City News

இலங்கையில் அமெரிக்க டொலரின் மதிப்பு உயருமா? ஒரு பொருளாதார ஆய்வு!

இலங்கையில் பொருளாதார நிலைமைகள் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. 2022 ஆம் ஆண்டு நாணய நெருக்கடி, வெளிநாட்டு கடன் திருப்பிச் செலுத்த முடியாமை, பணவீக்கம் உயர்வு போன்றவை நாட்டின்...

பாரிஸ் லியோ திரையரங்கில் மோதல்! தமிழ் குழுக்கள் கைவரிசை

பிரான்ஸில் நேற்று வெளியான விஜய் நடித்த லியோ பட காட்சிகளின் போது இரு தமிழ் குழுக்களிடையேநடந்த வன்முறை காரணமாக தியேட்டர் கலவரப்பட்டுள்ளது. பின்னர் பொலிசார் தலையிட்டு பிரச்சினைக்குரியவர்களை அப்புறப்படுத்தியுள்ளதாக தகவல்கள்தெரிவிக்கின்றன. இது ஒரு விஜய் - அஜித் ரசிகர்கள் மோதலாக இருக்கலாம் என்றும் அல்லது இரு தமிழ்இளைஞர் குழுக்களிடையே ஆன மோதலாக இருக்கலாம் என கருத்தப்படுகின்றது. குறித்த தமிழ் இளைஞர்கள் கத்தி வைத்திருந்தாகவும் சொல்லப்படுகின்றது.கத்தி குத்து சம்பவம்நடைபெற்றதாக வதந்திகள் பாரிசில் பரவிய போதிலும் முழுமையான எம்மால் தற்போதுவரை அதனைஉறுதிப்படுத்த முடியவில்லை. உக்கிரமான வன்முறை காட்சிகளை கொண்ட லியோ படத்தை பார்க்க வந்துவிட்டு அமைதியாக திரும்பிபோனால் அது லோகேஷ் கனகராஜ்ஜின் யூனிவேர்ஸை LCU வை அவமதிப்பு போலாகிவிடும் என்பதால் குறித்தசம்பவத்தை பாரிஸ் தமிழர்கள் திட்டமிட்டு லியோவுக்கான Tribute ஆக செய்திருக்கலாம் என சினிமாவிமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.