, முதல் பிரான்சிலிருந்து பிரிட்டன் செல்ல புதிய விசா விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. "Electronic Travel Authorization (ETA)" எனப்படும் இலத்திரனியல் விசா இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய இலத்திரனியல் விசா...

பிரான்ஸ்: உணவகங்களில் புதிய நடைமுறை! ஏப்ரல் முதல் ஆரம்பம்!

ஒவ்வொரு கோடையிலும் செயற்பட தொடங்கும் பிரான்ஸ் உணவகங்களின் மொட்டைமாடி (terrasses) அமைப்புகள் இன்றுமுதல் செயற்பட ஆரம்பிக்கு… இதுபோல் ஏப்ரலில் இருந்து நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ள பல சட்டதிட்டங்கள் மற்றும் நடைமுறைகள்.👇 இன்று ஏப்ரல் 1, செவ்வாய்க்கிழமை...
செய்திகள்
Kuruvi

பிரான்சில் வேலைவாய்ப்பு இழப்பீடு தொடர்பில் காசு வசூல்! அரசு எச்சரிக்கை

ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களுக்கு சிக்கல்: தவறான தகவல் தொடர்பால் அதிகப்படியான தொகை வசூல் பிரான்ஸ் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் (France Travail) ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களுக்கு சிக்கல்ஏற்பட்டுள்ளது. ஓய்வூதியம் மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் (caisses de retraite et l'opérateur chargé de l'indemnisation)  தவறான தகவல் தொடர்பால், நூற்றுக்கணக்கான மூத்த குடிமக்களிடம் அதிகப்படியானதொகை வசூலிக்கப்படுகிறது.  இந்த சிக்கலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர், வேலைவாய்ப்பு இழப்பீடுகளில் ஏற்படும் பிரச்சனைகளைஆராய்ந்து அறிக்கை தயாரிக்கும் பொறுப்பான  மத்தியஸ்தர் ஜீன்-லூயிஸ் வால்டர் (Jean-Louis Walter) ஆவார். 2024 ஆம் ஆண்டுக்கான அவரது அறிக்கையில், 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, பிரான்ஸ் முழுவதும் உள்ள பிராந்திய மத்தியஸ்தர்களுக்கு "பல ஆயிரக்கணக்கான யூரோக்கள்" வரைவசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  இந்த அதிகப்படியான தொகை வசூலிப்புக்கு காரணம் என்ன? 62 வயதிலிருந்து 67 வயது வரை முழு ஓய்வூதியம்பெறத் தகுதியில்லாத மூத்த குடிமக்களுக்கு, ஓய்வூதியம் கிடைக்கும் வரை வேலைவாய்ப்பு இழப்பீடுவழங்கப்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வேலைவாய்ப்பு ஆலோசகர்கள், வேலைநாள் பதிவேட்டில்(relevé de carrière) உள்ள தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, தவறான தேதியை பதிவுசெய்கின்றனர்.  ஓய்வூதிய நிறுவனங்கள் மறுபரிசீலனை செய்து, 65 அல்லது 66 வயதில் முழு ஓய்வூதியம் பெறத்தகுதியுள்ளவர்கள் என உறுதி செய்தால், வேலைவாய்ப்பு நிறுவனம் ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்த வேண்டும்.  ஆனால், ஓய்வூதிய நிறுவனங்கள் தகவல்களை தாமதமாக அனுப்புகின்றன. இதனால், வேலைவாய்ப்பு நிறுவனம்ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்த தவறி, அதிகப்படியான தொகை வசூலிக்கப்படுகிறது.  மேலும், ஓய்வூதிய நிறுவனங்கள் பின்னோக்கி ஓய்வூதியம் வழங்கும் வழக்கம் இல்லை. அதாவது, அதிகப்படியாகவசூலிக்கப்பட்ட தொகையை திரும்பப் பெற முடியாது.  இந்த சிக்கலைத் தவிர்க்க, ஓய்வூதிய நிறுவனங்களால் வழங்கப்படும் "சோமேஜ் இண்டெம்னிஸே: ரெகுலரைசேஷன் டி கரியர்" (Chômage indemnisé : régularisation de carrière) என்ற சான்றிதழை பெறுவதுஅவசியம்.  இந்த சிக்கலால் பாதிக்கப்பட்டவர்களை France Travail தொடர்பு கொள்ளும். பாதிக்கப்பட்டவர்கள்,  மத்தியஸ்தரை அணுகி கடன் தள்ளுபடி கோரலாம்.
Kuruvi

பிரான்ஸில் மாணவி காதலை மறுத்த மாணவர் கடத்தி தாக்குதல்!

