Read More

spot_img

பாரிஸ் கபே , பேக்கரி உணவக தொழில் தொடர்பான சில இரகசியங்கள்!

நீங்கள் சரியான வாய்ப்புகளை கண்டறிந்து, உள்ளூர் சந்தையின் தேவைகளை நிவர்த்தி செய்தால், பாரிஸில்ஒரு சிறு வணிகத்தைத் தொடங்குவது ஒரு நம்பிக்கைக்குரிய முயற்சியாக இருக்கும். பாரிஸில்வெற்றிபெறக்கூடிய சில ஒரு வணிக யோசனை

கஃபே அல்லது பேக்கரி ஒன்றை பாரிசில் தொடங்க விரும்பும் தமிழர்கள் இந்த பாரிஸ் முதலாளி சொல்லும் சில உத்திகளை மனதில் வையுங்கள்.

பிரெஞ்ச் மக்கள்  கோப்பி மற்றும் பேஸ்ட்ரிகளை அதிகம் விரும்புகிறார்கள். ஒருஅழகான கஃபே அல்லது பேக்கரியைத் திறப்பது லாபகரமான முயற்சியாக இருக்கலாம், குறிப்பாக நீங்கள்உயர்தர, தனித்துவமான உங்கள் பொருட்கள் சேவைகளில் கவனம் செலுத்தினால் இன்னும் நன்றாகஉழைக்கும் வாய்ப்பும் கிடைக்கும் , 

அங்கே முக்கியமான விசயமே கடையை திறப்பது அல்ல,ஏற்கனவே பல கடைகள் இருக்கின்றன.சேவைகள்/பொருட்கள் ஒன்றாக இருந்தாலும் அவற்றின் தரம் கூட கிட்டத்தட்ட ஒன்றாக இருந்தாலும் உங்களின்கடையில் நீங்கள் அவர்களுக்கு அவற்றை அளிக்கும் சேவையின் தரத்தை அதிகரிப்பதன் மூலம் Brand கட்டியெழுப்ப முடியும்.

இதற்காக நீங்கள் சில முயற்சிகளை மேற்கொள்ளலாம்.. உதாரணமாக பாரம்பரிய பாஸ்ரி வகைகளைகண்டறிந்து அவற்றை மீண்டும் பாரம்பரிய தயாரிப்பு முறைகளில் வழங்கலாம். பாரிசியன்கள் விரும்புவார்கள்.

ஒரு Theme முறை ஊடாக உங்கள் கடைக்கு ஒரு பாரிசியர்கள் விரும்பும் வடிவத்தை கொடுக்கலாம்.

allergen-free pastries. Gluten-free, vegan, and low-sugar என வித்தியாசமான நிறைய வகைகளில்தேர்வுகளை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம்.

பருவகாலங்களுக்கு ஏற்ற மெனுக்களை சிறப்பு கழிவாக வழங்கலாம் அல்லது சிறுது இலவச சாம்பிளாககொடுக்கலாம்.

புத்தகங்கள்,Art Paintings,பூக்கள் என்பவற்றை சேர்த்து நேர்த்தியாக விக்கலாம்..

பின்னணியில் சிறிய இசைகளை பாட விடலாம்.

Subscription Boxes போன்ற சில முறைகளை கொண்டு வருவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தங்கள்கடையை திரும்ப திரும்ப வர வைக்க முடியும்..

அவர்கள் உங்கள் கடையில் இருந்து கோப்பி குடிப்பது ஏதோ அவர்களுக்கு சொர்க்கத்தில் இருப்பது போன்றஉணர்வை கொடுக்க வேண்டும்.

தொழில் வெற்றி என்பது மக்கள் உணர்வுகளை உங்கள பக்கம் திருப்புவதுதான்.காசை நினைத்தீர்கள் என்றால் மக்களை ஒரு கட்டத்தில் தவற விட்டுவிடுவீர்கள்,மக்கள் போனால்,தொழில் இல்லை.ஆகவே தொழில் மட்டும் கவனம் வையுங்கள்,காசு தானாக உங்களை தேடி வரும்.அப்படி வருவதே நிலைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img