City News

இலங்கை குற்றவாளிகள் பெருகும் இடமாக பிரான்ஸ்! அரசு வேதனை

வெளிநாடுகளில் இருந்து குற்றசெயல்களை செய்யும் இலங்கையர்களை கண்டறிந்து கைது செய்ய விசேடதிட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பிரான்ஸ்,டுபாய் , தமிழ்நாடுபோன்ற நாடுகளிலிருந்தவாறு இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது. இவ்வாறு தேடப்படும் அதிகமான குற்றவாளிகள் பிரான்ஸிலேயே பதுங்கி இருந்து தமது நடவடிக்கைகளைமுன்னெடுத்து வருவதாகவும் சிறப்பு தூது குழு மூலம் பிரான்ஸ் அரசுக்கு இது இவர்கள் தொடர்பாகஅறிக்கைகளை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையிலும் இலங்கையில் பல பெரும் குற்றங்களுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் பிரான்ஸ்நீதிமன்றால் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது.

ஆறுமாத ஆட்சி: மறக்கப்பட்ட வாக்குறுதிகள்! மீண்டுமொரு கிளர்ச்சியா!

திரு அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரால் அளிக்கப்பட பல முக்கியமான வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளன. இந்த ஆறுமாத ஆட்சிக் காலத்தில் வாக்குறுதிகள் மீறப்பட்ட விவகாரங்களும், பொருளாதார,...