மே 5, 2024 அன்று மாலை 3:30 மணியளவில், பிரான்ஸ் ரைம்ஸில் உள்ள தனது வீட்டிற்கு முன்னால் 16 வயதுசிறுவன் அடையாளம் காணப்பட்ட நபரால் கடத்தப்பட்டார். இவரை ஐந்து பேரால்  Clio வாகனத்தில் கடத்திச்செல்லப்பட்டார்.  முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவம் "காதல் தோல்வி" தொடர்பான பழிவாங்கும் நடவடிக்கையாகஇருக்கலாம் என்று கருதப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் ஏற்கனவே உறவில் இருந்த நிலையில், ஒரு இளம்பெண்ணின் காதலை  நிராகரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர், குறிப்பாக சகோதரர், மற்றும் தாய் ஆகியோர் இந்த தாக்குதலை திட்டமிட்டிருக்கலாம் எனசந்தேகிக்கப்படுகிறது.  தாக்குதலின் போது, சிறுவன் காரில் தாக்கப்பட்டு, பின்னர் அலெயின் பொல்லியார்ட் தெருவில் உள்ள ஒருஅடுக்குமாடி கட்டிடத்தின் பாதாள அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மேலும் தாக்குதல்கள்நடத்தப்பட்டன. பின்னர், ரு அராகோ தெருவில் விடுவிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.  சிறுவனுக்கு உடல் முழுவதும் பல காயங்கள், மூக்கில் பல உடைப்புகள், வலது முதுகில் 5 வெட்டு மற்றும் அறிவுமற்றும் நினைவு இழப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளன. தற்போது சந்தேக நபர்கள் தீவிரமாக தேடப்பட்டுவருகின்றனர். பாதிக்கப்பட்டவரிடம் இன்று மதியம் விசாரணை நடத்தப்படவுள்ளது. 
Kuruvi

பாரிஸ் சுப்பர்மார்கெட்டுகள் தொடர்பில் அரசு எச்சரிக்கை!

பிரான்ஸ் சுப்பர் மார்க்கெட்டுகளில் இனி இந்த கள்ள வேலை செய்தால் 15000€ வரை அபராதம் என அரசுபுதிய வர்த்தமானியில் திருத்தியுள்ளது. பொருட்களில் விலைகள் அருகே நிறைகளை சரியாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சுப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்கள் விலை அதிகரிக்கும் போது நிறைகளை குறைத்து அதேவிலையில் விற்று வரும் ஒரு முறை பரவலாக பாரிஸ் வர்த்தகர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை நீங்கள்அறிந்ததே... இனி வரும் காலங்களில் இந்த மாதிரி எதாவது புத்திசாலிதனமாக செய்ய வெளிகிட்டால் அபராதம்கட்டவேண்டி வரும்...
Kuruvi

பாரிஸில் திடீரென மூடப்படும் மெட்ரோ தரிப்பிடங்கள்!

சீன ஜனாதிபதி திரு. ஷி ஜிンピங் அவர்கள் ஞாயிறு முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை பாரிஸுக்கு அதாவது அதிகாரப்பூர்வ, அதாவது விஜயம்) மேற்கொண்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த வருகையின் போது மேற்கு பாரிஸில் உள்ள பல மெட்ரோ...
Kuruvi

பாரிஸில் பயங்கர துப்பாக்கி சூடு! மூவர் பலி!

தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கின்ற பாரிஸின் புறநகரப் பகுதியாகிய செவ்ரோனில் (Sevran-Seine-Saint-Denis) கடந்த 48 மணிநேர இடைவெளியில் அடுத்தடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மூவர் உயிரிழந்துள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர். போதைப் பொருள் கடத்தலுடன்...
Kuruvi

லாச்சப்பலில் தவிக்கும் ஈழதமிழர்கள்! தொடரும் சம்பவங்கள்!

லாச்சப்பல் பக்கம் போக பயப்பிடும் ஈழதமிழர்கள்... ஒருகாலத்தில் ஈழதமிழர்களின் கோட்டையாக இருந்த லாச்சப்பல் பிரதேசத்தில் இன்று ஈழத்தமிழர்கள் கால்எடுத்து வைக்கவே பயப்பிடுகிறளவுக்கு பல பிரச்சினைகள் தோன்றியிருப்பதாக மக்கள் கருத்துதெரிவித்துள்ளனர்.. குறிப்பாக நகை திருட்டு தொடர்பில் மிகுந்த கவலையும் வெறுப்பும் அடைந்துள்ளனர்..ஒன்றன் பின் ஒன்றாகபல தமிழர்களின் சங்கிலி அறுக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக பல தமிழர்கள் தமது கவலையை தெரிவித்து மக்களை சிலர் எச்சரித்து இருக்கின்றனர்ஆனாலும் இவற்றை கட்டுபடுத்த முடியவில்லை..முன்பொரு காலத்தில் எமது தமிழ் இளைஞர்களால் தமிழர்கள்பாரிஸில் காப்பாற்றப்பட்டு வந்தனர். இப்போது டிக்டொக்கில் வாய் சவடால் விடும் எவரும் பிரயோசனமாக எதையும் செய்யும் தைரியம்இல்லாதவர்களாக இருக்கிறார்கள்...காலமும் வரலாறு மீண்டும் பாரிஸ் தமிழர்களை அகதிகளாக யோசிக்கவைக்கிற சூழ்நிலைக்கும் கொண்டு வந்து விட்டுருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது...